உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 01, 2011

வாமுக : மெமரி கார்டுகள்

டிஜிட்டல் கேமரா அல்லது வீடியோ கேமரா வாங்கினால் கூடவே வாங்க வேண்டிய இன்னும் இரு ஐட்டங்கள் கேமரா கேஸ்(Case) மற்றும் மெமரி கார்டு (Memory card). உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த மெமரி கார்டில் தான் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும். பின்பு அவை உங்கள் கணிணிக்கு கடத்தப்படும். எனவே நல்ல தரமான மெமரி கார்டை வாங்குவது மிக அவசியமாகிறது.மெமரி கார்டு வாங்குமுன் கவனிக்க இங்கே ஐந்து குறிப்புகள்.

1.மெமரி கார்டு Type:
உங்கள் கேமரா எந்த விதமான மெமரி கார்டை சப்போர்ட்செய்கிறது என அறிதல் மிக அவசியம்.கேமராவில் மெமரிகார்டை போடும் ஸ்லாட்டோ அல்லது கேமராவோடு வரும் கையேடோ இதை தெரிவிக்கும்.

SD கார்டுகள் எனப்படும் Secure Digital கார்டுகள் மிகப்பிரபலமானவை.எனது கனான் டிஜிட்டல் கேமராவும் சாம்சங் கேம்கார்டரும் SD கார்டுகளையே சப்போர்ட் செய்கின்றன.பெரும்பாலான மடிக்கணிணிகளும் SD கார்டுகளை சப்போர்ட் செய்கின்றன. இதனால் படங்களை/வீடியோக்களை கணிணிக்கு கடத்துதல் மிக எளிதாகின்றது.
SD கார்டுகளின் அதிக பட்ச அளவு 2GB (Filesystem:FAT).

SD கார்டுகளில் 2GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDHC அல்லது Secure Digital High Capacity கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:FAT32).

SD கார்டுகளில் 32GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDXC அல்லது Secure Digital eXtended Capacity கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:exFAT).



miniSD/microSD கார்டுகள் எனப்படும் Mini Secure Digital கார்டுகள்,Micro Secure Digital கார்டுகள் SD கார்டுகளைவிட சிறிதாக இருப்பதால் செல்போன்கள்,சிறிய கேமராக்கள்,MP3 பிளயர்களில் பயன்படுத்தப்படுகின்றன.


CF எனப்படும் Compact Flash கார்டுகள் அதிக அளவு மெமரி தேவைப்படும் SLR போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன.இதில் Type 1,Type 2 என இரு வகைகள் உண்டு.Type 1 மிக சன்னமானவை.Type 2 ஸ்லாட் கொண்ட கேமரக்களால் Type 1-ஐயும் ஏற்றுக்கொள்ளமுடியும்.Type 1 ஸ்லாட்கொண்ட கேமரக்களால் Type 2-ஐ ஏற்றுக்கொள்ளமுடியாது.அதிக பட்சமாக 128GB வரை அளவில்கிடைக்கின்றன.


MMc எனப்படும் MultiMedia கார்டுகள் SD கார்டுகளால் மறைந்து வருகின்றன. இவற்றில் SD கார்டு போல் locking tab இருப்பதில்லை.


Memory stick-க்குகள் சோனியால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் Memory stick Duo என சிறிய வகையும் உண்டு.


xD Picture Card-கள் Olympus மற்றும் Fujiகேமராக்களால் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய மெமரி கார்டுகள்.


2.Capacity
குறைந்த பட்சமாக 128MB யிலிருந்து 1GB,2GB,4GB,8GB,16GB,32GB,64GB என அதிக பட்சமாக 128GB வரை அளவில் கிடைக்கின்றன.அளவு கூடக் கூட விலையும் கூடுகின்றது.
உங்கள் 8 Mega Pixel கேமராவில் 1GB கார்டு இருந்தால் அதில் கிட்டத்தட்ட 400 படங்கள் பிடிக்கலாம்.
அல்லது அதே 1GB கார்டில் ஒரு மணி நேர 640 x 480 ரெசலூசன் வீடியோ படம் பிடிக்கலாம்.
அதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.

3.Speed Class Rating
SD கார்டுகளின் குறைந்தபட்ச வேகம் Class என அறியப்படுகிறது.

Class 2, 2 MB/s
Class 4, 4 MB/s
Class 6, 6 MB/s
Class 10, 10 MB/s

4.பிராண்டு
SanDisk மற்றும் Lexar பிராண்டு மெமரி கார்டுகள் நம்பகமானவையாக நம்பப்படுகின்றன.

5.சில டிப்ஸ்கள்
1.SD கார்டிலுள்ள locking tab அதில் எழுதுவதிலிருந்து, அதிலுள்ளவற்றை அழிப்பதிலிருந்து பாதுகாக்கின்றது.

2.உங்கள் மடிக்கணிணியில் மெமரி கார்டு ரீடர் இல்லாவிட்டால் தனியாக மெமரி கார்டு ரீடர் (Memory Card Reader)வாங்கி USB போர்ட்டில் இணைத்துக் கொள்ளலாம்.
3.தரமிக்க படங்களை அதிக அளவில் எடுத்து நீங்கள் தள்ளுபவராயின் கூடவே ஒரு பேக்கப் மெமரிகார்டும் வைத்திருப்பது நல்லது. சீக்கிரமே உங்கள் முதல் மெமரிகார்டு நிரம்பிவிடலாம்.
4.SD கார்டுகளை ஃபார்மேட் செய்ய SD Formatter என்ற மென்பொருளை பயன்படுத்துவது நல்லது.
Download the SD Formatter link below
http://www.sdcard.org/consumers/formatter_3


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



5 comments:

dsfs said...

சூப்பர் பதிவு சார். கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்கள் தளத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். என்ன பதிவையே கானோம் என்று நினைத்திருந்தேன். சந்தோசமாக இருக்கிறது புதிய பதிவிற்கு. நன்றி சார்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Thanks sir!

நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான ஒரு பதிவு ,தொடரட்டும் உங்கள் சேவை

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

ஸ்ரீராம். said...

//"அதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்"//

இந்த மாதிரி மெமரி கார்டுகளில் 675 முதல் 700 MB வரை மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. என்னதான் File allocations க்கு இடம் வேண்டுமென்றாலும் நீங்களோ, விளம்பரங்களிலோ சொல்வது போல அத்தனை பாடல்கள் போட முடியவில்லையே...ஏன்? பாடல்களின் சைஸ் என்று சொல்லாமல் 700 MB சிடியில் 695 MB வரை பதிவு செய்ய முடிவது போல மெமரி கார்டில் முடியவில்லையே ஏன்? ஏன்? ஏன்?!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்