சிவ்நகர் ஒன்று ஸ்நேப்டீல்.காம் நகராகின்றது
உத்தரபிரதேச கிராமமொன்று தனது பெயரை சிவ்நகரிலிருந்து, ஸ்நாப்டீல்.காம் நகரென பெயர்மாற்றம் செய்திருக்கின்றது. காரணம் snapdeal.com வழங்கிய குடிநீர் தீர்வு தான்.குடிநீர் பிரச்சனையில் கிடந்த இக்கிராமத்தில் குழாய்க்கிணறுகளை தோண்டி அவர்களுக்கு கைப்பம்புகளையும் இலவசமாய் அமைத்துக் கொடுத்திருக்கின்றது இந்நிறுவனம். நன்றிக்கடனாக பஞ்சாயத்து கூடி அவர்கள் தங்கள் ஊருக்கு புதுநாமம் இட்டுவிட்டார்கள்.இங்கு நாம் ஸ்நேப் டீல்.காம் தளத்தின் நிறுவனர் குணால் பாஹலை பாராட்டியே ஆகவேண்டும்.உண்ட கையால் காக்கை கூட விரட்டாதவர்கள் மத்தியில் இவர்களெல்லாம் எவ்வளவோ மேல்.
சம்பந்தமில்லாத இன்னொரு சேதி
இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. பல் இருக்குது பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கென்ன என்கின்றீர்களா?
அம்மா தயவில்
இலவச லேப்டாப்புகள் தமிழகமெங்கும் பள்ளிகளில் வரப்போகின்றது.இது எந்த மாதிரி புரட்சியை உண்டுபண்ணபோகுதோ தெரியவில்லை முந்தைய இலவச டிவி போலல்ல இது.குத்துக்கல்லாட்டம் ஒரு மூலையில் வைத்துக்கொள்ள. இதனால் இண்டர்நெட் இணைய தேவைகள் அதிகமாகும்,ஆக்சசரீஸ்கள் நிறைய போகும்,டிஜிட்டல் காமரா,ஐபாட் போன்ற கணிணி சார் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சக்கை போடு போடும், இணையத்தின் நன்மை தீமைகள் இன்னும் வேகமாக தமிழகமெங்கும் பரவும், சைபர் கிரைம்ஸ் விர்ரென எகிறும். எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு ”பேஸ்புக் ஜமால் இப்ராகிம்” என பெயர் வைத்தாராம். இந்த மாதிரியான தீவிர ரசிகர்கள் நம்மூரிலும்தோன்றுவார்கள்.
இனிப்பான கிரேசியிலும் கிரேசி செய்தி:
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் கூகிளின் அமேசிங் சேவை துவங்கியிருக்கின்றது.கொஞ்சம் தத்தக்கு பித்தக்குவாக இருந்தாலும் அற்புதமான ஆரம்பம்.மிக முக்கியமான மைல் கல்லை இணையத்தமிழ் எட்டியிருக்கின்றது எனச் சொல்லலாம். நன்றி via ஜிஎஸ்ஆர்
http://translate.google.com/
கேள்வி: வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க மத்திய அரசின் இணையதளம் ஒன்று உள்ளதாமே? அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் Recruiting agent-ன் நிலையை தெரிந்துகொள்ளலாம்
http://www.poeonline.gov.in/
Download this post as PDF
5 comments:
பகிர்வுக்கு நன்றிகள் சகோ
பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்கய்யா...
உண்மைலே இனிப்பான செய்திதான் ... தகவலுக்கு நன்றி சார்
snapdeal நிறுவனத்திற்கு நல்ல விளம்பரம். சுவையான செய்திகளை பதிவு செய்ததிற்கு நன்றி.
உண்மையில் இது இனிப்பான செய்தி தான்
Post a Comment