இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.அப்படி பார்க்கப்போனால் உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது.இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.
நமக்கு இடம் ஆறாவது வரும் Indian National reserves: $279,422,000,000. இது போக சுவிஸ் வங்கிகளில் தேங்கி இருக்கும் இந்தியர்களின் பணங்கள் ஏறக்குறைய 280 லட்சம் கோடி (280,00,000,000,0000) இந்திய ரூபாய்கள். பெரும்பாலும் கறுப்புப்பணங்கள் தாம்.இதை வைத்து மட்டும் 30 ஆண்டுகளுக்கு வரிகளே இல்லாத பட்ஜெட்டை இந்தியாவில் தாக்கல் செய்யலாம்.60 கோடி வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கலாம். எல்லா கிராமங்களிலிருந்தும் டெல்லிக்கு நான்குவழி சாலைகள் போடலாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் மாதம் 2000 ரூபாயென 60 வருடங்களுக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்க வழி செய்யலாம்.உலக வங்கியும் IMF-ம் கடன் தரவேண்டாம் ஒரு வெளிநாட்டு முதலீடும் நமக்கு தேவை இல்லை.இப்படி செல்வச் செழிப்பாய் இருக்க வேண்டிய இந்தியா, தன் குடும்பம், தன் வாரிசுக்கென கோடிக்கோடியாய் பணத்தை அள்ளி எங்கேயோ உனக்கும் பயனில்லாமல் ஊருக்கும் பயனில்லாமல் தேக்கி வைத்திருக்கிற பாழாப்போன அரசியல்வாதிகளாலும் செல்வந்தர்களாலும் மோசம் போயிருக்கின்றது.
இதுமட்டுமா நாட்டிலுள்ள பல ஸ்ரீகளின், பாபாக்களின், சுவாமிஜிக்களின், போதகர்களின் இரகசிய அறைகளில் இருக்கும் பணக்கட்டுகள், தங்கக்கட்டிகள் எல்லாம் இன்னும் கோடிக் கோடி பெருமானம் வரும்.யாருக்கும் பயனின்றி சேர்த்தார் நீத்தார் பின் ஏதோ சில திருடர்கள் திருடிப்போய் மீண்டும் சுவிசில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.
இன்னும் அதிஷ்டமாக நம்முன்னோர்கள் முன்பு சேர்த்துவைத்திருந்த பொக்கிஷங்களும் இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் தோண்ட தோண்ட தங்கக் குடங்களும் வைரங்களும் வைடூரியங்களும் எடுக்க்ப்படுகின்றன. மொத்த ஆறு அறைகளில் மூன்று அறைகளில் மட்டும் 400 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள். ஆறு அறைகளையும் திறந்து மதிப்பிட்டால் 1000 கோடியையும் தாண்டும் என்கின்றார்கள்.யார் கொத்திக்கொண்டு போவார்களோ?
இந்திய மாலுமிகளை மீட்க பாகிஸ்தானிய படை வரவேண்டியிருக்கின்றது. இந்திய மீனவர்களை சாகடி அடிக்கிறான் வளரும் வல்லரசுக்கு கேட்க நாதியில்லை. கடமையை விட்டு விட்டு பணம் பணம் என்று அலைகின்றதே இந்தியா. மனிதனே! அதிகமாய்ப்போனால் நூறு ஆண்டுகள் தான் வாழ்வாய். எத்தனை கோடிகள் தான்வேண்டும் உனக்கு?
தள அறிமுகம்
தமிழ் இசைப் பாடல்களை கேட்க ஆர்ப்பாட்டமில்லாத அருமையான எளிமையான ஒரு தளம்
http://www.paadal.com
எனது சேகரிப்புக்காக
“நெஞ்சை அள்ளும் நெல்லை,தூத்துக்குடி சம்மர் டூர்” - Nellai Tuticorin Summer Tour Guide
Download this post as PDF
6 comments:
அட போங்க பாஸ்,
நம்மலால ஏரிக்கோடியில கட்டின குடிசைய மாத்தி கட்ட வழியக் காணோம்.
தினசரி செய்தித்தாள பாத்தா வயிரெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. எதுக்கெடுத்தாலும் கோடி கோடி-ன்னு சொல்லிச்சொல்லியே நம்மல கொல்றாய்ங்க.
பாஸ்,
அந்த கருப்பு பணத்த அள்ளிக்கிட்டு வந்து வரியில்லாத பட்ஜெட்டெல்லாம் ஒன்னும் போட வேணாம். இந்தியா வெவசாய நாடு , வெவசாய நாடு-ன்னு சொல்லிக்கிறாய்ங்களே. அந்த வெவசாயம் செழிக்க எதுனா வழி செய்யச் சொல்லுங்களேன். ப்ளீஸ்!
dear pkp,
you did a great job,keep it up
yes ramesh
வணக்கம் தங்களின் பதிவை படித்தேன் உணவை உண்ணக்கூடிய மனிதனுக்கு உன்ன உணவில்லாமல் மரணத்தின் முன் போராடி இந்த உலகத்தில் எத்தனையோ பேர் தினம் தினம் மடிந்து கொண்டு இருக்கிறார்கள் உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாத அரசியல் வாதிகள் மக்களின் வரிப்பணத்தை வாரி கொண்டு போய் அயல் நாடுகளில் கொண்டு போய் கொட்டிவைத்து இருக்கிறார்கள் .கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் மாதா கோயில்களிலும் உன்ன உணவே கேக்காத கடவுளுக்கு முட்டாள் பக்தர்கள் காணிக்கையாக அள்ளிக்கொண்டு போய் கொட்டுகிறார்கள் உதரனத்திற்க்கு திருப்பதி எழுமலையான் .இதையே பயன் படுத்தி வஞ்சக குணமுள்ள நிர்வாகிகள் அரசியல் வாதிகளோடு சேர்ந்து கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் மக்களால் செலுத்தபட்ட பணம் எப்படி கோவிலுக்கு சொந்தமாகும் அதை அப்படியே பிரித்து இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டாமா? இப்போது கிடைத்து இருக்கும் இந்த நிதி மக்களால் கொடுக்கப்பட்டது தானே கோயிலுக்கு அதை கொஞ்சம் கொஞ்சமாக விற்று இல்லாத மக்களுக்கு கொடுத்தால் அந்த தெய்வம் நேரில் வந்து கேக்கவா போகிறது ?இலவசம் கொடுத்தால் போதுமா? ஒவ்வொரு ஆளுக்கும் ஏதாவது ஒரு வகையில் வேலை போட்டு கொடுக்க வேண்டாமா? இதிலிருந்து தெரிகிறதா? நமது நாட்டில் ஒரு நல்ல அரசியல் வாதி யாருமே இல்லை என்று. நேர்மையான தலைவர்கள் கூட யாருமே இல்லை ஏன் ஊழல் செய்து உள்ளே இருப்பவர்களை
பற்றி பேச எந்த தலைவரும் இல்லையே திகார் ஜெயில் இருப்பவர்களும் சரி வெளியே இருந்து கொண்டு அதைப்பற்றி பேசும் எதிர்கச்சி தலைவர்களும் சரி சுவிஸ் வங்கி கணக்கும் அவர்களின் பெயர்களும் வெளியில் வரும் போது பாருங்கள் அவர்களால் வஞ்சிக்க பட்டு காலம் காலமாய் கஷ்ட பாடுகளில் வாழ்ந்தது வரும் மக்கள் பொங்கி எழும் போது எகிப்பது ஹுசனி முபாரக் லிபியா கத்தாபி
துனீஸ் ஜெய்னுல் ஆபிதீன் ஏமான் அலி அப்தல்லாஹ் இவர்களின் நிலையைவிட இன்னும் மோசமாக இருக்கும் இங்குள்ள தலைவர்களின் நிலை ௧௪ VAYASU பெண்ணை கேவலப்படுத்தும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் இதையெல்லாம் முதலிலேயே கில்லி எரிய தெரியாத மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு திறமை இல்லையா? அல்லது இதில் அவர்களும் சம்மந்த பட்டு இருக்கிறார்களா?
இதெல்லாம் நமது நாட்டு பெரும் தகை பெண் ஜனாதி பதிக்கு அறவே தெரியாதா? நாட்டில் இப்படி பட்ட அநாகரிகமான செயல்கள் நடைபெறும் போது அதை தட்டி கேட்க்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டாமா?சிந்தித்து பாட்டு எழுதியவனை விட்டு பாட்டுக்கு வாய்
அசைத்து ஆடும் கலைகனுக்கு ஆரத்தி எடுக்கும் மக்களும் நடிக்க கற்று கொண்டு விட்டார்களா அல்லது அவர்களுளுக்கு பணத்தை கொடுத்து
அவர்களுக்காக இவர்கள் துபம் பாடுகிறார்களா? அல்லது ஏதாவது ஒரு வகையில் இவர்கள் மூலை சலவை செயப்படுகிரார்களா?இன்னும் இன்னும் இந்த மனதில் நிறைய தேங்கி கிடக்கிறது இதில் நான் எழுதியதில் மற்றவர்களின் மனது வேதனை படும் படி இருந்தால் தயவு செய்து என்னை எல்லோரும் மன்னிக்கவும்
ஹன்னா ஹசரேக்கு என் ஆதரவு
Dear PKP,
I've read the contents from the below blog, which is very similar(most the words are same). Please make a note...
http://avargal-unmaigal.blogspot.com/2011/06/blog-post_30.html
நம்ம ஊரில் புதையல் கிடைத்திருந்தால் (தமிழ் நாட்டில்), அடுத்த ஊழலுக்கு வழி வகுத்திருக்கும். ஏதோ அண்டை மாநிலங்கள் என்பதால் கொஞ்சம் ஆறுதல். (அப்படியே கிடைத்தாலும் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை).
Post a Comment