உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, December 30, 2008

எழுத்துருக்களின் பயணம்


கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இந்த எழுத்துருக்களின் பயணமே பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் போலிருக்கின்றது.

மேலும் சில தமிழின் பெருமைகள் இங்கே.நம் கலந்துரையாடல் தள நண்பர்களால் தொகுக்கப்பட்டவை.

ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி



பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

காஞ்சனா ஜெயதிலகர் புதினம் "நிழலில் ஒரு நிலவு" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kaanchana Jeyathilagar Nizhalil oru nilavu Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, December 18, 2008

கோப்புகளுக்கு பூட்டு

எங்கோ படித்தேன். அமெரிக்காவில் இப்போதைக்கு சூடாக விற்பனையாவது கைத்துப்பாக்கிகளும் பாதுகாப்பு பெட்டகங்களுமாம். புதிய அரசு வந்ததும் கைஆயுதங்களுக்கு தடைவிதிக்கப்படலாம் என்பதாலும் மேலும் பொருளாதாரம் போகும் போக்கில் தற்காப்பு குறித்த கவலையும் மக்களிடையே ஏற்ப்பட்டுள்ளதாலும் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க மண் முழுவதும் ஆங்காங்கே பழைய நெருக்கடிகளின் போது தாத்தா பாட்டிகளால் தோண்டி புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் டாலர் கத்தைகளின் இருப்பிடம் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாவதுண்டு. இப்போது அது இன்னொரு தலைமுறையின் முறை. 1933-ல் அதிபர் ரூஸ்வெல்ட்(FDR) எல்லா அமெரிக்கர்களிடமிருந்தும் இருந்த Gold Coin, Gold Bullion, மற்றும் Gold Certificates-களை வலுக்கட்டாயாமாக பிடுங்கி வைத்துக்கொண்டது நினைவிருக்கலாம். அதற்கு பதிலாக கொஞ்சம் டாலர்களை கொடுத்தாராம். இதனால் நிறைய தங்கங்கள் அச்சமயத்தில் ரகசியமாய் மண்ணில் புதைக்கப்பட்டன. இப்போதும் அரிசி டப்பாக்குள் போட்டு வைத்திருந்த நகைகளையும் ஏதோ டிடெக்டர் பயன்படுத்தி கொள்ளையர்கள் கண்டுபிடித்து விடுகின்றார்களாம். இதனால் Sentry Safe-கள் சிலருக்கும் Ziploc bag-கள் பலருக்கும் உதவலாம். Backyard-ல் அடக்கம். இந்த கால திவால் வங்கிகளுக்கு இந்தமாதிரியான கிளாசிக் தீர்வுகள் எவ்வளவோ பரவாயில்லை என தோன்றலாம்.

கணிணியிலும் ரகசிய கோப்புகள், முக்கிய கோப்புகள் என இன்றைக்கு நம் வீட்டு கணிணிகளில் "மறைத்தல்" தவிர்க்க முடியாதனவாகிவிட்டன. பிறர்கண்ணிலோ அல்லது நம் வீட்டு குழந்தைகள் கண்ணிலோ அது பட்டு எதேச்சையாக அழிக்கப்பட்டு விடக்கூடாது பாருங்கள். இப்படி உங்கள் கணிணியில் இருக்கும் ரகசிய முக்கிய கோப்புகளையும் ஃபோல்டர்களையும் பிறர்கண்ணில் படாமல் சேர்த்துவைக்க System Vault என்ற இந்த சிறு இலவச மென்பொருள் உதவுகின்றது. குறிப்பிட்ட கடவுசொல்கொடுத்தால் மட்டுமே அந்த போல்டர் உங்கள் கண்ணுக்கு தெரியும். திறந்து பார்க்கலாம். பிற நேரங்களில் மறைந்தே இருக்கும்.

உங்களுடையது உங்களுடையதேயாகும். அதை Sentry Safe-ல் இட்டோ அல்லது System Vault -ல் இட்டோ பாதுகாப்பது நம் கடமை. ஆனால் ஒரு எச்சரிக்கை தப்பித்தவறியும் Sentry Safe-ஐ புதைத்த இடத்தையும் System Vault-ன் பாஸ்வேர்டையும் மறந்துவிடாதீங்க.

Download System Vault

http://www.computer-realm.net/software/systemvault/



உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.

உமா பாலகுமார் புதினம் "உயிர் தொட்ட உறவே!" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Uma Balakumar Uyir Thotta Urave Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, December 16, 2008

சில ஆவணப் படங்கள்

என்ன செய்வது விடுமுறை நாட்கள் நெருங்கிவிட்டதால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த மாதிரியான பதிவுகளே இட்டு ஒப்பேற்ற வேண்டியிருக்கின்றது. விடுமுறை என்றாலே அநேக பிரயாணங்கள் அலைச்சல்கள் வந்துவிடுகின்றனவே.

ஆங்கில டாக்குமென்டரிகளையெல்லாம் பார்க்கும் போது பொறாமையாய் இருக்கும். தமிழிலும் இது போன்ற தரமான ஆவணக் காணொளிகளை என்றைக்கு காண்போமோ வென்று. ஆங்கில திரைப்படங்களை மெனக்கெட்டு தமிழ் படுத்தும் பெரிசுகள் அறிவூட்டும் ஆவணப்படங்களை தமிழ்படுத்த முன் வருவதில்லை. அவை தங்க முட்டை போடுவதில்லையே. குறும்படங்கள் என்ற பெயரில் வெறும் குறும்சினிமாக்கள் மட்டும் வராமல் பல நல்ல தகவல்களையும் குறும்படமாக்கி வழங்கும் DFT-க்களும் BFT-க்களும் வரவேண்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.

சில தமிழ் டாக்குமென்டரிகள்
MGR - M.G.Ramachandran Documentay எம்.ஜி.ஆரை நினைவு கூர்தல் ...
Sivaji Ganesan Documentary சிவாஜி கணேசனை நினைவு கூர்தல் ...
Eelam Documentary விடுதலைத் தீப்பொறி

சில தமிழ் திரைப்படங்களில் வரலாறுகள்
Agathiyar அகத்தியர்
Kaaraikal Ammaiyaar காரைக்கால் அம்மையார்
Sri Raghavendra ஸ்ரீ ராகவேந்திரா
Thiruvarutchelver திருவருட்செல்வர்
Mahakavi Kalidass மகாகவி காளிதாஸ்
Veerapandiya Kattabomman வீரபாண்டிய கட்டப்பொம்மன்
Kapalottiya Thamizan கப்பலோட்டிய தமிழன்

சில தமிழ் இதிகாச காணொளிகள்
Ramayanam இராமாயணம்
Mahabharatham மகாபாரதம்
Lava Kusa லவ குசா
Thiruvilaiyaadal திருவிளையாடல்

சில குறிப்பிடத்தக்கதான ஆங்கில காணொளிகள்
Mahatma Gandhi வரலாறு
Rabindranath Tagore
வரலாறு
Bruce lee வரலாறு
Alexander வரலாறு
Ganesha
Krishna-Hindi
Hanuman
North India Varanasi to the Himalayas
Himalaya with Michael palin
Kanchipuram - A Temple City
Yakshagana
Bharatanatyam
Alternative Medicine - The Evidence - Herbs
Aayurveda
Everything you need to know (The Brain)
Ancient Voices - The Mystery Of The Taj Mahal
Ancient Voices - Tracking The First Americans
Mysteries Of Asia - Secrets of the Great Wall
Mysteries Of Asia - Jewels in the Jungle

India Land of the Tiger
History of Britain
World War 1
Planet Earth
Understanding the Universe

கடைசியாக நம்ம டாப்பிக்...
The history of hacking

(இங்கே விட்டுப்போன ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான தமிழ் ஆவணப்படங்கள் வேறெதாவது இருந்தால் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே)

மேலே பார்க்க ஏகத்துக்கும் ஆவணப்படங்கள் இருப்பதால் க்கு இன்றைக்கு விடுமுறை.


Email PostDownload this post as PDF

Sunday, December 14, 2008

பொது WiFi-க்களில்

கோடைகால இளவெயிலில் நீண்டதொரு தூண்டிலை வைத்துக்கொண்டு மீன்பிடி ஆர்வலர்கள் மணிக்கணக்கில் கரையோர திண்டுகளில் அமர்ந்து கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் என்ன பொழுதுபோக்கு இதிலென்ன மகிழ்ச்சி கிடைக்கின்றது என யோசித்ததுண்டு.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பக்கமோ அல்லது அப்பார்ட்மெண்டுகளின் பக்கமோ கோபால் கொஞ்ச நேரம் சும்மா இருக்க நேரம் கிடைத்தாலும் சும்மா இருக்கமாட்டான். தனது மடிக்கணிணியை திறந்து பக்கத்தில் ஏதாவது பாதுகாக்கப்படாத திறந்த வைஃபை(wifi) சிக்காதாவென தேடுவான். மன்ஹாட்டனில் தூண்டில் போட்டால் அவை எளிதாய் சிக்கும்.

இதெல்லாம் பழையகதை. இப்பொழுது அவன் கம்பெனியிலிருந்து ஒரு Sierra Wireless aircard கொடுத்திருக்கின்றார்கள். மடிக்கணிணியின் ExpressCard slot-ல் அதைச் செருகிக்கொண்டால் நடுக்காட்டிலும் அவனுக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது. நான் இன்னும் ஸ்டார்பக்ஸ் காஃபிகடை, டீக்கடை, ஆங்காங்கே இருக்கும் துரித உணவுக்கடைகளின் இலவச வைஃபை-க்களையே நம்பியிருக்கின்றேன்.

எனினும் இந்த இலவச wifi-க்களில் அல்லது எங்காவது சிக்கும் பாதுகாக்கப்படாத திறந்த வைஃபைக்களை பயன்படுத்துவதிலுள்ள அபாயம் எனக்கு தெரியாமலில்லை. அப்பொழுது நாம் நமது முழு இணைய தகவல்தொடர்பையும் இது போன்ற ஏதோ ஒரு நபரின் இணைய இணைப்பு வழியாய் நடாத்துகின்றோம். அந்த நபரோ நமக்கு தெரியாமல் இடையில் ஒரு கருவியினை வைத்து நாம் நடாத்திய தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகளையெல்லாம் இரகசியமாய் பதிவு செய்துவைத்துக் கொண்டு பின்பு பொறுமையாக அமர்ந்து அப்பொட்டலங்களை பிரித்துபார்த்தால் என் கிரெடிட்கார்டு தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகள் அல்லது நான் அட்டாச் செய்து அனுப்பிய ரகசிய ஆவணங்கள் எல்லாம் அம்பேல் ஆகிப் போயிருக்கும்.

இதனாலேயே பொது வைஃபைக்களில் என் மடிக்கணிணியையோ ஐபோனையோ இணைக்கும் போது மேலோட்டமாக டைம்பாஸ் இணைய உலா வருவதுண்டு.ஜிமெயிலில் கூட நுழைய விரும்புவதில்லை.http வழியாக செல்லும் போது ஜிமெயிலின் பாஸ்வேர்ட் மட்டுமே என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டாலும் உள்தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பது நினைவிருக்கட்டும். http-க்கு பதிலாக https ஜிமெயிலில் பயன்படுத்தினால் உங்கள் முழு ஜிமெயில் சேவையும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

இதுபோன்ற பொது வைஃபைக்களிலும் இணைந்து நிம்மதியாக இணைய உலா வர Hotspot Shield அல்லது AlwaysVPN போன்ற மென்பொருள்களை பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகள் முழமையாக சங்கேதமொழியில் (VPN encryption) நடப்பதால் இடையில் எதாவது மோப்பமென்பொருட்கள் யாராவது வைத்து இருந்தாலும் அவற்றால் புரிந்துகொள்ள இயலாது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இவற்றின் தேவை இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுஇடங்களில் இப்பாதுகாப்பு மென்னுறைகளை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.

இன்னொரு சின்ன லாபம்:
நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் Hotspot Shield வழி நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்களுக்கு அமெரிக்க ஐபி விலாசம் கொடுக்கப்படுவதால் உங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட தளங்கள் திறந்துகொள்வதோடு அரபுநாடுகளிலிருந்து இது வழியாக தடைசெய்யப்பட்ட VOIP அழைப்புகளும் செய்யலாம் என கேள்விப்பட்டேன்.

ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை:
இம்மென்பொருள்கள் உங்கள் தகவல் பொட்டலங்களின் போக்குவரத்துகளை Hotspot Shield அல்லது AlwaysVPN நிறுவன செர்வர்களின் வழி செலுத்துவதால் நீங்கள் இந்நிறுவனங்களில் முழு நம்பிக்கை கொண்டிருக்கவேண்டுமாக்கும்.


என்னால் முடியும் என்பது
தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது
அகம்பாவம்

சித்ராபாலாவின் "யாரோ யாரோடி" புதினம் இங்கே தமிழில்.Chithra Bala "Yaaro Yaaroodi" novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, December 12, 2008

தமிழ் எப்.எம்-கள்

நமது முந்தைய பதிவான "அபிமான ஐபோன் பயன்பாடுகள்" எனும் பதிவில் நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்கள் Flycast எனும் ஒரு ஐபோன் பயன்பாட்டை பின்னூட்டம் வழியாக அறிமுகப்படுத்தியிருந்தார். தமிழ் இசை கேட்க அது ஒரு அருமையான பயன்பாடாக அமைந்தது. நன்றி ஸ்ரீனிவாசன் சார். ஐபோன் வைத்திருக்கும் நண்பர்கள் Flycast இலவச app-ஐ நிறுவி அதில் SHOUTcast-தேடலில் tamil என்ற கீவார்த்தையால் தேடவும். அநேக ஆன்லைன் தமிழ் எப்.எம்-கள் சிக்குகின்றன.

SHOUTcast இணையதளத்தில் அநேக தமிழ் எப்.எம்-கள் காணக் கிடக்கின்றன. அந்த எல்லா தமிழ் எப்.எம்-களையும் நீங்கள் SHOUTcast Radio Toolbar-ஐ உங்கள் கணிணியில் நிறுவுவதன் மூலமோ அல்லது Winamp-ஐ உங்கள் கணிணியில் நிறுவுவதன் மூலமாகவோ கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான்-ஸ்டாப் தமிழ் இசை உங்கள் கணிணியில்.


உதாரணத்துக்கு
IBC Tamil
TSRLIVE
Radio NRI
Mudhal Radio
IsaiFM
Sooriyan FM
Express tamil online radio
Tamilaruvi FM
Vettri FM http://www.vettrifm.com/radio.html
Tamilmaalai
Uthayam FM
Nila FM
என இன்னும் அநேக எப்.எம்கள் அதில் இருக்கின்றன.
தமிழ் மாலை FM-யில் மட்டுமே புதியபாடல்களுக்கு, பழையபாடல்களுக்கு, இடைக்கால பாடல்களுக்கென தனித்தனி எப்.எம்-களாக வைத்துள்ளார்கள்.

நீங்களும் ஆர்வமிருந்தால் இதுபோன்றதொரு இன்டர்நெட் ஆன்லைன் ரேடியோவை தொடங்க கீழ்கண்ட சுட்டியில் வழி சொல்கின்றார்கள்.
http://www.shoutcast.com/download

எனக்கு தெரிந்த பிற தமிழ் FM வெப்தளங்கள்


சென்னையிலிருந்து நேரடியாக கலக்கும் ஷ்யாம் எப்.எம் கேட்க கீழே சொடுக்கலாம்.
http://radiotime.com/genre/c_161/Tamil.aspx


சென்னை ஆகா..எப்.எம் கேட்க அநியாயத்துக்கும் Login செய்யவேண்டும்.
http://www.aahaafm.com


சென்னை சூரியன் எப்.எம் இன்னும் Under construction-ஆம்.
http://sunnetwork.tv/sfm/chennai/index.asp

நீங்களும் உங்கள் அபிமான தமிழ் எப்.எம்-களை அறிமுகப்படுத்தலாமே.


கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!

பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

மோகன் கிருட்டினமூர்த்தியின் கவிதை தொகுப்பு மென்புத்தகம் இங்கே தமிழில்.Mohan Krishnamurthy "Kavithai Thokuppu"in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, December 09, 2008

சின்னவன்

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கலியுகம் மொத்தம் 432,000 ஆண்டுகளாம். அதில் இதுவரைக்கும் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள். கலியுகத்திலேயே இன்னும் மிச்சம் எத்தினாயிரம் ஆண்டுகள் போக வேண்டி இருக்கின்றதுவென பாருங்கள்.

இதற்கு முந்தைய யுகமான துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.

அதற்கும் முன்பு இருந்த திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.

அதற்கும் முன்பு முதலாவதாக இருந்த யுகம் தான் சத்யுகம்.அதில் மொத்தம் 1,728,000 ஆண்டுகள் இருந்தனவென்கின்றார்கள். அக்காலம் தான் பூமியின் பொற்காலமாம். ஒவ்வொருவரும் 100,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்களாமே.

இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi). ஒரு Chaturyugi = மேலே எல்லாம் சேர்த்து மொத்தமாய் 4,320,000 ஆண்டுகள்.

கலியுகம் முடிந்ததும் என்னவாகும்? மீண்டும் பொற்காலமான சத்யுகம் தொடங்கி இன்னொரு Chaturyugi ஆரம்பிக்கும். இப்படியாக மொத்தம் 71 Chaturyugi உண்டாம். இந்த 71-ம் சேர்ந்தது ஒரு Manvantara( Manu) ஆகின்றது.நாம் இப்போது இருப்பது 28-ஆவது Chaturyugi-ல், 7-ஆவது Manu-வான Vaivasvat Manu-ல்.

பிரம்மாவின் ஒருநாள் ஒரு கல்பா (Kalpa) எனப்படுகின்றது. இது 14-Manuக்களை கொண்டது. அதாவது மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள். இந்த ஒரு நாள் முடிந்து பிரம்மா தூங்கப்போகும் போது மொத்த உலகமும் அழிந்து மறுநாள் அவன் விழிக்கும் போது புது உலகம் உருவாகும் என்பது நம்பிக்கை. ஆக வேதங்களின் படி இன்றைய உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 4,294,080,000 ஆண்டுகள். நாம் இருக்கும் இந்த 2008-ம் வருடம் வேதகாலண்டரின் படி 1,955,885,109-ஆவது வருடம்.

யூனிக்சில் cal என ஒரு கட்டளை உண்டு. இது நாட்காட்டியை உங்களுக்கு காட்டுவதற்காக அமைந்த கட்டளை. உங்கள் லினக்சின் $ prompt-ல் cal sep 1752 என நீங்கள் தட்டினால் 1752-ஆம் ஆண்டிற்கான செப்டம்பர் மாத காலண்டரை அது காட்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் 2-ம் தியதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் தியதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் simply gone. ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் பிரிட்டீஷார் தங்கள் காலண்டர்முறையை பழைய ஜூலியன் நாட்காட்டிமுறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிமுறைக்கு மாற்றினார்கள். அதனால் இப்படி சின்னதாக ஒரு அட்ஜஸ்ட்மண்ட் செய்யவேண்டி வந்தது.அந்த 1752-ம் வருட காலண்டரை

நீங்கள் கீழ் கண்ட சுட்டியிலும் பார்க்கலாம்.
http://www.timeanddate.com/calendar/?year=1752&country=1

இந்த உலகத்தின் ஆயுட்காலமாக மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள் இருக்க நானோ அந்த 11 நாட்களை பற்றியே கவலைக்கொண்டிருக்கின்றேன். எவ்வளவு சின்னவன் நான்.


முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

எஸ்.சம்பத் "இடைவெளி" நாவல் மென்புத்தகம் இங்கே தமிழில்.S.Sampath "Idaiveli" in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, December 06, 2008

நடனமாடும் சிலைடுஷோ

Abercrombie and fitch ஸ்டோரில் நுழைந்ததும் ஒலிக்கும் மயக்கும் techno இசைகள் அங்கு மங்கிய ஒளியில் மனதை நடனமாட வைக்கும். வெற்றுடம்பை காட்டி நிற்கும் கறுப்பு வெள்ளை போஸ்டர்களுக்கு ஒருநாளும் கூச்சமில்லை. துணி ஷாப்பிங் வந்ததுபோல தெரியாது. போத்தலுக்குப் பதிலாய் கையில் பொத்தலுள்ள ஜீன்ஸ் பேண்ட்கள்.வெளியே வந்தால் ஏதோ ஒரு பப்பைவிட்டு வெளிவந்தது போலிருக்கும். Sky is falling என மீடியாக்கள் கத்திக் கொண்டிருக்க மால்கள் நிரம்பியிருக்கின்றன. இத்தனைக்கும் அமெரிக்காவெங்கும் ஏகப்பட்ட ஸ்டோர்களை மூடிக் கொண்டிருக்கின்றார்களாம் ஒரு பெரிய லிஸ்டே மெயிலில் வந்தது. கிப்ட்கார்டுகளை வாங்காதிருக்கவும் அப்படியே ஏதாவது கிப்ட்கார்டுகள் இருந்தால் உடனே போய் பயன்படுத்திவிடுவதும் உத்தமம் என்கின்றார்கள். நாளைக்கே அந்த ஸ்டோர் இருக்குமா என்பது சந்தேகமே.

இதற்கிடையே நவீன நாஸ்ட்ராடமஸ் என நியூயார்க் போஸ்ட்டால் பட்டமிடப்பட்ட ஜெரால்ட் செலென்டேயின் (Gerald Celente) ஜோசியம் சரியானால் 2012-ல் அமெரிக்கா உலகின் முதல் undeveloped nation ஆகும், உணவுப் பற்றாக்குறையாலும் அதிக வரியாலும் பல புரட்சிகளும் போராட்டங்களும் நடக்கும்,பண்டிகைகளுக்கு பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வதை விட உணவு கொடுத்தாலே போதுமென்ற நிலை வரும் என கணித்திருக்கிறார்.இவர் இதற்கு முன் டாட் காம் குமிழ் உடைவு, இப்போதிருக்கும் சப்பிரைம் பிரச்சனைகள், ரஷ்யாவின் பிளவு இதையெல்லாம் சரியாக முன் கணித்திருக்கிறாராம். Trends Research எனும் நிறுவனத்தை நடத்திவரும் இவரின் வீடியோ பேட்டியை நீங்கள் இங்கே காணலாம்.
http://www.youtube.com/watch?v=46MEqEgdLTg

நான் சொல்ல வந்ததே வேறு.
கொடுத்த இசைக்கு ஏற்றவாறு சிலைடுஷோக்களில் படங்களை நடனமாட வைத்தல் மிகவும் கடினமான காரியம்.லூசுப்பெண்ணே பாடலுக்கு திரிசாவின் படங்களை நடனமாட வைத்திருந்த ஒரு நபரின் ஸ்லைடுஷோ வீடியோ காட்சியை பார்த்தேன். பாடலின் இசைக்கேற்ப அந்த பட சிலைடுகள் நடனமாட உயிர்கொடுத்திருந்தார். ரசிக்கும் படியாக இருந்தது.கீழே அந்த வீடியோவுக்கான சுட்டி.
http://www.youtube.com/watch?v=wOWrEmd5ihQ

இது போல நீங்களும் உருவாக்கவிருக்கும் சிலைடுஷோவையும் அதன் இசைக்கேற்ப நடனமாட வைக்க http://animoto.com எனும் தளம் உதவி செய்கின்றது. படங்களையும் பாடலையும் நீங்கள் ஏற்றிவிட்டால் போதும்.அந்த இணையதளம் உங்கள் பாடலின் இசைக்கேற்ப அந்த ஸ்லைடுசோவை நளினமாக துள்ளி நடனமாடவிட்டு காண்பிப்பது மிகவும் அருமை.என்னமோ Cinematic Artificial Intelligence எனும் நுட்பம் பயன்படுத்துகின்றார்களாம். 30 நொடிகள்தாம் இலவசம்.

இதுபோன்ற எஃபக்டை எளிதாக ஸ்லைடுஷோக்களுக்கு வழங்க வேறு ஏதாவது மென்பொருள்கள் இருக்கின்றதா என தெரியவில்லை.நல்ல ஹிட்டாகும்.



சுவர்க்கத்தில் என்னைச்
சிறை வைத்தாலும்,
நான் அதன் பளிங்குச் சுவர்களைத்
தாண்டி வெளியேறவே
விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே, தேவை - டிரைடன
ருக்மணி ஜெயராமன் "மகிழ்ச்சியான எதிர்காலம் என்கையில்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Rukmani Jeyaraman-Mahilchiyaana Ethirkaalam Enkaiyil in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, December 04, 2008

நன்றி தெரிவித்தல்

நன்றி தெரிவித்தல் தின விடுமுறைகளில் இருந்தேன். இணையப்பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்கவில்லை. ஒரே தினத்தில் என்னவெல்லாம் நடந்துமுடிந்து விடுகின்றது பாருங்கள். புடாபெஸ்ட், ஹங்கேரியைச் சேர்ந்த ஒரு Emergency and Disaster Information Services தளம்.இவர்கள் உலகெங்கும் நடக்கும் அவசரநிலைகளை, இயற்கை சீற்றங்களை, பிற பாதிப்புகளை உடனுக்குடன் அலெர்ட் மேப்பில் இட்டு காட்டுகின்றார்கள்.RSS-ல் போட்டு வைத்துள்ளேன். இந்தியாவின் பெயரும் அடிக்கடி வந்துவிடுகின்றது. சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு தினமும் இறைவனின் நன்கொடைதான். அவனுக்கு நாம் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்.

நவம்பர் 31 வராமல் திடீரென டிசம்பர் 1 வந்ததும் தான் புரிந்தது ஆஹா வருசம் முடியப்போகின்றதே என்று.இந்த வருடமும் மின்னல் வேகத்தில் போய்விட்டது. இதுவரைக்கும் நம் வலைப்பதிவில் ஒருவிதமான Consistency-யை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.ஜூலை மாதம் அதிக பட்சமாக 18 பதிவுகளும் பெப்ரவரி மாதம் குறைந்த பட்சமாக 9 பதிவுகளும் இட்டிருந்தேன். "டேய் நீ ரொம்ப எழுதுகிறாய்" என்பது கோபாலின் கம்ளெயின்ட்.எச்சரிக்கையும் கூட. மின்னஞ்சல் செய்யும் நண்பர்களோ ஒரு நாளைக்கு ஒன்றாவது போடுங்கள் சார் என்கின்றார்கள்.Cruise control இதுவரை பயன்படுத்தியதில்லை.

எல்லாவற்றையும் சொல்லிவிடுகின்றாயே என்றால் "தொட்டணைத்தூறும்" வள்ளுவன் வாக்குதான் நினைவுக்கு வருகின்றது. இங்கு எழுதுவதால் இன்னும் அநேகம் கற்றிருக்கிறேன் என்பது தான் உண்மை.அநேக நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். ஆக ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.தொலைத்தது சிறிது தூக்கமும் சில தமிழ் சினிமாக்களும். 8PM to 8AM மின்னஞ்சல் பார்க்கக்கூடாது என்பது ஒரு Soft rule எனக்குள்ளே.

இந்த வருட மத்தியில் அதாவது ஜூன் இரண்டாம் தியதி 1000-த்தை எட்டிய நமது feed count கடந்த நவம்பர் 18-ல் 1505-ஐ முட்டியது. சராசரியாக தினமும் புதிதாக மூவர் நமது வலைப்பதிவை ரெகுலராக படிக்க ஏற்றுக்கொள்கின்றார்கள். இது என்னை பொறுத்தவரைக்கும் மிகப் பெரிய எண்.வரும் வருடம் கொஞ்சம் "ட்ரிம்" செய்யவேண்டும். இது தவிர RSS நுட்பத்தை பயன்படுத்தாமல் தினமும் நம் வலைப்பதிவுக்கு நேரடியாக வந்து படிக்கும் நண்பர்களும் அநேகம். நம் நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கு தவறாமல் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதாலேயே இது சாத்தியமாகிற்று என்பது துல்லியம்.வந்தவர்களை கவனிக்கத் திணறும் விருந்துபசரிப்பவர்களை பார்த்திருக்கின்றீர்களா? நான்.

நமது விக்கி களத்தில் புதிது புதிதாக முகங்கள். கேள்வி கேட்பதோடல்லாமல் ஆர்வமாய் பதிலும் அளிக்கின்றார்கள் நம் நண்பர்கள். ஒரு துறையையும் விட்டபாடில்லை.

இன்றைக்கு Knowledge is power.அதனால் தான் சந்திராயன் விட்ட நம்மை மதிக்கின்றார்கள். தகவல்கள் தேட உதவும் கூகிள் நம்பர் ஒன்.அணுகுண்டு நாடுகளுக்கு தனி கம்பளம்.தகுந்த நுட்பம் இருந்திருந்தால் மின்வெட்டு இருந்திருக்காது.தாய் மொழியிலேயே கற்றவர்களுக்கு சிகரங்கள் எளிதாகின்றன.இது நம் கண்கூடு.ஆனால் நானோ என் பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேசன் தேடுகின்றேன். திரைக்கும் சின்னத்திரைக்கும் நாம் கொடுத்த முக்கியத்துவத்தில் கால்பங்கு கல்விக்கு் கொடுத்திருந்தால் நம்மை எவனோ ஒருவன் துரத்த நாம் ஓடிக்கொண்டிருந்திருக்க மாட்டோம்.ஆனாலும் கல்விதான் இன்றைக்கு நம் பாரதத்தை தலை நிமிர வைத்திருக்கின்றது. எதற்கெடுத்தாலும் இஸ்ரேலியர்களை உதாரணமெடுக்கும் நாம் அவர்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் உணர்ந்ததில்லை. இத்துணூண்டு இஸ்ரேலில் ஆறு பல்கலைக்கழகங்கள் உலகின் டாப் ரேட்டட் பல்கலைக்கழகங்கள். ஆறு மில்லியன் இஸ்ரேலியர்களால் ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.10,000 பேருக்கு 109 என்ற விகிதத்தில் அறிவியல் ஆய்வு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதற்கான பலனையும் அவர்கள் காண்கின்றார்கள். எனக்கோ கிரிக்கெட் பார்க்கவேண்டும்.

நண்பர்களுக்கெல்லாம் என் நன்றிகள்.



ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும்
புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
-பைபிள்

மீனாக்குமார் "யாவருக்கும் திருக்குறள்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Meena Kumar Yaavarkkum Thirukkural in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, November 25, 2008

ஒன்றக்க ரண்டாக்க

வாங்கும் போது 160Gig ஹார்டிரைவ் உள்ள மடிக்கணினி என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். வாங்கி விண்டோசில் நுழைந்து பார்த்தால் அது 149Gig ஹார்டிரைவ் என்று காட்டியது.மிச்ச 11Gig எங்கே போனது? எல்லாம் மார்க்கெட்டிங் உத்தி தான். டெக்னிக்கலி 1MB=1,048,576 bytes. ஆனால் இந்த வியாபார பயில்வான்கள் அந்த கணக்கை 1MB=1,000,000 bytes என மாற்றி விட்டார்கள். இப்படித்தான் அந்த 11Gig காணாமல் போனது. 11Gig-க்கான காசு மட்டும் லபக்.

மொத்த 160Gig-கையும் C-டிரைவாக ஒரே பார்டிசியனில் போட்டு இருந்தார்கள். விலைமதிப்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இன்னொரு டிரைவில் போட்டு வைப்பது தான் உத்தமம் என்று நினைத்த கோபால் அந்த 160Gig-கையும் C மற்றும் D டிரைவாக பிளந்து கேட்டான். ஃபார்மேட் செய்யாமல், விண்டோசை திரும்ப நிறுவாமல், கோப்புகள் எதையும் இழக்காமல் அப்படியே கேக் வெட்டுவதுபோல ஒரு பார்டிசியனை இரண்டாக வெட்ட முன்பு Norton PartitionMagic-கை பயன்படுத்தியதுண்டு. இப்போது அதற்கு விலைகுறித்து விட்டதால் இலவச மென்பொருளான EASEUS Partition Manager Home Edition -ஐ பயன்படுத்தினோம். இது கொண்டு எளிதாக எல்லாவிதமான Partitioning வேலைகளையும் செய்யமுடிகின்றது. என்னோட ஃபேவரைட்டான Hide Partition கூட இதன் மூலம் செய்யலாம். கணிணி பார்டிசியன் ஒன்றை இரண்டாக்க விஸ்டாவின் Disk Management-ல் Shrink என்று ஒரு வசதி இருக்கின்றதாம். பெரும் தலைவலி என கேள்விப்பட்டேன்.

EASEUS Partition Manager Download Page
http://www.partition-tool.com/download.htm

Direct Download Link
http://www.easeus-software.com/download/epm.exe

இன்னொறு Partition Manager 9.0 Express
http://www.paragon-software.com/home/pm-express/download.html

லினக்சில் இதுமாதிரியான வேலைகளை செய்ய GParted அதாவது Gnome Partition Editor பயன்படுத்தலாம்.
http://gparted.sourceforge.net/



மனிதனின் மனசாட்சி
தெய்வத்தின் குரல்
-பைரன்

ரமணிச்சந்திரன் புதினம் "லாவண்யா" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Laavanyaa Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, November 22, 2008

அபிமான ஐபோன் பயன்பாடுகள்

ஐபோன்களின் ஊடுருவல் இந்தியாவில் கம்மி என கேள்விப் பட்டேன். ஆனால் இங்கு அது ஒரு "ஸ்டேன்டர்டு" போலாகிவிட்டது. வேலை இடத்திலும் சரி விமானப் பயணத்திலும் சரி அக்கம் பக்கம் எதிரே தூரே எல்லாம் ஐபோன் தான் தெரிகின்றது.அதிலும் அவ்வப்போது வெளியாகும் சில சூடான இலவச ஐபோன் பயன்பாடுகள் ஐபோன் பயனாளர்களை பரவசப்படுத்தி விடுவதுண்டு. Google mobile app சமீபத்திய உதாரணம் .கூகிளில் தேட வார்த்தைகளை நாம் டைப்ப வேண்டியதில்லை. வாயால் நாம் சொன்னாலே போதும்.அது நம் குரலை கேட்டு நமக்காக டைப்பிவிடுகின்றது.மேலும் சில உதாரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்.புதிதாக வந்திருக்கும் BlackBerry Storm டச் ஸ்கிரீனோடு வந்திருக்கின்றது.நல்ல போட்டியாக தெரிகின்றது.ஆனாலும் இது மாதிரியான பல நல்ல சுவாரஸ்யமான பயன்பாடுகளை அதில் நிறுவமுடியுமாவென தெரியவில்லை.

  • NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
  • Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
  • Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
  • NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
  • Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
  • Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
  • Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
  • Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
  • Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
  • Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
  • Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
  • Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
  • Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
  • Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
  • புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.




ஒரே சமயத்தில் இரண்டு
வேலை செய்ய
நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில்
ஒரே ஒரு வேலை
செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

சுஜாதா "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" மேடைநாடகம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Dr.Narendiranin Vinotha Vazakku Stage Drama in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, November 19, 2008

TNO

இணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது. சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை. மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.

TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.

பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்? அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.

கடந்த பதிவில் ஜிமெயில் பேக்கப் மென்பொருள் பற்றி எழுதியிருந்தேன். அதிலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்கொடுத்தால்தான் அதுவால் உங்கள் ஜிமெயிலை பேக்கப்செய்ய இயலும்.ஆனால் அது விசுவாசமாய் அதை உருவாக்கிய டெவலப்பருக்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை கொண்டுபோய் கொடுக்குமாவென்றால் தெரியாது. அது ஓப்பன் சோர்ஸ் இல்லாததால் அதை கணிப்பது மிகவும் கடினம். நமது நண்பர் "மாஸ்டர்" சுட்டிகாட்டியதால் இங்கு இதை தெரிவித்தேன்.அவர் போன்ற நாலும்தெரிந்த நண்பர்கள் இவ்வலைப்பூவுக்கு வந்து செலல், தங்கள் கருத்துக்களை சொலல் எனக்கெல்லாம் மிகவும் பெருமை. எளிதாய் இருக்கின்றதேவென்றுதான் அம்மென்பொருளை முன்கொணர்ந்தேன். ஒரு எச்சரிக்கையையும் செய்திருக்கலாம்.

Trust no one என நாமெல்லாரும் கெம்பீரமாய்ச் சொன்னாலும் சில விசயங்களில் நாம் சிலரை அல்லது சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. வாழ்க்கையே நம்பிக்கையில் தானே ஓடுகின்றது. கவிஞர் வைரமுத்துவின் "நம்பிக்கை" சின்னத்திரைப்பாடல் என்னோட ஃபேவரைட்.


நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

விடுதலை க.இராசேந்திரன் "ஈழப்பிரச்சனையில்" மென்புத்தகம் இங்கே தமிழில்.Viduthalai Ka.Rajeendran Eela Pirachanaiyil in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 17, 2008

ஜிமெயில் பேக்-அப்

இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?
பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here

http://www.gmail-backup.com




எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

எழிலன் "இருவரி முத்துக்கள்" கவிதைகள் நூல் பகுதி1 இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ezhilan Iruvari Muthukal Part1 kavithaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, November 14, 2008

மேற்கே உதிக்கும் சூரியன்

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை "மேற்கே உதிக்கும் சூரியனை" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள். "மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்." என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா "Great shift on Earth"என சொல்கின்றாராம்.

இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்.

தினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.

அதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா? அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.



மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

இராமலிங்க அடிகள் வரலாறு இங்கே தமிழில் மென் புத்தகமாக. History of Thiru Arutprakaasa Vallalar in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, November 11, 2008

டாரண்ட் உலகம்

This summary is not available. Please click here to view the post.


Email PostDownload this post as PDF

Saturday, November 08, 2008

ஆயில் கிரகணம்

பல சந்ததிகளுக்கொருமுறை வரும் முழு சூரியகிரகணத்தை பார்ப்பதுபோல அந்த கேஸ் ஸ்டேசனின் விலைப் பலகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். கேலன் பெட்ரோல் விலை $1.97 என்று எழுதி இருந்தது.இனிமேல் இந்த ரேஞ்சில் பெட்ரோல் விலையை என் வாழ்நாளில் நான் பார்ப்பேனோ தெரியாது.முடிந்தால் ஒரு போட்டோ எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கச் சொன்னேன் கோபாலிடம்.நம் குழந்தைகளிடம் காட்டலாமே என்றேன்.நிஜ உலகின் கேலன் பெட்ரோல் விலை $4.01 தான்.பொருளாதார மந்தம் காரணமாக இவாள் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். Dow,Sensex,Nikkei-காரர்கள் எல்லாம் அவர்களின் கரடி போக்கை விட்டு விட்டு மீண்டும் காளை ஓட்டத்துக்கு வரும் போது பெட்ரோல் விலையும் விண்ணை தொட்டுவிடும் என்கின்றேன் என்றேன். ஆனால் வழக்கம் போல கோபால் இந்த என் கருத்துக்கும் உடன்பட மறுத்துவிட்டான்.

முழு மின்சாரக் கார்களை இன்னும் ஏனோ ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே பார்க்கமுடிகின்றது. ஷோரூமில் என்றைக்கு பார்க்கப்போகின்றோமோ? சிக்காகோவிலிருந்து நியூயார்க்கு தரைவழி செல்லும் போது குறைந்தது மூன்று முறையாவது பெட்ரோல் டாங்கை நிரப்பவேண்டும்.இதுவே மின்சாரக்கார் எனில் ஐந்து முறை வழியில் காரை நிறுத்தி கார் பேட்டரியை சார்ஜ்செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்ய அரை மணிநேரம் என எடுத்துக்கொண்டாலும் இரண்டரைமணிநேரம் பயணத்தில் வேஸ்ட். இதுவே பெட்ரோல் காரானால் நிமிடத்தில் பில்அப் செய்துகொண்டு போய்கொண்டே இருக்கலாம். இந்த சிக்கலை போக்க Better Place எனும் நிறுவனம் தானியங்கி "பேட்டரி மாற்றுமிடங்களை" அங்காங்கே நிறுவும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் படி நூறு மைல்கள் நீங்கள் காரோட்டியவுடன் வழியில் வரும் அடுத்த "Battery switching station"-ல் போய் நீங்கள் எளிதாக உங்கள் வாகனத்தின் மின்கலத்தை மாற்றிகொள்ளலாம்.எல்லாமே தானியங்கி.கார் வாஷ் நிலையங்கள் போலவே நீங்கள் காரைவிட்டு இறங்கத் தேவையில்லை.அதுவே உங்கள் காரின் பேட்டரியை மாற்றித் தந்துவிடும்.இதனால் பேட்டரியை சார்ஜ் செய்யும் தொல்லை இல்லை.விலையும் மலிவு.சுற்று சூழலும் சுத்தமாகும் என்பது அவர்களின் கணக்கு.

ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் டென்மார்க்கில் இதுமாதிரியான Electric Recharge Grid-கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் சமீபத்தில் இணைந்துள்ளது. (அமெரிக்காவில் இன்னும் வரவில்லை. ) பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த பார்வை சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. எனினும் ஆயிலை மட்டுமே நம்பி வாழும் பல நாடுகளுக்கு இது நற்செய்தியில்லாததால் பல அரசியல் இடையூறுகளை இது கடக்கவேண்டி வரும்.



“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி

ரோடுசைட் ரோமியோ தமிழ் காமிக்ஸ் படக்கதை இங்கே தமிழில் மென் புத்தகமாக. Roadside Romeo Tamil Comics pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, November 06, 2008

வரும் யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்

நோட்புக்குகள் என அறியப்பட்ட மடிக்கணிணிகள் இப்போது இன்னும் எடைகுறைந்து / வசதிகள் குறைந்து / விலைகுறைந்து நெட்புக்குகள் (netbooks) எனும் பெயரில் சந்தைகளில் வந்திருக்கின்றன.சிலர் இதை மினி நோட்புக் என்கின்றனர். இன்னும் சிலரோ இதை UMPC அதாவது Ultra-Mobile PC என்கின்றனர். விலை 300 டாலர் அளவில் இருக்கும்.பள்ளி பொடிசுகளுக்கு் படம் வரைய புரோகிராம் போடவென வாங்கிக் கொடுக்கலாம். அதில் DVD டிரைவையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. 400 பக்க நோட்டுப்புத்தகம் ஒன்றை விரலிடுக்கில் தூக்கித்திரியும் கல்லூரி இளைஞன் போல தூக்கித் திரியலாம். சிலதுகளின் ஹார்டிரைவுகள் SSD அதாவது Solid-state டிரைவுகள் கொண்டிருக்கும். சராசரி ஹார்டிரைவ் போல் இதில் டிஸ்க், ஸ்பிண்டில், ஹெட் எல்லாம் இருக்காது. வெறும் சிப் தான் டிரைவ். அதனால் நம் ஆசாமிகளின் குலுக்கல்களுக்கெல்லாம் இந்த நெட்புக்குகள் தாக்கு பிடிக்கும். பூட்டிங்கும் வேகமாக இருக்கும் என்கின்றார்கள். கூடவே இந்த நெட்புக்குகள் அதிக நேரம் மின்னிணைப்பின்றி ஓடும் சக்தி வாய்ந்தனவாம். கண்டிப்பாக வயர்லெஸ் கார்டுவசதி கொண்டிருக்கும்.

பெரும்பாலான வேலைகளை ஆன்லைனிலேயே செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.அதனால் தான் அதன் பெயர் நெட்புக். வலைமேயலாம் மின்னஞ்சல் பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் ஆபீஸூக்கு பதில் ஆன்லைனிலேயே இருக்கும் இலவச Google Docs-ன் word processor அல்லது spreadsheet-ஐ பயன்படுத்தலாம். உங்கள் நெட்புக்கில் எல்லா மென்பொருள்களையும் நிறுவியிருக்க எதிர்பார்க்கக்கூடாது.

இது அப்படியே நம்மை சீக்கிரத்தில் யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங் அல்லது கிளவுட் கம்ப்யூட்டிங்கில் (Cloud computing) கொண்டு போய் விடும். மாதம் ஒன்றாம் தியதி ஆனால் மின்சாரபில், தண்ணீர்பில், தொலைபேசிபில் கட்டுவது போல எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கோ அல்லது கூகிளுக்கோ மாதம் கொஞ்சம் காசு கட்டுவீர்கள்.அவர்களின் எல்லா மென்பொருள்களும் உங்களுக்கு ஆன்லைனிலே தயாராக இருக்கும்.உங்கள் போட்டோக்கள் பாடல்கள் வீடியோக்கள் இன்னும் பிற கோப்புகள் எல்லாம் உங்கள் நெட்புக்கிலிராமல் எங்கோ ஒரு செர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். தேவைப்பட்டதும் நொடியில் கிளிக்கி உங்கள் நெட்புக்கில் கொண்டுவரலாம். ரசித்துக்கொள்ளலாம். உங்கள் சி டிரைவ் எப்போதுமே காலியாக இருக்கும்.எப்படி இருக்குது கதை.

அமெரிக்கா வாழ் நண்பர்களுக்கு ஒரு டீல் சேதி. இந்த சனிக்கிழமை வால்மார்ட்டில் சேல் போட்டிருக்கிறார்கள். ஒரு Compaq மடிக்கணிணியின் விலை $298. மாடல் விவரங்கள் Compaq CQ50-139WM 15.4" laptop WITH 2GB RAM and 160GB HD.ஊருக்கு கொண்டு போக கிப்ட் ஆச்சுது.



ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

முனிசாமி "மூலிகை மர்மம்" தமிழ் மருத்துவ நூல் இங்கே தமிழில் மென் புத்தக வடிவில். Munisami Mooligai Marmam Medicine in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்