உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, December 06, 2008

நடனமாடும் சிலைடுஷோ

Abercrombie and fitch ஸ்டோரில் நுழைந்ததும் ஒலிக்கும் மயக்கும் techno இசைகள் அங்கு மங்கிய ஒளியில் மனதை நடனமாட வைக்கும். வெற்றுடம்பை காட்டி நிற்கும் கறுப்பு வெள்ளை போஸ்டர்களுக்கு ஒருநாளும் கூச்சமில்லை. துணி ஷாப்பிங் வந்ததுபோல தெரியாது. போத்தலுக்குப் பதிலாய் கையில் பொத்தலுள்ள ஜீன்ஸ் பேண்ட்கள்.வெளியே வந்தால் ஏதோ ஒரு பப்பைவிட்டு வெளிவந்தது போலிருக்கும். Sky is falling என மீடியாக்கள் கத்திக் கொண்டிருக்க மால்கள் நிரம்பியிருக்கின்றன. இத்தனைக்கும் அமெரிக்காவெங்கும் ஏகப்பட்ட ஸ்டோர்களை மூடிக் கொண்டிருக்கின்றார்களாம் ஒரு பெரிய லிஸ்டே மெயிலில் வந்தது. கிப்ட்கார்டுகளை வாங்காதிருக்கவும் அப்படியே ஏதாவது கிப்ட்கார்டுகள் இருந்தால் உடனே போய் பயன்படுத்திவிடுவதும் உத்தமம் என்கின்றார்கள். நாளைக்கே அந்த ஸ்டோர் இருக்குமா என்பது சந்தேகமே.

இதற்கிடையே நவீன நாஸ்ட்ராடமஸ் என நியூயார்க் போஸ்ட்டால் பட்டமிடப்பட்ட ஜெரால்ட் செலென்டேயின் (Gerald Celente) ஜோசியம் சரியானால் 2012-ல் அமெரிக்கா உலகின் முதல் undeveloped nation ஆகும், உணவுப் பற்றாக்குறையாலும் அதிக வரியாலும் பல புரட்சிகளும் போராட்டங்களும் நடக்கும்,பண்டிகைகளுக்கு பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வதை விட உணவு கொடுத்தாலே போதுமென்ற நிலை வரும் என கணித்திருக்கிறார்.இவர் இதற்கு முன் டாட் காம் குமிழ் உடைவு, இப்போதிருக்கும் சப்பிரைம் பிரச்சனைகள், ரஷ்யாவின் பிளவு இதையெல்லாம் சரியாக முன் கணித்திருக்கிறாராம். Trends Research எனும் நிறுவனத்தை நடத்திவரும் இவரின் வீடியோ பேட்டியை நீங்கள் இங்கே காணலாம்.
http://www.youtube.com/watch?v=46MEqEgdLTg

நான் சொல்ல வந்ததே வேறு.
கொடுத்த இசைக்கு ஏற்றவாறு சிலைடுஷோக்களில் படங்களை நடனமாட வைத்தல் மிகவும் கடினமான காரியம்.லூசுப்பெண்ணே பாடலுக்கு திரிசாவின் படங்களை நடனமாட வைத்திருந்த ஒரு நபரின் ஸ்லைடுஷோ வீடியோ காட்சியை பார்த்தேன். பாடலின் இசைக்கேற்ப அந்த பட சிலைடுகள் நடனமாட உயிர்கொடுத்திருந்தார். ரசிக்கும் படியாக இருந்தது.கீழே அந்த வீடியோவுக்கான சுட்டி.
http://www.youtube.com/watch?v=wOWrEmd5ihQ

இது போல நீங்களும் உருவாக்கவிருக்கும் சிலைடுஷோவையும் அதன் இசைக்கேற்ப நடனமாட வைக்க http://animoto.com எனும் தளம் உதவி செய்கின்றது. படங்களையும் பாடலையும் நீங்கள் ஏற்றிவிட்டால் போதும்.அந்த இணையதளம் உங்கள் பாடலின் இசைக்கேற்ப அந்த ஸ்லைடுசோவை நளினமாக துள்ளி நடனமாடவிட்டு காண்பிப்பது மிகவும் அருமை.என்னமோ Cinematic Artificial Intelligence எனும் நுட்பம் பயன்படுத்துகின்றார்களாம். 30 நொடிகள்தாம் இலவசம்.

இதுபோன்ற எஃபக்டை எளிதாக ஸ்லைடுஷோக்களுக்கு வழங்க வேறு ஏதாவது மென்பொருள்கள் இருக்கின்றதா என தெரியவில்லை.நல்ல ஹிட்டாகும்.



சுவர்க்கத்தில் என்னைச்
சிறை வைத்தாலும்,
நான் அதன் பளிங்குச் சுவர்களைத்
தாண்டி வெளியேறவே
விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே, தேவை - டிரைடன
ருக்மணி ஜெயராமன் "மகிழ்ச்சியான எதிர்காலம் என்கையில்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Rukmani Jeyaraman-Mahilchiyaana Ethirkaalam Enkaiyil in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

வேலன். said...

அன்புடன்,
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கும் 2010வரை நேரம் சரியில்லையென சொல்லியுள்ளார்கள்.பார்ப்போம். அதுபோல் சிலைட்ஷோ அடோப் போட்டோஷாப் 3 -ல் அந்த வசதி உள்ளது.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Muhammad Ismail .H, PHD., said...

ம்ம், நல்லா தான் இருக்கு. 2001 -ல் Creative Sound Blaster வாங்கும் போது இதைப் போல ஒரு software கொடுத்தார்கள். பேரு சரியா ஞாபகம் இல்லை. அதுவம் இதைப்போல பாட்டுக்கு தகுந்தார்போல் நடனமாட வைக்கும். ஆனா அது Flubber பொம்மை போல இருக்கும்.

with care and love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்