எங்கோ படித்தேன். அமெரிக்காவில் இப்போதைக்கு சூடாக விற்பனையாவது கைத்துப்பாக்கிகளும் பாதுகாப்பு பெட்டகங்களுமாம். புதிய அரசு வந்ததும் கைஆயுதங்களுக்கு தடைவிதிக்கப்படலாம் என்பதாலும் மேலும் பொருளாதாரம் போகும் போக்கில் தற்காப்பு குறித்த கவலையும் மக்களிடையே ஏற்ப்பட்டுள்ளதாலும் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க மண் முழுவதும் ஆங்காங்கே பழைய நெருக்கடிகளின் போது தாத்தா பாட்டிகளால் தோண்டி புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் டாலர் கத்தைகளின் இருப்பிடம் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாவதுண்டு. இப்போது அது இன்னொரு தலைமுறையின் முறை. 1933-ல் அதிபர் ரூஸ்வெல்ட்(FDR) எல்லா அமெரிக்கர்களிடமிருந்தும் இருந்த Gold Coin, Gold Bullion, மற்றும் Gold Certificates-களை வலுக்கட்டாயாமாக பிடுங்கி வைத்துக்கொண்டது நினைவிருக்கலாம். அதற்கு பதிலாக கொஞ்சம் டாலர்களை கொடுத்தாராம். இதனால் நிறைய தங்கங்கள் அச்சமயத்தில் ரகசியமாய் மண்ணில் புதைக்கப்பட்டன. இப்போதும் அரிசி டப்பாக்குள் போட்டு வைத்திருந்த நகைகளையும் ஏதோ டிடெக்டர் பயன்படுத்தி கொள்ளையர்கள் கண்டுபிடித்து விடுகின்றார்களாம். இதனால் Sentry Safe-கள் சிலருக்கும் Ziploc bag-கள் பலருக்கும் உதவலாம். Backyard-ல் அடக்கம். இந்த கால திவால் வங்கிகளுக்கு இந்தமாதிரியான கிளாசிக் தீர்வுகள் எவ்வளவோ பரவாயில்லை என தோன்றலாம்.
கணிணியிலும் ரகசிய கோப்புகள், முக்கிய கோப்புகள் என இன்றைக்கு நம் வீட்டு கணிணிகளில் "மறைத்தல்" தவிர்க்க முடியாதனவாகிவிட்டன. பிறர்கண்ணிலோ அல்லது நம் வீட்டு குழந்தைகள் கண்ணிலோ அது பட்டு எதேச்சையாக அழிக்கப்பட்டு விடக்கூடாது பாருங்கள். இப்படி உங்கள் கணிணியில் இருக்கும் ரகசிய முக்கிய கோப்புகளையும் ஃபோல்டர்களையும் பிறர்கண்ணில் படாமல் சேர்த்துவைக்க System Vault என்ற இந்த சிறு இலவச மென்பொருள் உதவுகின்றது. குறிப்பிட்ட கடவுசொல்கொடுத்தால் மட்டுமே அந்த போல்டர் உங்கள் கண்ணுக்கு தெரியும். திறந்து பார்க்கலாம். பிற நேரங்களில் மறைந்தே இருக்கும்.
உங்களுடையது உங்களுடையதேயாகும். அதை Sentry Safe-ல் இட்டோ அல்லது System Vault -ல் இட்டோ பாதுகாப்பது நம் கடமை. ஆனால் ஒரு எச்சரிக்கை தப்பித்தவறியும் Sentry Safe-ஐ புதைத்த இடத்தையும் System Vault-ன் பாஸ்வேர்டையும் மறந்துவிடாதீங்க.
Download System Vault
http://www.computer-realm.net/software/systemvault/
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. - அன்னை தெரஸா. |
உமா பாலகுமார் புதினம் "உயிர் தொட்ட உறவே!" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Uma Balakumar Uyir Thotta Urave Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
5 comments:
சென்ற தலைமுறையாவது நமக்கு பொற்காசுகளும், நகைகளையும் புதைத்துவிட்டு சென்றார்கள். இந்த தலைமுறைதான் வெடிகுண்டுகளையும்,துப்பாக்கிகளையும் புதைத்துவைக்கிறதே...
கோப்புகளுக்குபூட்டு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Hi,
I can't seem to download the PDFs in your blog. the following script error shows up. please look into it. thanks.
Error in count on line 479.
./mydrive/Tamil TV Serial Songs/Kathalikka-Neramillai-Serial-Vijay-TV-Title-Song.mp3 is already defined.
Mr. PKP. Your directory was very useful to download ebooks and kids stuffs. What happended? Suddenly link is not working http://www.pkp.in/mydrive/index.php . Pls giv life to that. Thanks.
V. Raja
அன்புள்ள பிKபி க்கு,
நான் தங்கள் அபிமான வாசகன்.
இந்த ஸிஸ்டம் வால்ட்-ஐ விட ஃபோல்டர் ஸெக்யூரிடீ ஸாஃப்ட்வேர்-ஏ நன்றாக உள்ளது. தங்கள் கருத்து என்னவோ?
அன்புடன்
LAV.
வணக்கம்..என் பெயர் மீனாட்சி சுந்தரம்...உங்கள் பழைய பதிவுகளை விடாமல் படிக்கும் வாசகன்..இந்த system vault software என்னால் பயன்படுத்த இயலவில்லை..காரணம் தெரியவில்லை அண்ணா..இதுபோல் வேறு மென்பொருள் (இலவசமாக) இருப்பின் தெரிய படுத்தவும்...நன்றிகள் பல..
Post a Comment