காண்பது தான் உலகம் அதற்கும் மேல் வேறெதுவும் இல்லை என்பது தான் நம்மில் பலரும் நம்புவது. நம் புலன்களுக்கு எட்டாததால் பொருளுலகம் தவிர வேறுலகம் இல்லை என ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றோம். குத்திருட்டில் நாய் எதையோ பார்த்து குரைக்கின்றது ஊளையிடுகின்றது. நம் கண்களுக்கு எட்டாதது எதுவோ அதற்கு எட்டியிருக்கின்றது எனலாமா? அப்படியே தான் அதன் மோப்ப சக்தியும். புலன் விசாரணையில் துப்பறிய ஒரு நாய் பயன்படுத்தப்படும் போது ஏன் அப்பணியை செய்ய இன்னும் ஒரு ரோபோ உருவாகக்கப்படவில்லை. சில மாயநிலைகள் நம் புலன்களுக்கு மட்டுமல்ல கருவிகளுக்கும் கூட இன்னும் எட்டாதவையே. 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளை நம் சாதாரண காதுகளால் கேட்க முடிகின்றது. அதுவே அதற்கும் மேல் போனால் அதை கேட்க எப்.எம் ரேடியோக்கள் வேண்டும். வெறும் காதுக்கு எட்டாததால் 93.5 -அலைவரிசையில் சூரியன் எப்.எம் இல்லை என்றாகிவிடுமா? பூமிஅதிர்ச்சி வரப்போகின்றதென்றால் மிருகங்களின் புலன்களுக்கு ஏதோ ஒரு வகையில் அச்செய்தி எட்டிவிடுகின்றதாம். மனித ஜென்மத்தால் தான் இன்னும் அது முடியவில்லை. எதாவது ஒரு கருவி கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
திடம் திண்மம் வாயு இந்த மூன்று நிலைகளில் ஒன்றில் தான் பொருட்கள் இருக்கமுடியும் என பள்ளியில் சொல்லித் தந்தார்கள்.
நெருப்பு அது திடமா? திண்மமா? வாயுவா?
சூரியன் அதன் ஸ்டேட் என்ன? திடமா? திண்மமா? வாயுவா?
ஒளி அது துகளா இல்லை அலையா? இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மூன்று தன்மைகளும் சேர்ந்தாப்போல் பிளாஸ்மாவென நான்காவதாக ஒரு நிலை இருக்கலாமென சொல்லிவைத்திருக்கின்றார்கள்.
நம் சரீரம் திடம், நம் இரத்தம் திரவம், நாம் சுவாசிக்கும் ஆவி வாயு, நம் ஆன்மா பயோபிளாஸ்மாவோவென ஒரு தற்காலிக முடிவு.
பொருளுலகில் உள்ளவை நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் கட்டுபடும். பொருள்களுக்கு அப்பாற்பட்டவை எப்படி நம் கருவிகளுக்கோ கண்களுக்கோ கட்டுபடும்? அப்படி கட்டுபட்டால் அது பொருள் என்றாகிவிடுமே. எனவே நாம் எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?
Channel 4 - Dispatches (June 2009) - Terror in Mumbai எனும் ஒரு டாக்குமெண்டரி வீடியோவை சமீபத்தில் காண நேரிட்டது. அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப சமயம் பிடித்தது.
http://www.vimeo.com/5409826
துன்பமும் வேதனையும் என உலகம் ஆனாலும்.... பூக்கள் மலரும் - ஐஸா |
706 பக்க மாபெரும் ஆனந்த விகடன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக.Tamil recipes Anathavikatan Mega Collection pdf ebook Download. Click and Save.
Download
Download this post as PDF
11 comments:
புதிய பார்வையில்... இதுவரை நான் அறியாத ஒன்று மிக்க நன்றி
\\வெறும் காதுக்கு எட்டாததால் 93.5 -அலைவரிசையில் சூரியன் எப்.எம் இல்லை என்றாகிவிடுமா? \\
\\நம் சரீரம் திடம், நம் இரத்தம் திரவம், நாம் சுவாசிக்கும் ஆவி வாயு, நம் ஆன்மா பயோபிளாஸ்மாவோவென ஒரு தற்காலிக முடிவு.\\
\\எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?\\
மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே
அறிவியல் செல்ல வேண்டிய பாதை எது,இயற்கையின் படைப்பான மனித குலம் உணர வேண்டியது என்ன என்பதையும் தெளிவாக சொல்லி விட்டீர்கள்
வாழ்த்துக்கள்
எட்டாதவை என்ற தங்கள் பதிவு அனைவரையும் சிந்திக்கவைக்கும்.
அண்மையில் நான் காஞ்சி மஹா ஸ்வாமிகள் பற்றி திரு கணேச சர்மா என்ற அறிஞர் ஆற்றிய அருமையான உரையினக் கேட்கும் பாக்கியம் கிட்டியது. அவர் சொன்னது:
புகழ்பெற்ற டாக்டர் ரங்காச்சாரி ஒருசமயம் ஸ்வாமிகளைச் சந்தித்தார். இருவரும் உரையாடினர்.
டாக்டர்: ஸ்வாமி, நான் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஆனால் தாங்கள் கூறும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்ப்புக்களிலும் காணவில்லையே! எப்படி நம்புவது?
ஸ்வாமிகள்: ஒன்று கேட்கிறேன். பதில் சொல். நீ செய்த அறுவை சிகிச்சைகளில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம். சிலர் மரணம் அடைந்தும் இருக்கலாம். மரணம் அடைந்ததும் நீ என்ன சொல்வாய்?
டாக்டர்: என்ன செய்வது? பிராணன் போய்விட்டது. அவ்வளவுதான். என்று சொல்லுவேன்.
ஸ்வாமி: பிறகு?
டாக்டர்: இன்னாரின் பிராணன் போய்விட்டது என்று மரணச் சான்றிதழ் கொடுப்பேன்.
ஸ்வாமி: பிராணன் போனதை நீ பார்த்தாயா? சரி. அறுவை சிகிச்சை செய்யும்போது பிராணன் இருந்ததை நிச்சயம் சொல்லமுடியுமா? பார்க்காத ஒன்றைப் பற்றி பிராணன் போய்விட்டது என்று நீ சான்றிதழ் கொடுப்பது பொய்தானே? அது போலத்தான் ஜீவத்மாவும் பரமாத்மாவும். கண்ணுக்குப் புலனாகதவை. அதனால் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா?
டாக்டர்: பேசாமலேயே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டுப் போனார்.
பிகேபி சார்,
வெகு நாட்களுக்குப்பிறகு உங்கள் பதிவைக்கண்டதில் மகிழ்ச்சி.
நன்றி மீண்டும் நகர்வலத்தை துவங்கியதிற்கு உங்களை எல்லோரும் அதிகம் மிஸ் செய்கிறோம்....
\\ துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்....
பூக்கள் மலரும் \\
மிக நல்ல வரிகள்...
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
different thinking and attempt to understand difficult topics in logical way.
பொருளுலகில் உள்ளவை நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் கட்டுபடும். பொருள்களுக்கு அப்பாற்பட்டவை எப்படி நம் கருவிகளுக்கோ கண்களுக்கோ கட்டுபடும்? அப்படி கட்டுபட்டால் அது பொருள் என்றாகிவிடுமே. எனவே நாம் எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?
Please check with your local area about Inner Engineering Program- by Sadhguru Jaggi Vasudev. That program will guide you to go deep into this aspect.Sundar-Neyveli
Sir not able to download files.., Please check it...,
The "Today's special" has been removed. Can you re-upload please.
நல்ல பதிவு நண்பரே.இதைப் பற்றிய எனது கருத்தையும் இங்கே பார்க்கலாம்.
-பொய் சொல்லும் புலன்கள் -http://sathik-ali.blogspot.com/2009/03/blog-post_16.html.
பஞ்ச பூதங்கள்- ஒரு புதக்கண்ணாடி பார்வை http://sathik-ali.blogspot.com/2009/04/blog-post_09.html
The Samayal recipies complementary copy was removed at Scribd.com per se Bharathitamizhan
நெருப்பென்பது அதிசுடாகிய வாயுதான்.
ஒளிஎன்பது அலை மற்றும் துகள் வடிவானது.
Post a Comment