நாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கும் ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” நிஜமாகிக் கொண்டே வருகின்றது. போன மாதம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு நாம் இந்த மாதம் காசு கட்டுவது போல போன மாதம் முழுக்க பயன்படுத்திய போட்டோஷாப் மென்பொருளுக்கான வாடகை கட்டணத்தை இந்த மாதம் நீங்கள் கட்டிவிட்டு ஒரேயடியாக ஜகா வாங்கிக்கலாம். கையில் காசிருந்தால் இன்னும் இரண்டு மாதம் கூட போட்டோஷாப்பை நீங்கள் வாடகைக்கு குறைந்த கட்டணத்தில் உங்கள் கணிணியில் வைத்துக் கொள்ளலாம். பைரேட்டட் மென்பொருள்களின் புழக்கத்தை தவிர்க்க இந்த மாதிரியான ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” ஒரு நல்ல நடைமுறை தான்.
இதற்கு கணிணியெல்லாம் தேவையில்லை. Computing without a computer என்ற கோஷத்தோடு வந்திருக்கின்றார் 25 வயது சச்சின் துக்கால்(Sacchin Duggal). இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பறந்ததுகளில் இதுவும் ஒன்று.
nivioCompanion என செட்டாப்பாக்ஸ் போல ஒரு சின்ன பொட்டி. அந்த சின்ன பொட்டியோடு ஒரு கீபோர்டு மவுசு மானிட்டரும் இருந்தால் யூ ஆர் ஆல் செட். இந்த சிறிய பொட்டியானது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்க உங்கள் விண்டோஸ் விஸ்டா முதல் எல்லாமே தூரத்திலுள்ள அவர்கள் டேட்டா செண்டரிலிருந்து தான் வரும். அந்த பொட்டியினுள் எதுவுமே நடப்பதில்லை. சேமிக்கப்படுவதில்லை எல்லாமே அவர்கள் டேட்டா சென்டரிலுள்ள SAN-ல் தான் சேமிக்கப்படும். nDrive என்கின்றார்கள்.10GB இலவசமாம்.Computing power-ஐ இஷ்டத்துக்கும் அப்புறம் கூட்டிக்கொள்ளலாம். Hardware அல்லது software upgrade பிற்காலத்தில் செய்யத் தேவையில்லை. ஒரு நாளும் கிராஷ் ஆகாது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் என சத்தியம் செய்கின்றார்கள். குறைந்தது 128 Kbps வேக இணைய இணைப்பாவது இருக்க வேண்டும். ஆனால் என்ன ஒரே பிராப்ளம் நாம் காலத்துக்கும் ஹார்டுவேருக்கும் சாப்ட்வேருக்கும் மாதச் சந்தா கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.Realtimepublishers கணிணிதுறையினருக்காக அநேக தரமான மென்புத்தகங்களை இலவசமாக வழங்குகின்றார்கள். நீங்கள் ஒரு IT professional எனில் கண்டிப்பாக கவனிக்க வேண்டியதொரு தளம். அவர்களின் Realtime Nexus Digital Library-யானது இலவச டெக்னாலஜி pdf eBooks-களால் நிரம்பியிருக்கின்றது.
![]() பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா? - வாரியார் |

Download

5 comments:
நல்ல பகிர்வு
யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங் எப்படி சாத்தியம் என புரியாமல் இருந்தேன் . அருமையாக விளக்கி விட்டீர்கள் . நன்றி
Lovingly,
Limat
Thanks dear
ஏற்கனவே எம்.டி.என்.எல் பி.எஸ்.என்.எல் இவை நெவேட்டியம் என்ற கம்பெனியுடன் இணைந்து இந்த ஸேவையை கிட்டத்தட்ட இரு வருடங்களாக வழங்கி வருகிறார்களே!
உங்களது பதிவுகள் அருமை.
நல்ல விஷயங்களை பகிருவதற்கு நன்றிகள் பல.
Post a Comment