இந்த வலைப்பதிவை தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. காலச்சக்கரம் வேகமாய் சுழன்று கொண்டிருக்கின்றது. போனவருடம் இந்நாட்களில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142 ஆக இருந்தது. இப்போது அது 1255 ஆக உயர்ந்திருக்கின்றது. சிறிது முன்னேற்றம். அதுவே RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2013-ஆக இருந்தது. இப்போது அது 5252 ஆக உயர்ந்திருக்கின்றது. கொஞ்சம் முன்னேற்றம். இந்த எண்ணிக்கையை அப்படியே நம்பமுடியாது. நாளுக்கு நாள் வெகுவாக வேறுபட்டாலும் ஒரு சராசரி தொகையை நம்மால் கணிக்க இயலும். போன வருடம் நம் பிலாகை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155 ஆக இருந்தது. இன்றைக்கு அது 582. நல்ல முன்னேற்றமாக தெரிகின்றது. தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடிகளில் ஒருவரான காசி ஆறுமுகம் சார் அவர்கள் “அன்புள்ள பிகேபி, வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாகப் பயன்படுத்தும் உங்களை பாராட்டி மேலும் வளர வாழ்த்துகிறேன்.” என வாழ்த்திச் சென்றிருந்தார். அவர் சொன்னது போல இன்னும் அநேகர் இன்று வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாக நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தி வருதல் நம்மிடையே மகிழ்ச்சியான செய்தி.உதாரணத்துக்கு ஆயுர்வேத மருத்துவத்தை தமிழில் அக்குவேராக அலசும் http://ayurvedamaruthuvam.blogspot.com போன்ற வலைப்பதிவுகளைச் சொல்லலாம்.
தொடர்ந்து ஆதரவுகளை அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சில வேகக்குறிப்புகள்.
மூன்றும் ஐபோன் பற்றியன.
எல்லா ஐபோன்களிலும் (2G, 3G, 3GS) இப்போது வீடியோ ரெக்கார்டிங் வசதி வந்துவிட்டது. அதுவும் பல்வேறு எஃபக்டோடு கூட வீடியோக்களை பதிக்கலாம். இதற்காக iVideo Camera, Qik Video Camera போன்ற app-களை பயன்படுத்தலாம்.
உங்கள் கணிணித்திரையை அல்லது மடிக்கணிணியைத்திரையை உங்கள் ஐபோனில் காண, இயக்க Teamviewer-ம் ஒரு ஐபோன்app-ஐ இலவசமாக வழங்குகின்றது. http://www.teamviewer.com/download/iphone.aspx
உங்கள் முன் நிகழும் நிகழ்வுகளை அப்படியே இன்னொரு ஐபோனுக்கு ஒளிப்பரப்பு செய்ய Knocking Live Video எனும் இலவச ஐபோன்app உதவுகின்றது. இண்டரெஸ்டிங் அப்ளிகேசன். முயன்று பாருங்கள்.
![]() -யேசுநாதர். Let He Who Is Without Sin Cast The First Stone - Jesus |

