உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, March 18, 2010

ஆறு ஆண்டுகள்

இந்த வலைப்பதிவை தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. காலச்சக்கரம் வேகமாய் சுழன்று கொண்டிருக்கின்றது. போனவருடம் இந்நாட்களில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142 ஆக இருந்தது. இப்போது அது 1255 ஆக உயர்ந்திருக்கின்றது. சிறிது முன்னேற்றம். அதுவே RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2013-ஆக இருந்தது. இப்போது அது 5252 ஆக உயர்ந்திருக்கின்றது. கொஞ்சம் முன்னேற்றம். இந்த எண்ணிக்கையை அப்படியே நம்பமுடியாது. நாளுக்கு நாள் வெகுவாக வேறுபட்டாலும் ஒரு சராசரி தொகையை நம்மால் கணிக்க இயலும். போன வருடம் நம் பிலாகை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155 ஆக இருந்தது. இன்றைக்கு அது 582. நல்ல முன்னேற்றமாக தெரிகின்றது. தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடிகளில் ஒருவரான காசி ஆறுமுகம் சார் அவர்கள் “அன்புள்ள பிகேபி, வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாகப் பயன்படுத்தும் உங்களை பாராட்டி மேலும் வளர வாழ்த்துகிறேன்.” என வாழ்த்திச் சென்றிருந்தார். அவர் சொன்னது போல இன்னும் அநேகர் இன்று வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாக நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தி வருதல் நம்மிடையே மகிழ்ச்சியான செய்தி.உதாரணத்துக்கு ஆயுர்வேத மருத்துவத்தை தமிழில் அக்குவேராக அலசும் http://ayurvedamaruthuvam.blogspot.com போன்ற வலைப்பதிவுகளைச் சொல்லலாம்.

தொடர்ந்து ஆதரவுகளை அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சில வேகக்குறிப்புகள்.
மூன்றும் ஐபோன் பற்றியன.

எல்லா ஐபோன்களிலும் (2G, 3G, 3GS) இப்போது வீடியோ ரெக்கார்டிங் வசதி வந்துவிட்டது. அதுவும் பல்வேறு எஃபக்டோடு கூட வீடியோக்களை பதிக்கலாம். இதற்காக iVideo Camera, Qik Video Camera போன்ற app-களை பயன்படுத்தலாம்.

உங்கள் கணிணித்திரையை அல்லது மடிக்கணிணியைத்திரையை உங்கள் ஐபோனில் காண, இயக்க Teamviewer-ம் ஒரு ஐபோன்app-ஐ இலவசமாக வழங்குகின்றது. http://www.teamviewer.com/download/iphone.aspx

உங்கள் முன் நிகழும் நிகழ்வுகளை அப்படியே இன்னொரு ஐபோனுக்கு ஒளிப்பரப்பு செய்ய Knocking Live Video எனும் இலவச ஐபோன்app உதவுகின்றது. இண்டரெஸ்டிங் அப்ளிகேசன். முயன்று பாருங்கள்.

உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.
-யேசுநாதர்.
Let He Who Is Without Sin Cast The First Stone - Jesus







“அண்ணாவின் காதல் சித்திரங்கள்” மென்புத்தகம் தொகுத்தவர் எம்.செல்வமணி. M.Selvamony "Annaavin Kaathal Chithirangal" Tamil ebook Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



21 comments:

ஜோதிஜி said...

http://ayurvedamaruthuvam.blogspot.com/

தேடிக்கொண்டுருந்தேன்.

இன்னும் ஆறு ஆண்டுகள் அல்ல நீங்கள் வாழும் வரைக்கும் அதற்கு பின்பும் இந்த இடுகைக்கு உயிர் இருக்கும். இருந்து கொண்டே இருக்கும்,

நல்வாழ்த்துகள்.

Muthu Kumar N said...

Dear Pkp,

Best wishes from me for your six years success. I am very much impressed by you.

You are the greate, we will see more info from you coming years.

Best wishes
Muthu Kumar.N

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள் பிகேபி. டெக்னாலஜி பிளாகை பொறுத்தவரை உங்களுடையதுதான் நான் முதன்முதலில் படித்தது.

இப்போழுதெல்லாம் உங்கள் பதிவுகள் மிகவும் குறைந்துவிட்டதே ஏன்?

உங்கள் சேவை மேலும் மேலும் தொடரவேண்டும்.

Anonymous said...

pkp மேலும் வளர வாழ்த்துகிறேன்.....

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

sam said...

தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடி PKP சார் அவர்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்...........

Sundhar Raman Rajagopalan said...

வாழ்த்துகள்.

ஆறு,அறுபதாகட்டும்

சுந்தர்23.

rajakvk said...

வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் வளரட்டும்.

கிரி said...

ஆறு வருடங்களுக்கு வாழ்த்துக்கள் PKP. இன்னும் அதிக செய்திகளை தர வேண்டுகிறேன்

Vijay said...

ஆறாவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

G.R said...

ஆறு ஆண்டுகள் சாதனை !!!
நல்வாழ்த்துக்கள் சார் நான் தான் முதல் ஆளா மிக்க மகிழ்ச்சி ! ! !..

உடன்பிறப்பு said...

வாழ்த்துக்கள் தோழர் பிகேபி! தொடரட்டும் உங்கள் பணி!!

GNU அன்வர் said...

அண்ணா வாழ்த்துக்கள் ஆனா ஒண்னுங்கனா அடிக்கடி ஜபோன் பத்தி எழுதிறிங்க ஆனா இன்னும் ஜபோனுக்கு நாங்க மாறவில்லை

தென்றல்sankar said...

ஐயா உங்கள் வலைப்பதிவு ஆறாவது ஆண்டு வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.இன்னும் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டேன்.சாரி அந்த முயற்சியில் தோல்வியடைந்தேன் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.அந்த காற்றின் முகவரியை எப்போதுதான் எனக்கு சொல்வீர்கள்.பரவாயில்லை ஐயா எப்படியோ ஐயா இன்னும் உங்கள் பதிவை முதலாவதாக படிக்கும் நபராக நானாகதான் இருப்பேன் என்பதில் எனக்கு ஐயமில்லை.
தொடரட்டும் உங்கள் பனி
தொடரட்டும் எங்கள் அணி
நன்றி
rsankar

Tech Shankar said...

Congrats Boss!

KARTHIK said...

வாழ்துக்கள் தல :-))

sridhar said...

Hi PKP,

All your posts are great and very useful...
Am reading them regularly...
And when i try to download it is giving the following error...

Error in count on line 794.
./mydrive/Tamil Audio Books/Tamil Bible New Testment/07_1-corinthians/07_1-corinthians_10.mp3 is already defined.

Please rectify,

Anonymous said...

I totally support that! Continue that way!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பயனுள்ள குறிப்புக்க்ள் (மட்டுமே) தந்துகொண்டிருக்கும்
தங்களுக்கு நன்றிகள்!

HK Arun said...

உங்கள் வலைப்பதிவின் ஆறாம் ஆண்டு நிறைவுக்கு என் வாழ்த்துக்கள்!

RestRelax Membership said...

Great Informations! thanks! keep it up!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்