உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, April 12, 2010

எங்கெங்கும் அர்த்தங்கள்

தமிழிலேயே பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. ”இலமே” என்ற வார்த்தைக்கான பொருளை சில நாட்களுக்கு முன்பாகத் தேடிக் கொண்டிருந்தேன். கூடுதலாக ஒரு காலை சேர்த்துவிட்டால் வார்த்தையின் பொருள் எப்படி மாறிவிடுகின்றது பாருங்கள். மக்களையும் மாக்களையும் சொன்னேன். மாக்கள் என்றால் கால்நடை மிருகங்களென்று அர்த்தமாம். இப்படியிருக்க ஆங்கில சொற்களுக்கான அர்த்தம் மட்டும் சொல்ல வேண்டுமாக்கும். தினமும் அர்த்தம் தெரியாத litigation, mitigation போன்ற ஆங்கில வார்த்தைகள் நமக்குமுன் வந்து போய்கொண்டிருக்கின்றன. bmimthiyas என்ற நண்பர் அறிமுகம் செய்து வைத்த WordWeb என்ற சிறிய மென்பொருள் இப்போது எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று. எந்த ஆங்கில வார்த்தையின் மீதும், எந்த அப்ளிகேசனிலிருந்தும், ctrl+rightclick செய்தால் அந்த வார்த்தைக்கான பொருளை இந்த மென்பொருள் அருமையாக மிக விளக்கமாக கொட்டி விடுகின்றது. நோட்பேடில் கூட ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை நாம் கண்டறியலாம். என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத நண்பர்களுக்கு மிகவும் பயனாகும் இலவச மென்பொருள் இது.
http://wordweb.info/free/


ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்
குதிரையை பின்னால் இருந்தும்
முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.










“காந்தி தரிசனம்” தமிழில் எஸ்.பொ மென்புத்தகம். "Gandhi Tharisanam" Espo Tamil ebook Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



13 comments:

இளமுருகன் said...

நான் ரொம்ப நாளாய் நினைத்துகொண்டிருந்தேன் இப்படி ஒன்றை பெற, மிக்க நன்றி.

இளமுருகன்
நைஜீரியா

movithan said...

சார்,உங்கட கிணற்றில தண்ணீர் வற்றுறதே இல்லையா?
புதுசு புதுசா தகவல் வந்திட்டே இருக்கே.
உங்களிடம் இருந்து கற்றவிடையங்கள் ஏராளம்.நன்றி.

bmimthiyas at yahoo co in said...

Thanks Brother

Anonymous said...

நல்ல தரமான கருத்துமிக்க வாசகத்தை
தந்தமைக்கு மிகுந்த பனிவான வந்தனங்கள் ஐயா,

யாசவி said...

this software is nice one.

I'm using since last 3 yrs :)

Unknown said...

மிக்க நன்றி கோபால் மண்ணிக்கவும் பிகேபி சார் (அந்த கோபால மறக்கவே முடியல). பிகேபி இணையம் சார்பாக அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நன்றி

குணா.சி
சிங்கப்பூர் (02/08/2009 வரை)
வேலூர், திருப்பத்தூர் (02/08/2009 முதல்)

ரமேஷ், திருச்சி. said...

திரு பி.கே.பி அவர்களே ரொம்ப நாளாக நான் தேடிக்கொண்டிருந்த மென்பொருள் இது. மிகவும் நன்றி. தொடர்ச்சியாக உங்களது பதிவுகளை படித்து வருகிறேன் நான். தங்களின் மேலான சேவைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Siva said...

நண்பர் பிகேபி அவர்களே, உங்கள் பணி பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள். இதுவரை நான் பார்த்த தமிழ் இணையதள எழத்தாளர்களிலேயே சிறந்த பயனுள்ள பதிப்பாக உங்கள் பதிப்பு உள்ளது. தமிழ் இணையதளங்களிலும் தலை சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கையை உங்கள் எழுத்து வளர்க்கிறது. உங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து தமிழ் சமூகத்திற்கு மேலும் பல நல்ல விஷயங்கள் சென்றடைய எல்லொருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்.

மு.சிவா

EMLIN said...

Dear Sir,
Hope you fine. From 13th April "Opera mini" browser is supporting to Iphone. it's available in Application store. I'm expecting a post about Opera soon. It's working well.

Thanking you

A Simple Man said...

Hi PKP,
I'm also using this for long time.
-ASM

simariba said...

மிகவும் பயனுள்ள ஒரு அகராதி மிக நன்றி! இது போல் தமிழில் கிடைத்தால் நல்லாயிருக்கும்.

Srini said...

Where are you PKP? I am visiting your site and keep disappointing..
Please post something

-- Thanks
Srini

muthu kumar said...

pkp sir , all are very nice. mm kumar. pollachi

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்