உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, July 09, 2010

நீங்களும் மூவி செய்யலாம்

உங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன் என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.
http://www.youtube.com/watch?v=FL7yD-0pqZg


வெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.
http://www.moia.gov.in/writereaddata/pdf/PAC_LIST.pdf

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்”வேர்ச்சொற் கட்டுரைகள்”


Email PostDownload this post as PDF

Wednesday, July 07, 2010

மேலே செல்லச் செல்ல

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா. இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.

Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?


எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


ந.பாலேஸ்வரி”தத்தை விடுதூது”


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்