உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, March 16, 2011

அடுத்தது கலிபோர்னியா?

சிபிக் பெருங்கடலை சூழ்ந்துள்ள அந்த குதிரைக் குளம்பு வடிவ பெரும் பகுதியை ”பசிபிக் ரிங் ஆப் பயர்” (Pacific Ring of Fire) என்கின்றார்கள். நிலநடுக்க அபாயங்களும் எரிமலை அபாயங்களும் நிறைந்த கடல் எல்லைப்பகுதி அது. உலகின் 75 சதவீத எரிமலைகள் இப்பகுதியில் தான் அமைந்துள்ளனவென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நெருப்பு வட்டத்தின் தென் கிழக்கு பகுதியில் சிலியும் தென் மேற்கு பகுதியில் நியூசிலாந்தும் வட மேற்கு பகுதியில் ஜப்பானும் அமைந்துள்ளது. இந்த மூன்று மூலைகளிலும் சமீப நாட்களில் தான் மாபெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. மிச்சமிருக்கும் நான்காவது மூலையான வட கிழக்கு பகுதியில் கலிபோர்னியா உள்ளது. இங்கு பேரழிவு தரும் பூமிஅதிர்ச்சி வருமா என்பது கேள்வி அல்ல, எப்போது வரும் என்பது தான் நிஜக் கேள்வி என்கின்றார்கள்.

டுத்தது சூப்பர் மூன். சில சமயங்களில் நிலவுப் பெண்னானவள் ஏதோ ஆசையில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு. இந்த முறை கிட்டமாக 221,567 மைல்கள் வரைக்கும் வருகின்றாள். இதை சூப்பர் மூன் என்கின்றார்கள். 1955,1974,1992 மற்றும் 2005-லும் இப்படி நெருங்கி வந்திருக்கின்றாள். வந்த போதெல்லாம் பூமியில் பேரழிவு தான். 2005 சுப்பர் மூனுக்கு இருவார முன்பு இந்தோனேசிய பூகம்பமும் அதைத் தொடர்ந்து மாபெரும் சுனாமியும் ஆசியாவை விழுங்கியது. இந்த மாதம் 19-ம் தேதி சூப்பர் மூன் வரவிருக்க இரு வாரங்களுக்கு முன் ஜப்பானின் பாதி செத்திருக்கின்றது. ஆனால் சூப்பர் மூனுக்கும்-பூமிஅதிர்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லை என விஞ்ஞானிகள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். சந்திரனின் நகர்வுக்கேற்ப கடல் மட்டங்கள் ஏறி இறங்குவது சகஜம். இதை ஓதங்கள் அதாவது tides என்பார்கள். இதற்கு இந்தியாவில் அலிபா கடற்கோட்டை நீரில் மூழ்கி எழுவது அப்பட்ட சாட்சி.(படம்:Alibag, Maharashtra).



டுத்தது கதிர் வீச்சு பற்றி கொஞசம். ஜப்பானில் கசியும் கதிர் வீச்சு எந்நேரமும் கலிபோர்னியா கடற்கரை பக்கம் வந்து சேரலாம் என தகவல் கசிய அமெரிக்க மேற்கு கரை பகுதிகளில் ”பொட்டாசியம் அயோடைடு” பார்மசி ஸ்டோர்களில் விற்று தீர்ந்திருக்கின்றது. பீதியில் பெட்ரோல் விலை என்ன, யாரும் சீண்டாத பொட்டாசியம் அயோடைடுக்கே இப்போது தட்டுப்பாடு. கதிர்வீச்சை சீவெர்ட்ஸ் (Sieverts) என்ற அலகினால் அளக்கின்றனர்.அதாவது mSv-மில்லிசீவெர்ட்ஸ் (Milli sieverts). வருடத்துக்கு நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு கதிர்வீச்சு 3mSv/year. ஒரு முறை CT ஸ்கேன் செய்தாலே 3mSv உங்களுக்கு வந்து விடும். எக்ஸ்ரேயின் போது கதிர்வீச்சு கொஞ்சம் கம்மி 0.1mSv. ஆனால் ஜப்பானில் இப்போது வெளியாகும் அளவு 400mSv/hour. கொஞ்சம் டேஞ்சர் தான். மண்ணிலிருந்து நாம் பிரித்தெடுத்த மாணிக்கங்களே - சீசியம், அயோடின், ஸ்ட்ரோண்டியம், புளூட்டோனியம்-கள் விஷமாகின்றன.

FLAC எனப்படும் Free Lossless Audio Codec பற்றி இன்னும் தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். MP3 போல இதுவும் ஒரு வகை ஒலி கோப்பு. MP3 கோப்புக்களை அதிகமாய் சுருக்கம் செய்வதால் 5நிமிட பாடலின் அளவு 5MB அளவாகவும் ஆடியோ தரம் சுமாராகவும் இருக்கும். ஆனால் பிளாக் எனப்படும் இந்த ஆடியோ இசை கோப்புகள் கம்ப்ரஸ் செய்யப்படாததால் இந்த கோப்புகளில் முழ இசைநாதங்களும் அடங்கியிருக்கும். விளைவு உச்ச குவாலிட்டி இன்னிசை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் கோப்புகளின் அளவு மட்டும் 35MB அல்லது 40MB என்றாகிவிடும். கீழ்கண்ட சுட்டியில் ”புதிய மனிதா”-வை flac வடிவில் இறக்கம் செய்து வித்தியாசம் தெரிகின்றதாவென அனுபவித்துப் பாருங்கள்.VLC அல்லது Winamp பயன்படுத்தவும்.
http://www.tamilmini.net/downloads/

கேள்வி: தமிழ்நாட்டில் திருமண சான்றிதழ் (Marriage Certificate) கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாமென கேள்விப்பட்டேனே அது உண்மையா?
பதில்: உண்மைதான்.கீழ்கண்ட சுட்டியில் உங்கள் திருமணத்தை தேடி பின் விண்ணப்பம் செய்யலாம். 2002 முதலான திருமணங்கள் மட்டுமே பார்வைக்கு கிடைக்கின்றன.

http://www.tnreginet.net/english/smar.asp

On the Lighter Side


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

Anonymous said...

தல எப்பவுமே தல தான்.
அருமையான தகவல்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்