எனது முந்தைய பதிவான “எல்லாமே அறிந்தவன்” கேப்டனையும் கேப்டனை சார்ந்தவர்களையும் மட்டுமே கோபமூட்டும் என நினைத்திருந்தேன். ஆனால் கோபப்பட்டதோ இன்னொரு ஆள். அது கூகுள். அந்த பதிவை நான் இட்டு இருபத்திநான்கு மணிநேரம் கூட ஆகவில்லை. எனக்கொரு ஈமெயில் கூகிளிடமிருந்து வந்திருக்கின்றது.உங்கள் தளத்துக்கான கூகிள் ஆட்சென்ஸ் ad serving has been disabled எனச் சொல்லி.கோபால் சொன்னான், கூகிளில் வேலைபார்க்கும் நம்மாட்கள் யாராவது செய்த சதி என்று. ஆனால் எனக்கோ கூகிள் ரோபோமீது சந்தேகம். கடந்த பதிவில் வெளியான கூகிள் சம்பந்தப்பட்ட ஆங்கில வார்த்தைகள் மற்றும் அது சுட்டிய சுட்டி ரோபோவை டிரிகர் செய்ய அந்த பக்கமாக வந்த ஆட்சென்ஸ் ஸ்பெசலிஸ்ட் கூர்காவானவர் அந்த பதிவில் வெளியாகியிருக்கும் கூகிளை வம்புக்கிழுக்கும் படத்தை பார்த்து உடனே கோபப்பட்டிருக்கலாம். எனக்கும் மெயில் அனுப்பட்டது.இதை நான் காகம் உட்கார பனை மரம் விழுந்த கதையாக கருதவில்லை.100% பாசிட்டிவ்.இட் ஈஸ் சோ அமேசிங்.கோபாலுக்கு இப்போது கோபம் மூன்று மடங்காகியிருக்கின்றது. ஆர்டர் செய்துள்ள அண்ராயிடு (Android) போனை கேன்சல் செய்துவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றான்.
பைதவே ஆண்ட்ராயிடு பற்றி பேச்சு வந்ததால் இங்கே இரண்டு டிப்ஸ்:
- ஆண்ட்ராயிடு போனில் தமிழ் யூனிக்கோடு (Tamil Unicode Font) நன்றாக தெரிய இலவச SETT Browser-ஐ பயன்படுத்தலாம்(படம்).Thanks to Dhanika Perera.
- அன்ட்ராய்ட் போனில் தமிழில் டைப்செய்ய இலவச Android TamilKey என்ற கீபோர்டை பயன்படுத்தலாம். Thanks to thamizha.com group.
Here is the funny quotes from TN campaign.
- ”விஜயகாந்த் என்னை அடிக்கவில்லை, மைக் பேட்டரியைத் தான் தட்டினார்: தர்மபுரி தேமுதிக வேட்பாளர்”
- என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொல்கிறார் விஜயகாந்த்
- வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு- விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'
பேசாமல் அரசியல் பாணியிலேயே நானும் போகிறேன். இதன் மூலம் சகல ஜனங்களுக்கும் பிகேபியாகிய நான் தண்டோரா அடித்துச் சொல்வது என்னவென்றால் “கோவப்பட்டது கோவால் தான், I still love google".
Download this post as PDF
11 comments:
Android Applications are useful thanks sir
yaru antha கோபால் pkp..?
//பேசாமல் அரசியல் பாணியிலேயே நானும் போகிறேன். இதன் மூலம் சகல ஜனங்களுக்கும் பிகேபியாகிய நான் தண்டோரா அடித்துச் சொல்வது என்னவென்றால் “கோவப்பட்டது கோவால் தான், I still love google"//
super :)
அலைபேசியின் டிப்ஸ் தகவல் பகிர்வுக்கு நன்றிங்கய்யா :)
இப்ப ஆட்சென்ஸ் சரியாயிடுச்சா?, மெல்ல மெல்ல நாம எல்லோரும் கூகுளுக்கு அடியாய்டுவமோ?
SAMSUNG GALAXY TAB-ஐ வாங்கி வைத்துக் கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். சரியான சமயத்தில் எனக்கு பயன்படும்படியான பதிவினை இட்டதற்கு நன்றி நண்பரே...
so informative,,,nandri
Please see below issue is still open about tamil font display issue for long time,
http://code.google.com/p/android/issues/detail?id=3029
It seems Android is not for Indians.
Please see below issue is still open about tamil font display issue for long time,
http://code.google.com/p/android/issues/detail?id=3029
It seems Android is not for Indians.
very useful for all
very useful for all ages
Post a Comment