3டி-யைப் பற்றி ஊடகங்கள் பெரிதாக பேசியபோது எனக்கு ஒன்றும் நம்பிக்கை இருக்கவில்லை. காஸ்க்கோவில் பெரிய 3டி தொலைக்காட்சி ஒன்றை வைத்து முன்னால் பைனாகுலர் போல 3டி கண்ணாடி ஒன்றை ஒரு ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். உற்று நோக்கிப் பார்த்தபோது 3டியில் பெண்கள் மணலில் பீச் வாலிபால் ஆடிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவ்வளவாக கன்வின்ஸ் ஆகவில்லை. இப்படி கண்ணாடியைச் சூடிக்கொண்டு எவ்வளவு நேரம் தான் ஒருவர் நடுஅறையில் அமர்ந்திருக்க முடியும். சாத்தியமில்லையென்றே தோன்றிற்று. நேற்று பார்த்த HTC Evo 3D செல்போன், 3டி பற்றிய எண்ணங்களையே முழுதாக மாற்றிக்கொள்ள வைத்தது. வெறும் கண்ணால் 3டி படங்களை, 3டி வீடியோ மூவீக்களை செல்போன் திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் இந்த கேமராவால் 3டி போட்டோக்கள், 3டி வீடியோக்களும் எடுக்க முடிவது கூடுதல் அதிசயம். இப்போது புரிகின்றது 3டி புகுந்து இன்னொரு ரவுண்டு வந்து நம் வீட்டு நடுஅறை டிவிகளையெல்லாம் ஒருவழி செய்துவிடும் என்று. இப்போதைக்கு ஒருசில 3டி சேனல்களே உள்ளன. அதுவும் போட்டதையே திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் போகின்ற போக்கில் எல்லாருமே சீக்கிரத்தில் மாறிவிடுவார்கள். அப்போது இப்போது உசத்தியாய் பேசப்படும் HD படங்கள் கூட நமக்கு அந்தக்கால பிளாக் அண்ட் ஒயிட் படம் பார்ப்பது போன்ற பிரம்மையைத்தரும்.
3டி பற்றி சில கொசுறு தகவல்கள்:
- யூடியூப் ஏற்கனவே 3டி வீடியோக்களை கொண்டுள்ளன.
- வலதுகண்பார்வை,இடதுகண் பார்வையென இரு பார்வை கேமராக்கள் கொண்டு 3டி படங்கள் எடுக்கப்படுகின்றன.ஆதலால் இப்போது வரும் 3டி செல்போன்கள் எல்லாம் மூன்று கேமராக்களோடு வருகின்றன.
- 3டி படங்கள் MPO எனப்படும் multi-picture file format அல்லது JPS எனப்படும் stereo JPEG ஃபார்மேட்டில் இருக்கும்.
அடுத்ததாக 4டி எனச்சொல்லி தியேட்டரில் நாற்காலிகள் படக்காட்சிகளுக்கேற்ப அதிரவும், திரைப்படங்களில் மழைபெய்தால் தியேட்டரிலும் சாரலடிக்கவும், திரையில் புயல்வீசினால் நிஜமாகவே தியேட்டரில் மின்விசிறிகளைக் கொண்டு காற்றுவீசவும், திரையில் தோன்றுவதற்கேற்ப தியேட்டரிலும் நறுமணங்களை (Aroma-scope)வீசவும், புகை எழும்புதல், நீர்க்குமிழிகளை பறக்கவிடுதல் எனப் பல யுத்திகளை செய்ய முயன்றுகொண்டு இருக்கின்றார்கள். அப்படியாக இந்த ஆண்டு 4டியாக வெளியாகவிருக்கும் படம் Spy Kids.
HTC Evo 3D தவிர LG யும் Optimus 3D என 3டி செல்போன் வெளியிட்டுள்ளது. செப்டம்பரில் அடுத்த ஐபோன் மாடல் வரவிருக்க ஆப்பிள் ஸ்டீவின் யோசனை என்னமோ.
நீங்கள் பார்க்க ரசிக்க சில வீடியோகிராப் படங்கள் இங்கே.
வீடியோகிராப்=வீடியோ+போட்டோகிராப்









மேலும் படங்கள் இங்கே
Amazing Videographs

6 comments:
எல்லாமே அருமை. நன்றி..
nice post sir. thanks for sharing
உயிரோட்டமுள்ள PHOTO என்ற பேச்சுவழக்கை இன்று உண்மையில் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. Virtual World என்பது சத்தியமாகி, நாமெல்லாம் வெறும் பிம்பங்களுடன் வாழும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.நன்றி.
Spy Kids வேலைக்காகாது போலிருக்கு.. அங்க போய் உக்காந்துட்டு அட்டைய வச்சு தேய்க்கணுமாம்...
அந்த கண்ணாடி இல்லாத 3D எனக்கு புதுசு... கொஞ்சம் லிங்க் தரமுடியுமா?
அனைத்து படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி!
தெரியாத விசயங்களை மிக தெளிவாக தெரிய வைத்ததற்கு மிக்க நன்றி .
Post a Comment