முன்பு ஒரு முறை கணிணி ஹேக்கிங் அடிப்படைகளை பற்றி நாம் இந்த வலைத் தளத்தில் எழுதிய போது ஏன் இதையெல்லாம் எழுதி ஜனங்களை கெடுக்கின்றீர்கள் என்கிற ரீதியில் ஒருவர் கோபமாய் பின்னூட்டமிட்டு போயிருந்தார்.களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன். போனால் போகட்டும் மக்களுக்கு பிடிக்கவில்லை ரூட்டை மாத்து என்றானது.
இன்றைக்கு இந்த ஹேக்கிங்குகளின் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
என் இனிய தமிழ் மாணவர்களே! ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான் கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.
On the Lighter Side
Download this post as PDF
10 comments:
Fantastic cartoon,,I love it...
please post about hacking methods and secrets
எதிரி மற்றும் அண்டை நாட்டு மன்னன் மகளைத் திருமணம் செய்து நட்பு அல்லது உறவு நாடாக்கி எதிரிகளைக் குறைக்கும் அந்தக் கால ஸ்டைல் இன்றைய கணினி யுகத்தில் புது மாதிரியாய்....! மாறாத யுக்தி மாறிய களத்தில்!
அப்ப இனி ஹாக்கிங் சார்ந்த தகவல்களையும் வழங்க்குவிர்கள் தானே
பி கே பி அண்ணா நாளுக்கு நாள் இணையமும் கணினியும் அனைத்தும் வளர்ச்சி காண்கிறது .ஆனால் எனது கணினி மட்டும் என்னும் அப்படியே இருக்கிறது.இலவசமாக சில சாப்ட்வர்களை எங்கு நான் டவுன்லோட் செய்யலாம் . கொஞ்சம் லிங்க் கொடுங்கள் .நன் முயற்சி செய்து பார்கிறேன்
Useful Posting for Talented Persons
நண்பா என்னுடைய பதிவை PKP யில் இணைக்க முடியவில்லை ...
இப்படி வருகிறது ....
The data you have submitted contains following errors:
Guests and low-karma users are not allowed to publish links on this site.
Very intresting to get know these facts..
good work
new software Download one click http://seldomtech.blogspot.com/2011/09/software-download.html
Hi PKP,
Just noticed that some of e-book download links are in archive now, so it asks for subscription to download them. Not sure as it intend that way, just thought of checking with you.
Nambi
Post a Comment