கையிலிருக்கும் கைப்பேசி முதல் காலில் இருக்கும் காலணிவரை எதாவது தகராறு பண்ணினால் தூக்கி எறிந்துவிட்டு புது கைப்பேசிக்கும் புதுகாலணிக்கும் மாறி விடும் காலத்தில் இருக்கின்றோம். அதனால் தான் கல்லியாணத்தையும் இளசுகள் அப்படியே பார்க்கின்றார்களாம். அந்த காலத்திலெல்லாம் எதாவது பழுதுபட்டுவிட்டால் அதை சரிசெய்து பயன்படுத்த முயலுவோம், இந்த காலத்திலோ எல்லாமே யூஸ் அன் த்ரோ என்றாகிவிட்டது. அதனால் தான் இந்த காலத்து திருமணங்கள் காலையில் பூத்து மாலையில் வாடிவிடுகின்றது. அந்தகாலத்து மணங்கள் ஆயிரங்காலத்து பயிர்களாக விளங்கின என்கின்றார்கள். பழைய படத்து டயலாக் ஒன்று நினைவுக்கு வருகின்றது ”நாங்களெல்லாம் வாங்கின துணி சரியில்லை என்றால் கடைக்காரரிடம் திரும்பிக்கொடுக்க மாட்டோம். சரியான அளவுக்கு தைத்து போட்டுக்கொள்வோம்”.இந்த ரெடிமேட் யுகத்திலோ உடனே அது குப்பைக்கு போய்விடுகின்றது.
Download this post as PDF