உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, July 17, 2012

பெரிசுகளின் நகைச்சுவை


”சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்
”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்
”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்
”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்
”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்
”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்
”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்
”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்
”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்
”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்
" Always and never are two words you should always remember never to use. " - Wendell Johnson


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

குறையொன்றுமில்லை. said...

எல்லாமே நகைச்சுவை கலந்து சுவாரசியமாக இருந்தது.

யோசிப்பவர் said...

I'm going to use these quotes in my puzzles :)

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே அருமையாக உள்ளது... சுவாரஸ்யமாக உள்ளது...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

ஸ்ரீராம். said...

நல்லதொரு தொகுப்பு. எல்லாமே மிக அருமை. இப்போதெல்லாம் டவுன்லோடுக்குப் புத்தக லிங்க் தருவதில்லையா?!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கருத்துக் கோர்வை.

Jafar ali said...

பொருள் பொதிந்த நகைச்சுவை! நன்றி!!!

Unknown said...

very nice words.
Thank you PKP

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்