உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, December 05, 2006

கணிணி பவர் ஆப் மேட் ஈஸி


உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.
இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.
சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.
இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)

Product Page
http://users.pandora.be/jbosman/poweroff/poweroff.htm

Direct Download Link
http://users.pandora.be/jbosman/pwroff30.zip

Automatic Scheduled Computer Switchoff Poweroff Reboot Freeware Utility


Email PostDownload this post as PDF

Monday, December 04, 2006

இந்திரஜால் Phantom-ம் மாண்ட்ரேக்கும்



கார்ட்டூன் நெட்வொர்க்குகள் வந்து பால்ய குழந்தைகளை ஆளும் முன் அந்தகால "குழந்தை"களை ஆண்டு கொண்டிருந்தவை Indrajal Comics-காமிக்ஸ் புத்தகங்கள் எனப்படும் படக்கதை நூல்கள்.Phanton,Mandrake,Bahadur,Flash Gordon,Dara,Rip Kirby,Buz Sawyer,Kerry Drake இப்படி தொடரும் அந்தகால வீர தீர காமிக்ஸ் கதை புத்தகங்களை அழகாக ஸ்கான் பண்ணி இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
நீங்களும் ரசிகர்களானால் இதை இலவசமாய் இணையத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.மலரும் நினைவுகளுக்கு திரும்பலாம்.

http://thecomiclinks.blogspot.com/2006/08/comic-download-links.html

Download free comics ebooks

சம்பந்தபட்ட இன்னொரு பதிவு
காமிக்ஸ் பிரியர்களுக்கு


Email PostDownload this post as PDF

Sunday, December 03, 2006

இது நானா இது நானா - A hit`s Profile


திரைப்படம்:வட்டாரம்(2006)
நடிப்பு:ஆர்யா,கீரட் பட்டெல்
இயக்கம்:சரண்
இசை:பரத்வாஜ்
பாடியவர்:கல்யாணி
எழுதியவர்:வைரமுத்து







வரிகள்

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நான்னா
இது நான்னா
எனை நானே ரசித்தேனா
ஆ ஆ
ஆ ஆ
ஆ ஆ

என் வானில் மேற்க்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெல்லம் போட்ட வெள்ளம் வந்து
வேரைத் தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் நொறுங்கி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

வாடா வா
ஒற்றை கட்டில்
ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக் கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே

கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய்தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

Click here to view the video songs from Vataaram

Download MP3 link

Vattaaram naana ithu naanaa ithu naana lyrics Mp3 Video song vattaram


Email PostDownload this post as PDF

Saturday, December 02, 2006

எக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா?

அந்நியர் பார்வையிலிருந்து நம் தகவல்களை பாதுகாக்க Excel workbook or sheet-ல் நாம் பாஸ்வேர்ட் செருகி வைப்பது சகஜம்.பல நேரங்களில் அப்பாஸ்வேர்டை நாமே மறந்து திகைத்து விடுவதும் உண்டு.இந்நேரங்களில் உதவுவது தான் இந்த இலவச எக்ஸெல் பாஸ்வேர்ட் நீக்கும் மென்பொருள்.இம்மென் பொருள் Excel workbook or sheet-ல் செருகி நாம் வைத்திருந்த கடவுசொல்லை நீக்கித்தரும்.இதுவும் ஒரு வகையான ஹாக்கிங் தான்.எக்ஸெல் 5.0,2000,XP மற்றும் 2003 என எந்த பதிப்பு எக்ஸெலாயினும் இம் மென்பொருள் கவலைப்படுவதில்லை என்பது நல்லதோர் இனிக்கும் செய்தி.ஸோ எக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா?.ரிலாக்ஸ்.
Product Page
http://www.straxx.com/excel/password.html

Direct download link
http://www.straxx.com/excel/password.zip

Forgot Excell Password Free reset recovery remover crack hack


Email PostDownload this post as PDF

Friday, December 01, 2006

சின்னத் திரைப் பாடல்கள்


சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று "நம்பிக்கை" தொடரின் கீழ்கண்ட பாடல்.

கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகள் கீழே.

நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் வாழ்வு இல்லை

நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவது நம்பிக்கை
தலையை இழந்த அருகம் புல்லும்
தழைத்து வருவது நம்பிக்கை
அப்பா என்னும் உறவும் கூட
அம்மா கொடுத்த நம்பிக்கை
ஆண்டவன் என்னும் கற்பனை கூட
அச்சம் கொடுத்த நம்பிக்கை
அடுத்த வருடம் மழை வரும் என்பது
உழுவோர்க்கெல்லாம் நம்பிக்கை
அடுத்த தேர்தலில் ஆட்சி என்பது
அரசியல்வாதியின் நம்பிக்கை
தரைக்கு மேலே பாதம் நிற்பதும்
ஆகாயத்தில் நிலவு நிற்பதும்
எல்லைக்குள்ளே கடல்கள் இருப்பதும்
இதயகூட்டில் ஜீவன் இருப்பதும்
நம்பிக்கை நம்பிக்கை
அது நம்பிக்கை நம்பிக்கை

இது போன்ற அநேக பழைய புதிய தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம்.(Please note-You need Real Media Player installed in your computer)

http://raretfm.mayyam.com/rmlist.php?dir=tvserial

Tamil TV serial theme songs nambikkai lyrics


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்