உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, December 03, 2006

இது நானா இது நானா - A hit`s Profile


திரைப்படம்:வட்டாரம்(2006)
நடிப்பு:ஆர்யா,கீரட் பட்டெல்
இயக்கம்:சரண்
இசை:பரத்வாஜ்
பாடியவர்:கல்யாணி
எழுதியவர்:வைரமுத்துவரிகள்

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நான்னா
இது நான்னா
எனை நானே ரசித்தேனா
ஆ ஆ
ஆ ஆ
ஆ ஆ

என் வானில் மேற்க்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெல்லம் போட்ட வெள்ளம் வந்து
வேரைத் தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் நொறுங்கி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

வாடா வா
ஒற்றை கட்டில்
ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக் கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே

கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய்தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

Click here to view the video songs from Vataaram

Download MP3 link

Vattaaram naana ithu naanaa ithu naana lyrics Mp3 Video song vattaram


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Sivabalan said...

பாடலுக்கு நன்றி!

PKP said...

நன்றி!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்