உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, December 16, 2006

காதல் நெருப்பின் - Veyil - Lyrics


திரைப்படம் : வெயில்
இசை:ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம்: வசந்தபாலன்
பாடியவர்கள்:கார்த்திக்,நிதேஷ்,சின்மாயி
நடிப்பு:பரத்,பாவனா,பசுபதி,ஸ்ரேயா ரெட்டி

ஆண்: காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்

பெண்: காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

ஆண்: காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

பெண்: புள்ளிமான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும் (காதல்)

ஆண்: கனவுகள் பூக்கின்ற செடியென
கண்கள் மாறுது உன்னாலே

பெண்: வயதிலும் மனதிலும் விட்டு விட்டு
வண்ணம் வழியுது உன்னாலே

ஆண்: உனது வாயாடும் அழகான கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

பெண்: குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே

ஆண்: உனது முத்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒருகோடி நதி பாயுதே (காதல்)

ஆண்: வானத்தின் மறுபுறம் பறவையாய் நீயும் நானும் போவோமே

பெண்: பூமியின் அடிப்புறம் வேர்களாய் நீண்ட தூரம் போவோமே

ஆண்: கோடி மேகங்கள் தலைமீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே

பெண்: நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே

ஆண்: என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை (காதல்)

Watch Veyil Video Songs Here

Download Veyyil Mp3 Songs Here

Veyil Veyyil Tamil Video Songs GV.Prakashkumar Bharath Bhavana PAsupathy Shreya Reddy
Kadhal Nerupin kathal Nerupen kaathal neruppin Lyrics Karthik Nithesh, Chinmaye


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்