சிலருக்கு பலவிடயங்கள் தெரியலாம்.பலருக்கு சில விடயங்கள் தெரியலாம்.ஆனால் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டியதில்லை.அந்த வகையில் தெரியாதோருக்கு இந்த ஒரு அறிமுகம்.
தமிழில் வலைப்பூக்களை திரட்ட தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்பிளாக்ஸ் போன்ற வலைப்பூக்களை திரட்டும் வலையகங்கள் இருக்க ஆங்கில வலைப்பூக்களுக்கு அப்படி ஏதாவது பிளாக்களை திரட்டும் வெப்சைட் உண்டா என சிலருக்கு கேள்வி எழுவதுண்டு.
அப்படிப்பட்டவர்களுக்கு பதிலாக அமைவது தான் http://www.Technorati.com டெக்னோரட்டி எனப்படும் மிக வெற்றிநடைபோடும் வலையகம்.இங்கு உங்கள் ஆங்கில மற்றும் எந்த மொழி வலைப்பூவையும் பதிவு செய்யலாம்.பதிக்கப்பட்ட வலைப்பூக்கள் டெக்னோரட்டியால் திரட்டப்படும்.
பல்லாயிரக்கணக்கான வலைப்பூக்களை இது திரட்டுவதால் போட்டி அதிகம்.அதனால் tags,ping வசதி கொடுத்திருக்கிறார்கள்.
இது இப்போது 35.3 மில்லியன் வலைப்பூக்களை திரட்டுகிறது.ஒவ்வொரு 6 மாதமும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிறதாம்.அதாவது தினமும் 75,000 புது பிளாகுகள் சேர்க்கப்படுகின்றது.மேலும் இங்கு தினமும் 1.2 மில்லியன் பதிவுகள் போடப்படுகிறன்து.அதாவது ஒரு மணி நேரத்துக்கு 50,000 பதிவுகள். :)
இதில் இணைய நீங்கள் இங்கு செல்ல வேண்டும்.http://technorati.com/signup/
உங்கள் வலைப்பூவை இங்கு சேர்க்க இங்கு செல்லவும்.http://technorati.com/account/blogs/claim.html
டேக் எப்படி இணைப்பது என இங்கு பார்த்து தெரியவும் http://technorati.com/help/tags.html
டெக்னோரட்டியுடன் பிங் செய்ய இங்கே வழி http://technorati.com/developers/ping/
டெக்னோரட்டி படி உலகின் டாப் 100 வலைப்பூக்கள் http://technorati.com/pop/blogs/
இந்த வலையகம் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
Download this post as PDF
1 comment:
நன்றி தல.
Post a Comment