தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விலாசம் இருப்பது போல இணையத்திலுள்ள ஒவ்வொரு கணிணிக்கும் ஒரு ஐபி அட்ரெஸ் என்பது விதி.அந்த ஐபி அட்ரெஸ் வைத்து தான் கணிணிகள் தங்களுக்குள்ளே அடையாளம் கண்டு கொள்கின்றன.தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.
எடுத்துகாட்டாக இன்றைய நிலையில் ஒரு ஐபி அட்ரசை எடுத்தால் அதன் அமைப்பு இவ்வாறு
இருக்கும்.
192.168.0.1.
உங்கள் கணிணிக்கு இப்போது இணையத்தில் என்ன ஐபி வழங்கப்பட்டுள்ளது என இங்கே சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.(கூடவே உங்கள் இருப்பிடத்தையும் பிட்டு வைக்கிறது).இந்த மிகப் பழைய ஐபி முறையை IPv4 என்கிறார்கள்.
இதுவரைக்கும் அரசாண்டு வந்த இந்த ஐபிவடிவம்-4 க்கு இறுதிகாலம் வந்துவிட்டது.ஏனென்றால் இந்த முறைப்படி எத்தனை லட்சம் (அதாவது 4.3 பில்லியன்) கணிணிகளுக்கு ஐபி நம்பர்கள் கொடுக்க முடியுமோ அதையும் தாண்டி அளவுக்கு அதிகமான கணிணிகள் உலகில் வந்துவிட்டன.
இந்த ஐபி அட்ரெஸ் தட்டுப்பாட்டை போக்க வந்தது தான் IPv6.இப்போது வெளியாகும் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் IPv6- யை கொண்டே வருகின்றன.
சொல்லப்போனால் 2009-ல் 192.168.0.1 ரக ஐபி முறை முற்றிலும் இருக்கவே இருக்காது.அமெரிக்க அரசு தனது அரசாங்க நெட்வொர்க்கை 2008-முடிவுக்குள் முற்றிலும் IPv6 மயமாக்க கெடு விதித்துள்ளது.ஆக யாரும் இந்த IPv6 க்கு தப்பமுடியாது.
So Whats New In IPv6.
இதன் அமைப்பு சற்று வித்தியாசமாய் கோடானுகோடி கணிணிகளை கொள்ளும் அளவுக்கு
அமைக்கப்பட்டிருக்கிறது.அதாவது 340,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 கணிணிகளுக்கு ஐபி அட்ரஸ் வழங்கலாமாம்.
ஐபிv6-க்கு ஒரு எடுத்துகாட்டு
2016:0fe8::0000:0000:0000:1975:69bf.
அதாவது இவை HexaDecimal எண்கள்.
Browser url-ல் ஐபி அட்ரெஸ் நாம் வருங்காலத்தில் டைப்பும் போது இப்படியாக டைப்ப வேண்டியது வரும்
போர்ட் நம்பர் இல்லாமல்
http://[2016:0fe8::0000:0000:0000:1975:69bf]/
போர்ட் நம்பரோடு-இங்கு போர்ட் நம்பர் 443
http://[2016:0fe8::0000:0000:0000:1975:69bf]:443/
To Test IPv6 connectivity
http://ipv6-test.singnet.com.sg/cgi-bin/IPv6-Test
Already IPv6 Enabled Websites list
http://www.ipv6.org/v6-www.html
மேலும் தகவல்கள்
http://en.wikipedia.org/wiki/IPv6
Download this post as PDF
5 comments:
//ஏனென்றால் இந்த முறைப்படி எத்தனை லட்சம் (அதாவது 4.3 மில்லியன்) கணிணிகளுக்கு ஐபி நம்பர்கள் கொடுக்க முடியுமோ அதையும் தாண்டி அளவுக்கு அதிகமான கணிணிகள் உலகில் வந்துவிட்டன.//
4.3 Million or Billion ?
4.3 Million is just 4300000 .
வாவ்,Good Catch.
அது பில்லியன்களே.
:)
நீங்கள் சொன்ன விக்கிபீடியாவிலிருந்து...
India also seems to be moving ahead of the United States in this area
வாவ்.... நல்ல பதிவு.
ipv6 இன் தேவையைப் பற்றி கடந்த ஆறு ஏழு வருடமாகப் பேசி வருகிறார்கள் ,இருந்தாலும் நீங்கள் சொல்வது மாதிரி ஒவர் நைட் இல் மாறாது .Ipv4 அவ்வுளவு சீக்கிரம் காலாவாதியாகாது .
இந்தப் பிரச்சனை இவ்வளவு காலம் தாக்குப் பிடித்தற்கான பிராதானக் காரணங்கள் இரண்டு
1.NAT
2.CIDR
இதனால் இவ்வளவு காலமும் தாக்குப் பிடித்தோம் ..இப்போதும் nat modela லால் நீங்கள் எழுதுகிற அளவுக்குப் ip address ஒரு பிரச்சினையாக இல்லை. வராது . NAT is taking care of most of the issues regarding to the shortage of ip addresses.And now a days equipment vendors are alos full flown hardware support for all kind of nat .So its not a very critical issue in current Internet infrastructure .
But eventually its going to be a problem if all the house hold items are turn out to be IP based like tv is thro ip ,wireless , etc
And again its not a serious issue in USA as they hold the most of class A and Class B addresses which occupies majarity of Ipv4 address .So the developing countries like china and India is in serious trouble because the shortage of addresses.And already Japan is feeling the pressure and they are the only people who runs big time IPV6 network currently ,so eventually India and China will follow the same soon .
And still ipv4 wont go away that easy ,as majaority of the infrastructure (99%) is ipv4 based ,its not easy to migrate to ipv6 Still Ipv6 is not matured in lot of ways .So wait guys wait
This article is like good thread to start to understand the Ipv6 .but its like tamil magaizine article .
Baranee,anony மற்றும் கூத்தாடிக்கு நன்றிகள் பல.
கூத்தாடியின் விரிவான விளக்கம் பலே,கடைசி வரி தான் உதைக்குது.What you mean by "but its like tamil magaizine article ." ???
:)
Post a Comment