குர்கான்,மொகாலி,ஐதராபாத்,பெங்களூரில் வாடிக்கையாளார் சேவை மையங்களைக் (Customer Service Call Centers)கொண்ட அமெரிக்காவைச் (Round Rock, Texas) சேர்ந்த டெல்-Dell நிறுவனம் இந்தியாவில் அதுவும் சென்னையில் தனது கணிணி உற்பத்தி தொழிற்சாலையை (Manufacturing Unit) திறக்கின்றது இனிப்பான செய்தி.ஏற்கனவே 8 உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்ட இந்நிறுவனத்திற்கு ஆசிய பசிபிக் பகுதியில் இது 3 ஆவது உற்பத்தி தொழிற்சாலை.50 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூர் Hi-Tech Park-ல் 280 கோடி ரூபாய் செலவில் இது அமையவிருக்கின்றது.அடுத்த ஆண்டு மத்தியில் "Made in India" என்ற பொறியோடு dell கணிணிகள் ஓகோவென வெளியாகும்.ஒரு ஆண்டுக்கு 400,000 கணிணிகள் உற்பத்திசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.20000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
1984- ஆம் ஆண்டு Michael Dell (படம்) என்ற University of Texas ( Austin)மாணவரால் வெறும் 1000 டாலரில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி அபாரம்.இன்று 63,700 பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள்.தற்போதைய President மற்றும் CEO Kevin Rollins.
சுவையான தகவல் என்னவென்றால் இந்நிறுவன கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகள் கடைகளில், மால்களில் விலைக்கு கிடைப்பதில்லை.இணையம் மற்றும் தொலைபேசி வழியே தான் மொத்த வர்த்தகமும் நடக்கின்றது.இவர்கள் கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப பிரபலம்.Alienware எனப்படும் உச்ச வகை மடிக்கணிணிகளும் இப்போது இவர்களோடதே.
Download this post as PDF
No comments:
Post a Comment