மென்புத்தகங்களை Pdf வடிவில் படிக்கும் போது சீக்கிரமே அலுப்பு தட்டிவிடுகின்றது. சிலர் மென்புத்தகங்களை சேகரிப்பதோடு சரி. வாசிப்பது என்னமோ அபூர்வம் தான்.சிலர் மென்புத்தகங்களை அதிக ஆர்வமாய் வாசிக்க விழையும் போது அதை வீட்டு பிரிண்டரிலேயே அச்சிட்டு படிக்க முயல்வதும் உண்டு. அதிவேக லேசர் பிரிண்டர்கள் தாம் இப்போது வீடுகளுக்கு கூட கைகூடும் விலைக்கு வந்துவிட்டதே. ஆனாலும் சில டெவலபர்கள் மென்புத்தகங்களை மென்புத்தகவடிவிலேயே நம்மை படிக்க செய்ய
போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் அதை புரட்டும் புத்தகவடிவிலே தருவது.http://www.scribd.com போலல்லாது http://issuu.com-ல் ஏற்றம் செய்யப்படும் மென்புத்தகங்களை நீங்கள் புரட்டும் வடிவிலேயே அதாவது சாதாரண காகிதபுத்தகங்களை எப்படி புரட்டுவோமோ அதே புரட்டும் எஃபக்டில் படிக்கலாம். உதாரணத்துக்கு இங்கே ஒரு தமிழ் மென்புத்தகத்தை பாருங்கள்.
http://issuu.com/siva_asokan/docs/englishtotamildictionary
இது போன்ற வழங்கல் நம்மை மேலும் படிக்க தூண்டுவதாக உள்ளது. ஆனாலும் எல்லாம் இணைய இணைப்பு இருக்கும் வரை மட்டும் தான். இணைய இணைப்பு இல்லாத போதும் உங்கள் புத்தகங்களை இதே “எஃபக்டில்” படிக்க நீங்கள் http://www.spotbit.com/ தளத்தை அணுகலாம். இவர்கள் நீங்கள் கொடுக்கும் மென்புத்தகத்தை .exe வடிவில் மாற்றி உங்களுக்கு தர அதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம். இணைய இணைப்பு இல்லாத போதும் படிக்கலாம்.
இணையத்தில் எங்கும் அப்லோடு செய்யாமலே என்னிடம் இருக்கும் pdf கோப்புகளை புரட்டும் புத்தகவடிவில் காட்ட எதாவது மென்பொருள் இருக்கிறதாவென தேடியதில் POKAT reader கிடைத்தது. இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் உங்கள் கணிணியில் உள்ள எல்லா pdf கோப்புகளையும் அது புரட்டும் புத்தகவடிவில் காட்டும். நீங்கள் படிக்கும் pdf புத்தகங்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து அது தனியாக ஒரு மென்நூல் நூலகம் ஒன்றையும் பராமரிக்குமாம்.
Download Free POKAT reader
மென்புத்தகங்களை படிக்க இனி தனி ஆர்வமே வரும் போல தெரிகின்றது. பார்க்கலாம்.
அது உங்களுக்குதிரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்” -பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ். இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”. |

