உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, November 16, 2009

இலவசங்களின் அருமை

கேமராக்களை வைத்து சுட்டு கிடைக்கும் வீடியோக்களில் சில வகையான AVI கோப்புகள் நம் ஹார்ட்டிரைவில் கன்னாபின்னாவென அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளுகின்றன. இதனை Mpeg கோப்புகளாக மாற்றினால் கோப்புகளின் அளவு கணிசமாக குறைவதோடு பெரிதாக தரமும் இழப்பதாக தெரியவில்லை. இப்படி 5Gig AVI கோப்பு ஒன்றை Mpeg ஃபார்மேட்டுக்கு மாற்றியதில் 1Gig ஆக மாறி ஹார்ட்டிரைவில் நிறைய எக்ஸ்ட்ரா இடம் கிடைத்தது . தரமும் நன்றாக இருந்தது.

Vlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.

விஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து.
அதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.

இங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.

இப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால் அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.


நண்பர் “உருப்புடாதது_ அணிமா” நினைவு படுத்திய Track Synchronization வசதியையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். சில சமயங்களில் மூவி பார்க்கும் போது அதன் வீடியோவானது முந்திசென்று ஒலி லேட்டாக வர அது எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.

வீடியோவில் தோன்றும் மனிதர்களின் வாயசைவுக்கு ஒலிக்கும் வார்த்தைகள் ஒத்திருப்பதில்லை. இதை சரிசெய்ய உதவுவது தான் இந்த டிராக் சிங்க் வசதி.Vlc media player-ல் Tools-->Track Synchronization-ல் நொடிகளை கூட்டி குறைத்து ஆடியோவை
வீடியோவுக்கு இணையாக்கி கொண்டுவரலாம். சப்டைட்டில்கள் கூட கட்டுப்பாடின்றி ஓடினால் அவற்றையும் நம் வேகத்துக்கு கொண்டுவர இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இலவசங்களின் அருமை நமக்கு பலவேளை தெரிவதில்லை என கோபால் அடிக்கடி சொல்லுவான். நிஜம் தான் போலும்.


எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.எஸ்.திருச்செல்வம் “மகாகவி பாரதி வரலாற்றுச்சுருக்கம்” தமிழ் மென்புத்தகம். S.ThiruSelvam "Mahakavi Bharathi Varalaatru Surukkam" in Tamil pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பயனுள்ள பதிவு
நன்றி

radjasiva said...

மிக உபயோகமான தகவல்--நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்