இந்த தேங்க்ஸ் கிவிங்கோடு ஒன்று மட்டும் புரிந்தது. சாதாரணமாக ரெஸ்டாரெண்டுகளில் மட்டுமே காணப்படும் நுகர்கலாச்சாரம், அது சில்லறை வணிகத்திலும் புகுந்துவிட்டதென. இங்கே ரெஸ்டாரெண்டுகளில் அத்தியாவசியமான தண்ணீர் கொடுக்கமாட்டார்கள். பதிலாக பீனக்கலோடாவோ அல்லது பீரோ விட்டுக்கொண்டு கரோகே பாடவேண்டும் பெரும்பாலும் பவுன்சர்கள் தேவைப்பட மாட்டார்கள். பிகேவ் யுவர்செல்ப் தான். வெஜிடேரியன்கள் சோடாவில் நிற்பார்கள். அதுபோலவே மால்களிலும் ஆன்லைன்மால்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூடி இருக்க அநாவசிய பொருட்களின் விலை வெகுவாக சரிந்திருந்தது. Nokia 5530 மாடல் 129-டாலருக்கும் , காம்பேக் நெட்புக் ஒன்று 189 டாலருக்கும், நெட்பிளிக்ஸ் இணைய இணைப்பு கொண்ட 47 இஞ்ச் LG டிவி 897 டாலருக்கும், 500Gig Western digital டாலர் 50க்கும், டொசிபா புளூரே பிளயர்கள் டாலர் 80 க்குமென சோற்றைத்தவிர மிச்சமெல்லாம் விலை குறைந்திருந்தது. அப்படித்தான் நினைத்திருந்தேன்.
பர்கர்கிங்கில் தினம் நாலு டாலருக்கு ரெண்டு சாண்ட்விச் டீலை நினைவுபடுத்தினான் கோபால். எல்லாரும் கிடைத்தவரைக்கும் துட்டை கறக்கப்பார்க்கின்றார்கள்.
ஆன்லைன் டீல்கள் பிடிக்கும் சூட்டைப்பார்த்தால் சீக்கிரமே சாலையோரத்தில் நிமிர்ந்து நிற்கும் மெகாமால்களெல்லாம் நடைகட்டிவிடும் போலிருக்கின்றது. ஏற்கனவே பரவிக்கிடந்த பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ்கள் இப்போது எண்ணும் எண்ணிக்கையிலேயே. நாம் கடையேறும் காலங்கள் சீக்கிரமே மலையேறிவிடும். எல்லா ஆன்லைன் டீலும் போக, புதிதாக அறிமுகமாகியிருக்கும் Bing Cashback ஆன்லைனில் இன்னும் அதிகமாக வாங்க உற்சாகமூட்டுகின்றது. அமெரிக்காவில் வாழும் நம்மவர்கள் முயன்றுபார்க்கலாம். அதிகம் சேமிக்கலாம்.
ஆன்லைன்மால்கள் நிஜக்கடைகளை மூடிவிட,ஆன்லைன் பேங்கிங் பல கிளைகளை மூடிவிட, மின்னஞ்சல்கள் தபால் துறையை பலி கேட்க, இணைய செய்தி மூலங்கள் காகித செய்திதாள்களை காவுகேட்க எல்லாமே இணையம்வழி இருப்பதால் பலதுறைகளும் வேலைவாய்ப்புகளும் சாவின் விளிம்பில். தொழில்நுட்ப வசதிகள் பெருகப் பெருக பலரின் வாழ்க்கை வசதியானாலும் யாரோ பலருடைய வாழ்க்கை எங்கேயோ பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
![]() விரும்பியும் திரும்பாது! |


No comments:
Post a Comment