சில துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் வெளிஉலகுக்கு அதிகமாக தெரியவர வருவதில்லை. இந்நுட்பங்கள் பிற துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படாததே அதன் காரணம். உதாரணமாக தொலைக்காட்சி மீடியாக்களை எடுத்துக்கொள்ளலாம். செய்தி நேரத்தின் போது நம்மை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே புள்ளிவிவரங்களை கொட்டி இனிய தமிழில் செய்தி வாசிப்பார்கள். சில ஷோக்களில் பேசுபவர்கள், விழிகளை நம்மீதிருந்து எடுக்காமலேயே அடுக்கு மொழியில் பல விவரங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியம்?. அத்தனை விசயங்களையும் அவர் நினைவில் வைத்துக்கொண்டா பேசுகின்றார் என்றால் இல்லை, அங்கே டெலிபிராம்டர் எனும் கருவி அவர்களுக்கு உதவிக்கு வருகின்றது. அவர்கள் முன்னால் இருக்கும் மானிட்டர் ஒன்றில் இவர்கள் பேசும் பேச்சு ஏற்கனவே எழுதப்பட்டு இவர்கள் வாசிக்கும் வேகத்துக்கு ஒருவர் அதை ஸ்க்ரோல் பண்ணிக்கொண்டே வருகின்றார் என்பது தான் உண்மை. சிலரின் டெலிபிராம்டர்கள் இடையே மக்கர் செய்ய, உடனே வாசிப்பவர் படும் அவஸ்தை (வீடியோ) கொடுமையானது. இங்கே டாக் ஷோ பிரபல Bill O'Reilly-ன் டெலிபிராம்டர் மக்கர் செய்ய என்ன நடக்குதுவென பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Qy-Y3HJNU_s
ஆகுமெண்டட் ரியாலிட்டி என்று இன்னொரு நுட்பம் (Augmented Reality) அது தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இப்போது பொது ஜனங்களும் எட்டும் அளவில் வந்துகொண்டிருக்கின்றது. கிரிக்கட் மைதானத்தில் ஒருவர் ஓட அவரையே தொலைக்காட்சியில் ஒரு அம்புகுறி துரத்துவதை பார்த்திருப்பீர்கள். நிஜவாழ்வு பொருளோடு கணிணியை பின்னிவிடுவது தான் இந்த AR வழி செய்யும் முயற்சி .உதாரணத்துக்கு கிரிக்கட் மைதானத்தில் பெரிய பெப்சி விளம்பர பில்போர்டு இருந்தால் அதை தொலைக்காட்சி சேனல்காரர்கள் உங்களுக்கு கோக்காக மாற்றி காட்டமுடியும். முழு விளையாட்டின் போதும் அந்த விளம்பர தட்டி உங்களுக்கு கோக் விளம்பரத்தையே காட்டும். வீடுகளில் ஒற்றைக்கு ஒன்றாய் இருக்கும் குழந்தைகள் திரையில் தோன்றும் கார்டூன் கதாபாத்திரங்களோடு நிஜ உலகில் ஓடி ஆடி விளையாடலாம் (வீடியோ). ஐபோன் கேமராவில் தெருவை நோக்கினால் பக்கத்திலிருக்கும் கட்டிடங்களை, ரெஸ்டார்ண்டுகளை லைவாக அது அம்புகுறியிட்டு காட்டி விளக்கும்(படம்). இப்படி இந்த ஆகுமெண்டட் ரியாலிட்டி பொதுவாழ்க்கைக்கு வந்தாலும் வந்தது அதன் சாத்தியக்கூறுகள் கட்டற்று போய்க்கொண்டே இருக்கின்றது.
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!” -தாகூர் |
செ.கணேசலிங்கன் “நீண்ட பயணம்” தமிழ் புதினம் மென்புத்தகம். Se.Ganesalingam "Neenda Payanam" Novel in Tamil Pdf ebook Download. Click and Save.Download
Download this post as PDF
5 comments:
how it possible? any software
can you give me more details i want to buy for my child..
வணக்கம் பிகேபி உங்க பதிவ ரொம்ப நாள படிக்கிறேன் ரொம்ப அறுமை அப்படியே நம்ப ஊட்டுக்கும் வாங்க
http://mannairajesh.blogspot.com/
இந்த பதிவுலகிற்கு புதியவன்தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்…. jskpondy.blogspot.com
ayya, vivaram theriyama gay marriage pathi pesa koodathu!
thats not meant to reduce population or some sex act. Its just like men-woman relationship. Few % of people in the world do have same-sex attraction and this is natural.
Read more websites, know better. You dont need to help or agree. but atleast dont show your hatred.
Post a Comment