உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, January 03, 2010

இரு ஜீ-க்கள்

மின்னல் வேகத்தில் இன்னொரு வருடத்தை வரவேற்க வந்துவிட்டோம். ஆரியக் கூத்தாடினாலும் அது என்ன நிக்கவா போகின்றது. மாற்று ஆற்றல், பூமியை குடைந்து
ஜியோ தெர்மல் அப்படி இப்படி என சமுதாயத்துக்கு எதாவது செய்ய சிலர் மூளையை குழப்பிக்கொண்டிருக்கும் போது இன்னும் சிலருக்கோ கே-மேரேஜும், கோ-கிரீனும் தான் ரொம்ப முக்கியமாய் தெரிகின்றது. போராடி ஓரினக்கல்யாணத்தை சட்டபடியாக்கி பின்னால் என்னத்தை கிழிக்கப்போகின்றார்களோ?.மக்கள் தொகையை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் வழியா? பள்ளி பள்ளியாய் சிறார்களுக்கு அது ஒன்றும் குற்ற மனப்பான்மை கொள்ள தவறான செய்கை அல்ல. உங்களுக்கு பிடித்திருந்தால் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமென தன்னார்வ தொண்டர்கள் பாடமெடுக்கின்றார்களாம். கேவலம். பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு கூட பயமாயிருக்கின்றது.
http://www.youtube.com/watch?v=16Ed1kb8B6U
http://www.youtube.com/watch?v=UKQXd0MpZA8

தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கிரீன்கவுஸ் வாயுவை டன்கணக்காக அளவிட்டு அதற்கேற்ப ஏழைபாழைகளை வரி கட்ட விடலாமென கோப்பன்கேஹனில் ஒரு சமுதாய பிரச்சனையை காசாக்க பார்த்திருக்கின்றார்கள். இந்த எக்கனாமியில் இப்படித்தான் காசு பண்ணவேண்டுமா? ஏற்கனவே மேலைநாடுகள் இதுவரை மேலே அனுப்பியிருக்கும் டன்கணக்கான கிரீன்கவுஸ் வாயுவை கணக்கிட்டு அதற்கு யார் காசு கொடுப்பதாம். நல்ல டன் டணக்காவாயிருக்கின்றதேவென வளரும் நாடுகள் கேட்டதில் நியாயம் இருப்பதாகவே படுகின்றது. இந்த கிரீன் சமாச்சாரம் இப்போது எல்லா இடங்களிலும் ஒரு மதமாகவே பாவிக்கப்படுவது கொடுமை. செய்கையில் ஒன்றுமில்லாமல் எங்கே ஏறினாலும் நாங்கள் கிரீன் கட்சியாகும் என சும்மாவாச்சும் உளருவதும் மற்றவங்கெல்லாம் கிரீனாகும் முன்னாலே நாங்கள் கிரீனாகும் என பிதற்றுவதும் சோகம்.

புதுக் கணிணி அல்லது மடிக்கணிணி வந்ததும் அதில் அடிக்கடி தேவைப்படும் அத்தியாவசியமான இலவச மென்பொருள்களை நிறுவுவது ஒரு தனி வேலை. அடோபி பி.டி.எப் ரீடர் முதல் பயர்பாக்ஸ், VLC பிளயர் என பல ஒன்றன் பின் ஒன்றாக நிறுவ வேண்டியிருக்கும். இந்த மென்பொருள்களையெல்லாம் ஒரே பொட்டலமாக்கி தரும் வேலையை http://ninite.com/ செய்கின்றது. இங்கு போய் உங்களுக்கு பிடித்தமான மென்பொருள்களை தேர்வு செய்து ஒரு பொட்டலமாக்கி வைத்துக்கொண்டால் அடுத்த புதுக்கணிணியில் இந்த அபிமான மென்பொருள்களையெல்லாம் ஒரே சொடுக்கில் நிறுவிவிடலாம். அடிக்கடி ஃபார்மேட் செய்பவர்களுக்கும் அல்லது புதுக்கணிணிகளை தினம் தினம் கையாள்பவர்களுக்கும் இம்மென்பொருள் உதவலாம். ஏற்கனவே புதுக்கண்ணியோடு வரும் குப்பை மென்பொருள்களையெல்லாம் ஒரே சுடுக்கில் நீக்க PC Decrapifier எனும் மெனும்பொருளை பற்றி "புதுக் கணிணிகளுடன் வரும் குப்பைகள்" எனும் பதிவில் பேசியது நினைவிருக்கலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.


ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..

ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.

யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.

அப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும்

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்

நாயகி - அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு தொகுப்பு லாவண்ஜாய் தமிழ் மென்புத்தகம். Mother Tresa Life in Tamil by Lavan Joy Pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories7 comments:

Raja said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் PKP

Anonymous said...

அய்யா!
அதென்ன “ஆரியக்கூத்து”? புரியும்படி விளக்கிச் சொல்லுங்களேன்?
கூத்தன்

Unknown said...

நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் பதிவினைக் காண்கிறேன்.
நலமா நண்பரே?

இப் புத்தாண்டு, வாழ்வின் அனைத்து சௌபாக்கியங்களையும், சிறப்புக்களையும் கொண்டுவர எனது அன்பான வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !

Anonymous said...

"போராடி ஓரினக்கல்யாணத்தை சட்டபடியாக்கி பின்னால் என்னத்தை கிழிக்கப்போகின்றார்களோ?" - That is a nice pun intended.

திருமூர்த்தி said...

அடியில் கொடுத்திருக்கும் தத்துவங்கள் அருமை.

Anonymous said...

i really don't believe you speak against gay people in your blog. i don't really appreciate your article against them they are not harm to anyone is anyways. being gay is not a bad thing and is not a thing to be ashamed off!

Vasanth said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பி.கே.பி!!

ஏற்கனவே தங்கள் வலைபக்கத்தில் வரும் Today's Special விசயங்கள் தான் என்னுடைய Desktop-ஐ அலங்கரிக்கிறது.. இந்த முறை இத்தனை நல்ல விசயங்களா!! வாழ்த்துக்கள்!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்