தொலைவிலிருந்தும் நம்மால் பேசமுடிந்ததால் அது தொலைபேசியாயிற்று. அப்புறம் கையிலெடுத்தவாறே நடந்து பேசமுடிந்ததால் கைப்பேசியானது. சென்றவாறே பேச முடிந்ததால் செல்பேசியும் என்றோம். இப்போது வந்திருக்கின்றதே இந்த ஸ்மார்ட் போன்கள். இதை தமிழில் எப்படி சொல்லலாமென யோசித்தபோது கோபால் இதில் அதிகம் செய்யமுடிவதால் இதை அதிபேசி எனலாமோவென்றான். எனக்கு கணிப்பேசி எனும் சொல்பிடித்திருந்தது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
இந்த ஸ்மார்ட்போன்களின் தொல்லை இப்போதெல்லாம் தாங்க முடிகிறதில்லை. இதைக்கொண்டு என்ன செய்யமுடியும் என்பதைவிட என்னசெய்ய முடியாது என்பதை கண்டுபிடிப்பதுதான் மிகக் கஷ்டம்.
முதலில் சுட்டெலி தேவையில்லை. அதாங்க கணிணி மவுஸ் தேவையில்லை. உங்கள் போனையே மவுசாக பயன்படுத்தலாம் என்றார்கள். அருமையாக வேலை செய்தது. முக்கியமாக டிவியில் மடிக்கணிணி திரையை பார்த்தபோது.
Mobile Air Mouse
இப்போது வீட்டிலிருக்கும் ரிமோட்டுகளையெல்லாம் கொண்டு போய் குப்பையில் போடுங்கள். எல்லா ரிமோட்டையும் உங்கள் கைப்பேசியே பார்த்துக் கொள்ளும் என்கின்றார்கள். டிவியில் சேனல் மாத்துறது முதல் DVR, DVD பிளயரையெல்லாம் கைப்பேசி கொண்டு இயக்கலாமாம்.
Redeye
போதாக்குறைக்கு கார் கீயையும் தொட்டுவிட்டார்கள். இந்த கைப்பேசி கொண்டே வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம், ஆஃப்செய்யலாம், கதவை திறக்கலாம், பூட்டலாம். இப்படி நீள்கின்றது லிஸ்ட். அதுவும் எவ்வளவு தூரத்திலிருந்தும் செய்யலாமாம். எல்லாம் இணையம் வழி அல்லவா?
Viper Smartstart
இன்னொரு கும்பல் உங்கள் கைப்பேசி கேமராவில் நீங்கள் பிடிப்பவற்றை அப்படியே லைவ்வாக இணையத்தில் ஒளிபரப்பவும் வசதி செய்துதந்திருப்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
Ustream.tv
அது மட்டுமா, வீட்டிலிருக்கும் ஹீட்டரை அல்லது ஏர்கண்டிசனரை தூரத்திலிருந்தே உங்கள் கைப்பேசி வழியே கட்டுப்படுத்தவும் இப்போது வழிகொண்டு வந்திருக்கின்றார்கள். Ecobee
அப்படியே வீட்டிலிருக்கும் பாதுகாப்பு அலாரத்தையும் அறைவாரியாக ஆன் செய்ய அல்லது ஆஃப் செய்ய உங்கள் கைப்பேசி மட்டும் போதும். அதுவும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தே செய்யலாம்.
e-Secure
இப்படி இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகின்றது. இப்போதைக்கு மெத்தவசதியாக இவை கிடைக்காவிட்டாலும் இன்றைய கணிப்பேசிகள் போகும் போக்கை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடிகின்றது. கொஞ்சகாலத்தில் பெரும்பாலான எல்லா சின்ன சின்ன கொத்துச் சாவிகளையும் திறப்புகளையும் ரிமோட்டுகளையும் டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் கைப்பேசிகளே பார்த்துக்கொள்ளும் போலிருக்கின்றது.
சுவிச்சு போட்டா லைட்டெரிய வைக்கும் போன்ற சுவிட் தாயாரிப்பவர்களும் வேறுவேலை தேடவேண்டியிருக்கும். வீட்டு மின்விளக்கு கட்டுபாடுகளெல்லாம் 2013-ல் கைப்பேசியில் வந்துவிடுமே.சுவிட்ச் எதற்கு?
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். -சாமுவேல் ஜான்சன். |
Download this post as PDF
10 comments:
நல்ல தகவல்கள்..நன்றி.
Nice writing...but making lights to switch via phone are any remote component need lot of intelligent's to be added to them and identification protocol stuffs like blue tooths has. This will be a fancy stuff(added feature) which keep still switch manufacturers alive in business.
ஒவ்வொரு முறையும் யோசிக்க வைத்துவிடுகிறீர்கள் தங்களின் மொத்த பதிவுகளையும் ஒரு புத்தகமாக வெளியிட்டால் நிச்சியம் புதியவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
நான் சொல்வதை மிகைபடுத்துவதாக நினைக்கவேண்டம் எனது சந்தேகங்களை கூகுளில் தேடும்முன் தங்கள் தளத்தில் தேடுவதுதான் வழக்கம்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
வாவ் !!!!!அருமை....
"பகிர்வுக்கு மிக்க நன்றி PKP"
அனபின் பிகேபி,
எதிர்காலத்திய தொழில்நுட்பத்தை பற்றி அருமையான கணிப்புகள். உங்களுடைய மென்கொடையையும் , இந்த கைப்பேசி to கணிப்பேசியையும் சேர்த்து ஒரு மென்கொடை - ver 1.1 ஆக வெகுநாளைக்கு பிறகு முட்டை ஒன்று போட்டுள்ளேன். அது குஞ்சாக பொரிப்பதில் ஏதும் தடைகள் ஏற்படுமா? என்பதை சொல்லவும். நன்றி.
with care & love,
Muhammad Ismail .H, PHD.,
நல்ல பயனுளள பதிவுகள் தொடர்ந்து தரும் உங்களுக்கு நன்றிகள்.
நண்பரே நல்லா இருந்தது!!!!!
கணிப்பேசி - பொருத்தமான, அழகான வார்த்தை. விரைவில் இணையத்தில் பிரபலமாகும் என்று நம்புகிறேன். பயனுள்ள தகவகளுக்கு மிக்க நன்றி.
ஸ்ரீ....
I think one of your advertisements caused my internet browser to resize, you might want to put that on your blacklist.
very nice
Post a Comment