உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 28, 2010

இணையத்தில் ஒருநாள்

”ரூவாய் நோட்டுக்களை தெருவில் வாரியிறைத்து போட்டுக்கொண்டு போனாலும் போய் எடுத்துக்கமாட்டோம். நான் உழைச்சு சம்பாதித்சது. அது மட்டும் எனக்கு போதும், மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே. சங்குசுட்டாலும் வெண்மை தரும். பட்டினி கிடந்தாலும், நீத்தண்ணி குடிச்சு வளர்ந்தாலும் இலவசமாய் கிடைக்கும் எந்த மண்ணாங்கட்டியும் எனக்கு தேவையில்லை” என வீராவேசமாக பேசும் அந்த காலத்து பெரியவர்களிடம் உட்கார்ந்து கதை கேட்டால் பொறாமையாய் இருக்கும். ஒருகாலத்தில் பெரும்பாலும் நம்ம எல்லார் தாத்தாவும் இந்த மனப்பான்மையில் தான் இருந்திருக்கின்றார்கள். இன்றைக்கு எவ்வளவு மாறிவிட்டோம். கிடைக்கும் இலவசத்தை ஒன்றுக்கு இரண்டாக அமுக்காவிட்டால் இளிச்சவாயன் பட்டம். அமெரிக்காவில் கூட வேலையில்லாதோருக்கு அரசு கொடுக்கும் அன்எம்ப்ளாய்மெண்ட் பணத்தால் சிலர் வேலை கிடைத்தும், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே டேரா போடுகின்றார்களாம்.

நண்பர் Muhammad Ismail .H, PHD அவர்கள் அவ்வப்போது நம் வலைப்பக்கம் வந்து நீண்ட பின்னூட்டம் இட்டு செல்வதுண்டு, இவர் தனது PHD-க்கு அளிக்கும் விளக்கம் மிக வித்தியாசமானது, சுவாரஸ்யமானது. அவர் வழியாக புண்ணூட்டம் என்ற இன்னொரு சொல்லும் அறிந்தேன். என்ன அருமையான வார்த்தை. அனுபவித்ததால் பேசமுடிகின்றது. நண்பர் முகமது சமீபத்தில் மென்கொடை - ver 1.1 என்றொரு பதிவை இட்டிருந்தார். மென்கொடை வழங்க விரும்புவோர் கடனட்டை வழியாகவோ அல்லது பேபால் வழியாகவோ மட்டுமின்றி கைப்பேசியின் வழியாகவும் தொகைகளை அனுப்ப/பெற வசதி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த Mobile Payment Gateway-யான http://www.obopay.co.in-க்கு நான் செல்லும் போதெல்லாம் அது படுத்து இருக்கின்றது. நல்ல முயற்சியாக தெரிந்தாலும், எப்போதும் செர்வர் டவுனாக இருப்பது நல்லதல்லவே.

இணையத்தில் சராசரியாக ஒருநாளை எடுத்துக்கொண்டால், அந்நாளில் மட்டும் என்னென்னவெல்லாம் நடக்கின்றனவென பாருங்கள். ஒருநாள் மட்டும் அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் எண்ணிக்கை 210 பில்லியன்களாம். இது அமெரிக்க தபால்துறையானது ஒருவருடம் முழுவதும் கையாளும் தபால்களின் எண்ணிக்கை. ஃபிளிக்கரில் ஒருநாள் மட்டும் 3 மில்லியன் போட்டோக்கள் ஏற்றம் செய்யப்படுகின்றன. இது கொண்டு 375,000 பக்கங்கள் கொண்ட போட்டோ ஆல்பத்தை நிரப்பலாமாம். செல்போன்கள் தங்களுக்குள்ளே தினமும் 43,339,547 கிகாபைட்டுகள் அளவு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. இத்தகவல்களை சேமிக்க நாம் முனைந்தால் அதற்கு 9.2 மில்லியன் டிவிடிக்கள் தேவைப்படும். தினம் தினம் 700,000 புதிய நபர்கள் பேஸ்புக்கில் சேருகின்றார்கள். அது கயானா நாட்டின் மக்கள்தொகைக்கு சமானம். ஒருநாள் மட்டும் 900,000 பதிவுகள் வலைப்பதிவுகளில் எழுதப்படுகின்றன. இது கொண்டு 19 வருடகால நியூயார்க் டைம்ஸ் நாளிதழை நிறைக்கலாமாம். இப்படி இணையம் இவ்ளோ பெரிசாக இருக்கின்றது. அதெல்லாம் இருக்கட்டும், இப்பதிவால் எங்களுக்கு என்ன பிரயோஜனமென கேட்கின்றீர்களா? என்னை விட்டுத்தள்ளுங்கள், பிரயோஜனம் தரும் ஒரு சில வலைப்பக்கங்களையாவது இலவசமாக படிக்காமல் அவ்வப்போது சிறுசிறு மென்கொடைகளை தந்து உற்சாகப்படுத்தலாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும். ஏன்னா பல தமிழ்வலைப்பக்கங்களும் losing the battle. கடைசியாக கேள்விப்பட்டது. http://www.tamilnation.org ”பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்பது புறநானூறு வரிகள். அர்த்தம் என்னமோ?


வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

வித்துவான் சேஷையங்கார் “ஆதியூர் அவதானி சரிதம்” 1875-ல் முதலில் வெளிவந்த தமிழ் நாவல் மென்புத்தகம்.ATHIYUR AVADHANI or THE SELF - MADE MAN An Orignal Tamil Novel ebook Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

Vetri said...

உங்கள் வலைப்பதிவை 2 வருடங்களாக படித்து வருகிறேன். உங்கள் பதிவுகள் தமிழ் சமூகத்திற்கு மிக சிறந்த கொடை.

மாயா said...

tamilnation இணையத்தளத்ததினை நான் நீண்ட காலமாக பாவித்து வந்தவன் என்ற ரீதியில் எனக்கு கவலையாகத் தான் இருக்கிறது, அத்துடன் அவ்வலைத்தளம் எக்கச்சக்கமான விடையங்களை உள்ளடக்கியிருந்தது...

HK Arun said...

தமிழரின் வரலாற்று தொகுப்புகளின் கலைக்களஞ்சியமாகவே நான் தமிழ்நேசன் தளத்தைப் பார்த்தேன்.

தொடரிழப்புகள் மத்தியில் இத்தளத்தின் இழப்பும் மிக வேதனையைத் தருகின்றது.

Anonymous said...

நல்ல தகவல் நண்பரே

Unknown said...

”ரூவாய் நோட்டுக்களை தெருவில் வாரியிறைத்து போட்டுக்கொண்டு போனாலும் போய் எடுத்துக்கமாட்டோம். நான் உழைச்சு சம்பாதித்சது. அது மட்டும் எனக்கு போதும், மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே.//நல்ல விசயம்.இதெல்லாம் அப்படியா இருந்தாங்க ந்னு கேட்டு தெரிஞுக்க வேண்டியது தான்.....

butterfly Surya said...

பயனுள்ள பதிவு.

தகவல் திரட்டுகள் அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்