காலம் மாற மாற காசும் கைமாறிக் கொண்டிருப்பது தவிர்க முடியாதது போல. கூடவே பயணித்தால் தப்பித்தோம். கொஞ்சம் களைத்தாலும் இன்னொருவர் கொத்திக் கொண்டு போய்விடுகின்றார், கொஞ்சகாலத்துக்கு முன்னர் வரை மெயின்பிரேம் முன்னுக்கு இருக்க அது IBM காலமாயிருந்தது. அதுவே வீட்டுக்கு வீடு மேஜை கணிணிகாலமாக மாற அதிஷ்டம் மைக்ரோசாப்ட் பக்கம் வந்தது. புதிய நூற்றாண்டு உதயமான சமயத்தில் இணையம் பக்கமாக ஜூரம் பிடித்ததால் அதிஷ்டகாற்று மைக்ரோசாப்டிடமிருந்து விலகி கூகிளிடம் வந்தது. இப்போது கூகிளின் சகாப்தமும் முடிந்து போனதோ என ஒரு சந்தேகம். காரணம் தற்போதைய டிரெண்ட் ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பியிருப்பதால் இந்த புதிய வருடம் ஸ்மார்ட்போன்களின் வருடமாக இருக்கலாமெனவும் அங்கே ராஜா எதுவோ அது தான் மொத்த மார்கெட்டுக்கும் ராஜாவென்பதால் எல்லாரும் ஸ்மார்ட் மொபைல்போன்கள் சந்தை பக்கம் திரும்பியிருக்கின்றார்கள். கூகிளும் தன் பங்குக்கு தனது புதிய ஸ்மார்ட்போனான நெக்சஸ் ஒன் (Nexus One)-னை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ”அடுத்த முதல் நாங்கள் தான்” என்கின்றது அப்பெயர். ஐபோனுக்கு சரியான போட்டியாக இறங்கியிருக்கும் இது இப்போதைக்கு வெல்லும் நிலையில் இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இன்னும் போராடலாம்.
நெக்சஸ் ஒன் பற்றிய சில குறும் தகவல்கள் இப்போதைக்கு தெரிஞ்சுக்க.
- இதை கூகிள் டிசைன் செய்திருந்தாலும் இதை தயாரித்திருப்பது ஏற்கனவே HTC Magic போன்ற அட்டகாசமான போன்களை அளித்திருக்கும் HTC நிறுவனம். High Tech Computer Corporation என்பதின் சுருக்கமே HTC. தைவான் சொந்த ஊர்.
- ஐபோனை விட அதிக திரைத்தரம் கொண்டது இது 480x800 பிக்சல்கள். ஐபோன் 320x480 பிக்சல்கள் மட்டுமே. அதுவே கலக்கலாயிருக்கும்.
- ஐபோனை விட தொடுதிரை கொஞ்சம் பெரியதாம் 3.7 அங்குலங்கள். ஐபோன் 3.5 அங்குலங்கள் மட்டுமே
- மாற்றும் வசதிகொண்ட பேட்டரி உள்ளது ஒரு பிளஸ் பாயிண்ட்.
- LED பிளாஷ் வசதிகொண்ட கேமராவும் உண்டு.
- அனிமேட்டட் பின்திரை வச்சுக்கலாம்.
- YouTube, Picasa, Facebook போன்றவற்றில் நேரடியாக வீடியோ அல்லது ஒளிப் படங்களை ஏற்றம் செய்யலாம்.
- இப்போதைக்கு அதிக பட்சமாக 32 கிகாபைட் மெமர்கார்டு வைத்துக்கொள்ள முடியும். அது வருவதோ 4 கிகாபைட் மெமரிகார்டோடு.
இந்த நெக்சஸ் ஒன்னில் மிகப் பெரிய பாதகங்களாக எனக்கு தெரிவது
- மல்டி டச் எனப்படும் பல விரல் தொடுகைகளை கண்டுபிடிக்கும் திரை இதில் இல்லாதது. இது கொஞ்சம் தொல்லையாகவே இருக்கும். படங்களை அல்லது பக்கங்களை பெரிது படுத்தி பார்க்க கஷ்டபடவேண்டியிருக்கும்.
- அதிக பட்சமாக வெறும் 190 மெகாபைட்டுகள் மட்டுமே இறக்கம் செய்யப்படும் பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இன்னொரு பெரிய குறை.
- ரிங்கரை அணைக்க வெளி பொத்தான் ஒன்றும் இல்லாததால் அது ரிங்செய்யும் போது அவசரமாய் அதை குறைக்க அல்லது அணைக்க தொடுதிரையை தான் தடவவேண்டியிருக்கும்.
- இப்போதைக்கு G.S.M பதிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.
http://www.google.com/phone
Google App Store
http://www.android.com/market/
புதிதாக ஒரு போன் வாங்க கோபால் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். ஐபோன், பிளாக்பெர்ரி, HTC வரிசையில் இப்போது நெக்சசும் சேர்ந்திருக்கின்றது. எதை வாங்குகிறானோ தெரியவில்லை. கீழேயுள்ள வாக்கியத்தில் அவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.
”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள், சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி” |
நா.பார்த்தசாரதி “குறிஞ்சி மலர்” தமிழ் புதினம் மென்புத்தகம். Naa.Parthasarathy "Kurinji Malar" Novel ebook in Tamil Pdf Download. Click and Save.Download
Download this post as PDF
1 comment:
Good Competition to Apple...
Post a Comment