உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, January 15, 2010

பேர் சொல்லும் பிள்ளை

கூகிளின் பிரபல கைப்பேசி செயலியான அண்ட்ராய்ட்டின் வெற்றியைத் தொடந்து, அதன் கணிணிக்கான செயலி இந்த வருடம் வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே ”நெக்சஸ் ஒன்” மூலம் தனது சொந்த வன்பொருள் வெளியீட்டில் நுழைந்திருக்கும் கூகிள், தனது புத்தம் புதிய குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு ஒரு பளபளா நெட்புக்கையும் சீக்கிரத்திலேயே அறிமுகபடுத்தினால் ஆச்சரியப் படுவதற்கில்லை. அல்லது ஒருவேளை HP அல்லது Dell போன்றோர்களின் வன்பொருளோடு முழுக்க முழுக்க குரோம் OS மட்டுமே கொண்ட மடிக்கணிணி வெளியாகலாம். மைக்ரோசாப்டுக்கு இங்கு அதிக அரசியல் பண்ண வேண்டியிருக்கும். ஏற்கனவே அதிவேக பிரவுசர் என்னும் பெயரை குரோம் எடுத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்க, அது பிரவுசர்கள் சந்தையில் முன்னிடத்தை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றது. இந்த வருடத்தில் புதிதாக வரவிருக்கும் கூகிளின் மடிக்கணிணியானது குரோம் OS வழியே பூட் ஆகி நேரே நம்மை இணைய பிரவுசரில் கொண்டு போய்விடுமாம். தொடர்ந்து அனைத்து வேலைகளையும் நாம் ஆன்லைனிலேயே செய்ய வேண்டியிருக்கும். அதற்கு கூகிளின் ஆன்லைன் Office suite உதவும். அங்கே Google Docs தான் நம் ’My Computer’ ஐகானாக இருக்கும். ”இப்படி ஏறக்குறைய எல்லா வேலைகளையுமே ஆன்லைனிலேயே செய்யலாம், இதற்கென தனியே காசு கொடுத்து Windows 7 போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றும் வாங்க வேண்டியதில்லை” என்பதுதான் கூகிள் சொல்ல வரும் கருத்து. வெப்2.0 வினால் உண்டாகும் மாற்றம் இது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்றும் இதைத் தான் சொல்கின்றார்கள்.
அது முழுக்க முழுக்க உண்மை என்பது போல நம் சென்னையைச் சேர்ந்த Zoho நிறுவனத்தினர் இதுமாதிரியான ஆன்லைன் பயன்பாடு மென்பொருள்களின் எல்லையை நீட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றார்கள். இதுவரை பத்தொன்பதை எட்டும். Online Word Processor, Online Spreadsheets வரிசையில் Online Invoicing, Online CRM Solution எல்லாம் கூட உண்டு. உலகளவில் பேசப்படும் ஒரு இணையதளமாக சோகோ வளர்ந்துகொண்டிருப்பதில் நமக்கெல்லாம் பெருமை. சென்னைக்கு பேர் சொல்லும் பிள்ளையாக ஒரு மணிமகுடம். ஒரு கட்டத்தில் கூகிள் நெட்புக்குகள் கான்செப்ட் உச்சத்தை அடைந்தால் சோகோ போன்ற ஆன்லைன்சேவை வழங்கிகளின் சகாப்தமும் உச்சத்தை எட்டும். SaaS அல்லது Software as a Service எனும் கனவில் தான் இன்றைய வெப்2.0 பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்த மைக்ரோசாப்டும் சோகோவை Fakeoffice என தூற்றிக்கொண்டு தன் பங்குக்கு இந்த மேக கம்ப்யூட்டிங்கில் புக முடிவெடுத்திருக்கின்றது. அதன் Office 2010 பதிப்பு இலவச Office Web Apps கொண்டதாக இருக்கின்றது. சோகோவை நிறுவிய நம்மூர் ஸ்ரீதர் வெம்புவின் விருப்பமும் (Sridhar Vembu) குறைந்த செலவில் இப்படியான ஆன்லைன் சேவைகளை வழங்கி உலக அளவில் போட்டிபோட வேண்டுமென்பதாகும். ஏற்கனவே 2 மில்லியன் பயனர்களோடு வெற்றிநடை போடும் இந்தப் பயணம் கூகிள்நெட்புக் வெளியானதும் இன்னும் ஓட்டம் பிடிக்கும் என நம்பலாம்.


படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்










டாக்டர்.இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப “படிப்படியாய் படி” படிப்பது எப்படி என தனக்கே உரித்தான நடையில் விளக்கும் தமிழ் மென்புத்தகம்.நன்றி பிரவின்குமார். Dr.R.Anathakumar IAS "Padipadiyaay padi" ebook in Tamil Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

கிரி said...

என்னைப்போல லேப்டாப்பை இணையத்திற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துவர்களுக்கு கூகிள் நெட் புக் பயனுள்ளதாக இருக்கும்.. நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Praveenkumar said...

ஐயா வணக்கம். அடியேனின் வேண்டுகோளை ஏற்று மென்புத்தகம் பகுதியில் 15.01.2010 அன்று "படிப்படியாய்படி" புத்தகம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா. இதனை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் சேவை மகத்தானது. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பாதை.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்