இஸ்லாத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல தடைகள் வருவதுண்டு. உதாரணமாக இஸ்லாமிய கட்டுரைகளை வாசிக்க நேரிட்டால் அதில் மிஃராஜ், ஸ்ஜ்தா, மவ்லிது, தவ்ஹீத், ஜமாஅத் என வரும் அநேக புரியாத அரபிச்சொற்கள் நம் ஆர்வத்தை குறைக்கும். சரி கட்டுரைகள் தான் அப்படி சொற்பொழிவாவது கேட்கலாமென்றால் தமிழ் இஸ்லாமியர் கூட அரபியில் தான் பேசத் தொடங்குகின்றார். அவ்ளோதான் இனி நமக்கு ஒன்னுமே புரியப்போவதிலை என வீடியோ கிளிப்பை மூடப்போகும் போது நல்லவேளை தமிழில் பேசத் தொடங்குகிறார்கள்.
இஸ்லாம் என்றொரு மிகப்பெரிய அமைப்பு உலகெங்கும் பரவி இருந்தும் கூட அதிலிருக்கும் இரு பெரும் பிரிவுகளை பெரும்பாலோர் அறிந்ததில்லை.எலியும் பூனையுமாக சண்டை இட்டுக் கொள்ளும் அளவுக்கு அங்கே பகை உண்டு. ஈரான்-ஈராக் போர் உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இஸ்லாத்தை நிறுவிய முகமது நபியின் காலத்துக்குப் பின் அவரின் உண்மையான வாரிசு யார் என்பதில் தான் இந்த பிளவு தோன்றியது.முகமது நபியின் மாமனாரான அபுபக்கர் தான் அவரின் உண்மையான வாரிசு என ஒரு சாரார் சொல்ல, இல்லை இல்லை அவரின் மருமகன் அலி தான் உண்மையான வாரிசுவென இன்னொரு சாரார் சொல்ல புதுப் புது கொள்கை குழப்பங்கள் முகமது நபிக்குப் பின் இஸ்லாத்தில் புகுந்தன. பல கொலைகள் கூட இதன் காரணமாக நிகழ்ந்தன. இன்றைக்கும் அந்த விரோதம் இப்பிரிவினர்களிடையே நீடிக்கின்றது. அபுபக்கரை வாரிசாக ஏற்றுக்கொண்ட சன்னி பிரிவினர் எண்ணிக்கையில் அதிகமாகவும் (ஏறத்தாழ 80 சதவீதம்) வாழ்க்கையில் அமைதியாகவும் வாழ்ந்து இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் அலியை வாரிசாக ஏற்றுக்கொண்ட ஷியா பிரிவினரின் கொள்கை இதில் சற்று மாறுபட்டதாகும்.இங்கு கிபி 874-ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நாம் விளக்க வேண்டும்.
சியா பிரிவினர் தாங்கள் முகமது நபியின் வாரிசென நம்பும் அலியின் வாரிசு வழி வருபவர்களை தங்கள் மதத் தலைவராக ஏற்று வந்தனர். தாங்கள் மதத் தலைவராக ஏற்று வெகுவாகக் கொண்டாடி வந்த பதினோராவது இமாம் கிபி 874-ல் இறந்தபோது ரொம்பவே நொந்துபோயினர். ஏனெனில் அவரது வாரிசான அவர் மகனுக்கு அப்போது வயது ஐந்து தான் ஆகியிருந்தது. பன்னிரண்டாவது இமாமாக (12th Imam) பதவிக்கு வரவேண்டிய அந்த சிறுவன் தன் தகப்பனாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருக்கும் போதே திடீரென காணாமல் போய் விட்டான். அவன் போன இடம் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. அவனை கடவுள் இப்போதைக்கு பூமியிலே மறைத்து வைத்திருக்கிறார், உலக இறுதி காலத்தில் உலகம் அமைதி இழந்து தவிக்கும் போது, மக்களெல்லாம் தங்களுக்குள்ளே போரிட்டு தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் போது, நாடுகளெல்லாம் தீப்பற்றி எரிந்து புகையும் போது அந்த பன்னிரண்டாவது இமாம் பூமிக்கு மீண்டும் மஹ்தியாக வந்து பூமியிலே அமைதியையும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும் நிலை நாட்டுவார் என்பது ஷியா பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.அதானால் தான் இன்றைக்கும் ஈரான் தலைவர்கள் தாங்கள் உரையாற்றத் தொடங்கும் போதெல்லாம் மஹ்தியின் வருகை விரைவாக இருக்கட்டும் எனவும் அதற்காக தாங்கள் தயாராவதாகவும் இறைவனை வேண்டிக் கொண்டு பேச்சைத் தொடங்குவார்கள்.
சன்னி பிரிவினர் இக்கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை பொருத்தவரை இந்த சியா பிரிவினர் எல்லோரும் தங்கள் கொள்கைகளை விட்டு ஒரு நாள் மனம் திரும்பி வரும் போது இறுதிக்காலம் வரும் எனவும் அந்த இறுதி நியாய விசாரணை நாளில் ஜெருசலேமிலுள்ள மவுண்ட் ஆலிவ்ஸ்க்கும் டோம் ஆப் தி ராக் மசூதிக்கும் இடையே முகமது நபியும், ஈசாவும் (இஸ்லாமில் யேசு ஈசா என அறியப்படுகிறார்)நிற்க்க அதில் கட்டபட்டுள்ள இறுதி தீர்ப்பு கயிறு வழியே ஒவ்வொரு ஆன்மாவும் நடந்து செல்லும். ஒரு ஆன்மா அது தான் செய்த தீமைகளையெல்லாம் விட ஒரு நன்மை அதிகம் செய்திருந்தாலும் அது பாரடைஸ் செல்லும் எனவும், ஒரு ஆன்மா அது தான் செய்த நன்மைகளையெல்லாம் விட ஒரு தீமை அதிகம் செய்திருந்தாலும் அது நரகம் செல்லும் எனவும் இவர்கள் நம்புகின்றார்கள். இப்படித்தான் இறுதி தீர்ப்பு நடைபெறுமாம். ஆனால் புனிதப்போரில் (ஜிகாத்) இறப்பவர்கள் மற்றும் கல்லெறிந்து கொல்லப்படுபவர்கள் நேரடியாக பாரடைஸ் சென்று விடுவார்களாம்.
ஈரான் நாட்டின் பெரும்பாலோர் சியா பிரிவினரை சேர்ந்தோரே. இன்றைக்கு டுனீசியா, எகிப்து, பகரின் என பல அரபுநாடுகளிலும் நடக்கும் கிளர்ச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் யார் காரணமென ஈரான் அதிபர் முகமது அக்மதினஜாத் சொல்வதை கேளுங்கள் "The final move has begun. We are in the middle of a world revolution managed by this dear (12th Imam). A great awakening is unfolding. One can witness the hand of Imam in managing it,”. இப்போது புரிகின்றதா நாம் எங்கு செல்கின்றோமென்று?
நானறியவந்த தகவல்கள் சுவாரஸ்ய மிக்கதாயிருந்ததால் மேல்கண்ட பதிவை இட்டேன். இதில் ஏதேனும் தகவல் பிழையிருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம். இஸ்லாம் குறித்ததான தகவல்கள் தமிழில் குவிந்திருக்கும் ஒரு தளம் ஆன்லைன் பி.ஜே.
http://onlinepj.com
Download this post as PDF
10 comments:
super details....Boss. enka iruthu adukereinka pkp intha thakavalai...
Good info,
Thanks for sharing.
Dear PKP, I am a fan of your blog and like your intention of this Article related to Islam. I am sure you will get lot +ive & -ive comments. This article is too sensitive to touch which is existing from >1000 years and will not be solved till the last day of this world.Beauty is, this diversity in islam is already mentioned by prophet Mohamed (PBUH) during his life time.At present ,there are lot of sects in islam apart from Shia and Shunny Muslims. As said earlier, this confusion will never be end till the last day of this world. If possible, please search & write an article on the "Signs of the Last day" mentioned by Prophet Mohamed.you will find lot of interesting things
Anyway thank you very much for this article. I really appreciate it.
அஸ்ஸலாமு அலைக்கும்
அதில் கட்டபட்டுள்ள இறுதி தீர்ப்பு கயிறு வழியே ஒவ்வொரு ஆன்மாவும் நடந்து செல்லும். ஒரு ஆன்மா அது தான் செய்த தீமைகளையெல்லாம் விட ஒரு நன்மை அதிகம் செய்திருந்தாலும் அது பாரடைஸ் செல்லும் எனவும், ஒரு ஆன்மா அது தான் செய்த நன்மைகளையெல்லாம் விட ஒரு தீமை அதிகம் செய்திருந்தாலும் அது நரகம் செல்லும் எனவும் இவர்கள் நம்புகின்றார்கள்.
இது சரியான தகவல் அல்ல. இஸ்லாத்தில் இப்படி சொல்லப் படவே இல்லை. தயவு செய்து இந்த வார்த்தையை நீக்கவும். ஏனெனில் தவறான செய்தி மக்களை சென்றடையக் கூடாது. மற்றபடி சிறப்பாக இருக்கிறது.
Does this 12 has any relation to 2012?
siya avargal etharkkum thninthavarkal iraththaththai kandu anjathavargal
அஸ்ஸலாமு அலைக்கும்
அதில் கட்டபட்டுள்ள இறுதி தீர்ப்பு கயிறு வழியே ஒவ்வொரு ஆன்மாவும் நடந்து செல்லும். ஒரு ஆன்மா அது தான் செய்த தீமைகளையெல்லாம் விட ஒரு நன்மை அதிகம் செய்திருந்தாலும் அது பாரடைஸ் செல்லும் எனவும், ஒரு ஆன்மா அது தான் செய்த நன்மைகளையெல்லாம் விட ஒரு தீமை அதிகம் செய்திருந்தாலும் அது நரகம் செல்லும் எனவும் இவர்கள் நம்புகின்றார்கள்.
இது சரியான தகவல் அல்ல. இஸ்லாத்தில் இப்படி சொல்லப் படவே இல்லை. தயவு செய்து இந்த வார்த்தையை நீக்கவும். ஏனெனில் தவறான செய்தி மக்களை சென்றடையக் கூடாது. மற்றபடி சிறப்பாக இருக்கிறது.
intha seythi unmaya poyya enakku theriyau annal bala pallikalil ithai solla ketu irukkiren atharthudan thrinthavar kura mudiyma? sollungal nanbare
assalamu alaikkum
intha iru samaya vathikalukku maththiyil sikki thavikkum innum bala birivikalum islaththil undu lappaygal ravutharkal enru ithu urukku ur marubadum ithu en uril ulla iru pirivukal
//அதில் கட்டபட்டுள்ள இறுதி தீர்ப்பு கயிறு வழியே ஒவ்வொரு ஆன்மாவும் நடந்து செல்லும். ஒரு ஆன்மா அது தான் செய்த தீமைகளையெல்லாம் விட ஒரு நன்மை அதிகம் செய்திருந்தாலும் அது பாரடைஸ் செல்லும் எனவும், ஒரு ஆன்மா அது தான் செய்த நன்மைகளையெல்லாம் விட ஒரு தீமை அதிகம் செய்திருந்தாலும் அது நரகம் செல்லும் எனவும் இவர்கள் நம்புகின்றார்கள்.//
நண்பர் பிகேபி,
பல சுவாரசியமான தகவல்களைத் தேடி எடுத்துத்தரும் உங்கள் வலைப்பூவின் தொடர் வாசகன் நான். பொதுவாக மதம் சார்ந்த விஷயங்களைத் தொடாத நீங்கள் திடீரென இப்போது மதம் சார்ந்த பதிவு எழுத முன்வந்தது ஆச்சரியமளிக்கிறது. தேடலின் ஒரு பகுதியாக இருக்கலாம். தேடுபவர்கள் எதையும் விலக்கி வைப்பதில்லை, அது சாத்தியமும் இல்லை! அவ்வகையில் உங்கள் தேடல் இன்னும் விரிவடைய வாழ்த்துகிறேன்.
அநாவசிய விவாதங்களுக்கோ, இணைய வரட்டு பாப்புலாரிட்டிக்காகவோ நீங்கள் எதையும் எழுத மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதன் காரணத்தாலேயே இப்பதிவில் கண்ட மேற்கண்ட பிழை தொடர்பாக என் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இப்பின்னூட்டம் இடுகிறேன்.
இதன் மூலம் இங்கு ஒரு தேவையற்ற வாதப் பிரதிவாதத்தை நான் விரும்பவில்லை.
மேற்கண்ட உங்கள் செய்தியில் கூறப்பட்ட தகவல் யாரோ இஸ்லாத்தை முழுவதும் விளங்காமல், அல்லது அரையும் குறையுமாக படித்ததில் அவர்கள் விளங்கியதைக் கதையாக விவரித்துள்ளனர் என நினைக்கிறேன்.
"ஈஸா(அலை)" அவர்களின் வருகை என்பது பொதுவாக இஸ்லாமியர்கள் அனைவரின் நம்பிக்கையாகும். இதில் ஷியா, சுன்னி என்ற பாகுபாடு இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போன்று,
கிறிஸ்தவர்கள் தங்கள் கடவுளாக எண்ணிக்கொள்ளும் இயேசு(ஈஸா-நபி), உலக அழிவு நாட்களுக்கு முன்னர் இவ்வுலகில் அக்கிரமங்களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடும் காலத்தில் மீண்டும் வருவார் என்பதும் அவர் வந்து இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டுவார் என்பதும் முஸ்லிம்கள் அனைவரின் நம்பிக்கையாகும்.
நீங்கள் குறிப்பிட்ட, பாரடைஸ்(சொர்க்கம்), ஹெல்(நரகம்) விஷயம் வேறு விதமானது. உலக அழிவுக்குப்பின் இவ்வுலகில் பிறந்து மரணித்த அனைவரும் மீளெழுப்பப்பட்டு, அவர்கள் இவ்வுலகில் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பாரடைஸ்(சொர்க்கம்), ஹெல்(நரகம்) வழங்கப்படும் என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று.
எந்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் இந்த விஷயத்தில் "முஸ்லிம்கள்" அனைவரும் குழு, இயக்க பாகுபாடின்றி ஒரே கருத்தையே கொண்டுள்ளனர்.
இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றுடன் ஒன்று கலந்து குழப்பிக் கொண்டதாலேயே மேற்கண்ட உங்களின் பிழையான தகவல் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.
உங்களின் தேடல் இன்னும் விரிவடையட்டும்.
பிரார்த்தனைகள்!
- இறை நேசன்
//ஆனால் புனிதப்போரில் (ஜிகாத்) இறப்பவர்கள் மற்றும் கல்லெறிந்து கொல்லப்படுபவர்கள் நேரடியாக பாரடைஸ் சென்று விடுவார்களாம்.//
நண்பரே
ஜிஹாத் என்னும் அரபிச்சொல்லுக்கு புனிதப்போர் என்பது தவறான அர்த்தம் ஆகும். இஸ்லாத்திற்கு எதிரான தவறான கற்பிதத்தை உருவாக்கிட ஊடகங்கள் செய்யும் ஒரு வித எழுத்து தீவிரவாதமே இது.
‘முயற்சித்தல்’ எனப் பொருள்படும் ‘ஜஹத’ எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘ஜிஹாத்’ எனும் பதம்.
ஜிஹாத் என்னும் இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்று பொருள் உண்டு.
போர் என்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உண்டு.
Post a Comment