உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, February 03, 2011

என்ன பயன்?

புக் ரீடர் ஒன்று வாங்குவதிலேயே குறியாய் இருக்கின்றான் கோபால். அமேசானின் கிண்டில் (Kindle), பார்ன்ஸ் அண்ட் நோபிள்சின் நூக் (Nook) மற்றும் கோபோ,பாண் டிஜிட்டல்,வெலோசிட்டி, சோனி ஈரீடர் அப்படி இப்படியென நூறு டாலரிலிருந்தே தெரிவுகள் இருக்கின்றன. எது வாங்கினாலும் தமிழ் மென்புத்தகங்களை இப்போதைக்கு epub வடிவில் படிக்க முடியாது. அந்த பார்மேட்டில் அவை கிடைக்கின்றதில்லை. தடவி பக்கங்களை புரட்டும் எக்ஸ்பீரியன்சைத் தவிர வேறெந்த விசேசமும் அந்த பார்மேட்டில் சாமானியர்களுக்கு தெரிவதில்லை.ஆங்கில pdf-களை எளிதாக epub-க்கு மாற்ற calibre உதவினாலும் தமிழ் எழுத்துருக்களை அது புரிந்துகொள்ள இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். பெரும்பாலும் எல்லா ஈபுக் ரீடர்களும் (Ereader) தமிழ் pdf-களை எந்தவித தொல்லையும் இன்றி படிக்க உதவுகின்றன. கிண்டில், ஐபேட், நூக் தமிழர்களும் இன்ன பிற அண்ட்ராய்ட் தமிழர்களும் கொஞ்ச நாளைக்கு pdf-பிலேயே காலத்தை ஓட்ட வேண்டும்.

சங்கப்பலகை என்றொரு அட்டகாசமான சேவை.ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள்.தமிழ் வாசிப்பாளர்களுக்கு நல்ல பயன்பாடு. குறிப்பாக உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மாதிரி. ஆயிரக்கணக்கான உங்கள் விருப்பப் புத்தகங்களை கணிணியில் படிக்கலாம். பிடித்தவர்களின் புத்தகங்களை சகாயமான விலையில் வாங்கி உடனடியாக படிக்கத் தொடங்கிவிடலாம். இப்போதைக்கு கணிணி மூலமாக மட்டுமே படிக்க முடிகின்றது. ஐபேடுக்கும் அண்ட்ராயிடுக்கும் எம்.ஏ.பார்த்தசாரதி அவர்கள் ஒரு வழி கொண்டுவந்தால் இன்னும் நன்றாயிருக்கும்.Sangapalagai Reader ( SP Reader) எனும் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அவர்கள் கொடுக்கும் இலவச மாதிரி புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். நீங்களே உங்களுக்கு பொருந்துமாவென தீர்மானிக்கலாம். மேலே ஈபுக் ரீடர்களைப் பற்றி பேசியதால் இதையும் சொல்ல வேண்டி வந்தது.

ள்ளங்கையில் உலகம் எனச் சொல்லி கையில் செல்போனைக் கொடுத்து ஏமாற்றி இருக்கின்றார்கள். தெருவில் கலகம் வந்ததும் எல்லாம் செத்துப் போகின்றது. ஆளும்வர்க்கத்தின் அதிகாரம் அப்படி சார். ஈரான், டுனீசியா, எகிப்து வரிசையில் கில்லர் ஸ்விட்ச் கேட்கும் அங்கிள் சாமும் இதில் சேரும். தொழில்நுட்ப மேம்பாடுகளெல்லாம் மெல்லிய இழை போன்றது,நிஜத்தில் தேவைப்படும் போது அற்றுப்போகின்றது. வருங்கால சர்வாதிகாரிகளுக்கு இது ரொம்பவே வசதி.எதற்கும் பரணில் பேக்கப்புக்காக எவரெடி பேட்டரிகளும் ரேடியோவும் வைத்திருப்பது நல்லது.

மெரிக்காவில் அவுட்சோர்சிங் எந்த அளவிற்கு போயிருக்கின்றதுவென காண்பிக்க லைட்டர் சைடாக இங்கே ஒரு காமிக்.


மிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கொன்றாடும் செய்தியை கூறி 'இந்தியா வல்லரசாகப்போகிறது. உலக அரங்கில் முதலிடம் பெறப்​போகிறது...’ என்று தினமும் வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால், ஒரு சுண்டைக்காய் நாடு செய்யும் அட்டூழியத்தைக்கூட தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த லட்சணத்தில் சீனாவை விஞ்சுவோம், அமெரிக்காவைத் தாண்டிச் செல்வோம் என்று சொல்வதெல்லாம் எத்தனை வெட்கக்​கேடு. நித்தமும் அப்பாவிகளை அந்நிய நாட்டுக்குப் பலி கொடுத்து, வல்லரசாக மாறி என்ன பயன்?" எனக் கேட்டு டி.ஜெய்சிங் விகடனில் எழுதியிருந்தது நான் கேட்க நினைத்ததை அப்படியே சொன்னது போல இருந்தது.

சுதாராஜ் ”இளமைக் கோலங்கள்” SudhaRaj Ilamai Kolangal Tamil Novel pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

Anonymous said...

உண்மை. தமிழ் புத்தகங்கள் eBook-இல் படிக்க கிடைப்பதில்லை.
ஒவ்வொரு முறை இடம் மாறும் பொழுதும் 100-150 புத்தகங்களை சுமக்கும் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறீர்களா? இப்பொழுதும் நாம் சில தமிழ் நாவல்களை இலவசமாக download செய்து படிக்க முடியும். என்னிடம் சுமார் 30 தமிழ் புத்தகங்கள் PDF வடிவில் உள்ளன. நம்மில் எவ்வளவு பேர் புத்தகங்களை (eBook) பணம் செலுத்தி பெறுவோம்? இவை மாறும் வரை, தமிழ் புத்தகங்கள் eBook உருவில் வருவது எளிதல்ல. பிற மொழி புத்தகங்கள் படிக்கும் அனைவர்க்கும், eReaders ஒரு வர பிரசாதமே. எந்த பழக்கமும் ஆரம்பிக்கும் பொது கடினம் தானே. என்னால் இப்போது எளிதாக 20,30 புத்தகங்களை பயணத்தின் பொது எடுத்து செல்ல முடிகிறது.

நீங்க குறிபிட்டதற்காக, என் அனுபவத்தை எழுதுகிறேன். Sangapalagai அவ்வளவு உபயோகமாய் இல்லை. தாங்கள் வாங்கிய புத்தகத்தை, வேறு computer/eReader-களில் படிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. எளிதாய் இருப்பதில்லை.

indian said...

வல்லரசாக மாறி என்ன பயன்?

Speed Master said...

நன்றி

jai said...

nalla padhivu,,,President outsourcing its funny ,,,

மாயா said...

// ஆங்கில pdf-களை எளிதாக epub-க்கு மாற்ற calibre உதவினாலும் தமிழ் எழுத்துருக்களை அது புரிந்துகொள்ள இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம்.//

இப்படிச் சொல்லி நாம் தப்பித்துவிட முடியாது.... தமிழைத் தட்டச்சு செய்வதற்கு "பாமினி" முறை, "தமிழ்99" என்ற முறை இன்னும் பிற முறைகள் இருப்பதனாலேயே இங்கு பிரச்சினை வருகிறது.

உதாரணமாக Adobe indesign என்ற Adobe இன் அட்டகாசமான புத்தக வடிவமைப்பு மென்பொருளில் கூட யுனிக்கோடில் ஒழுங்காக தட்டடச்சு செய்யமுடியாதுள்ளது. காரணம் தமிழிற்கு இரண்டுக்கு மேற்பட்ட உள்ளீட்டு முறை இருக்கின்றதாம்.

அதற்கும் தீர்வு சிலர் கண்டபிடித்துள்ளனர் சிலர்.Indic Plus என்ற இம் மென்பொள் கொண்டு ஏனைய மொழிகளைச் சிறப்பாக உள்ளிட முடிந்தாலும் தமிழுக்குப் பிரச்சினையே :(

மற்றும்படி calibre தமிழைப் புரிந்துகொள்ளவில்லையென அதன்மேல் நாம் பாரத்தைப் போட்டுவிடக்கூடாது.

உதாரணத்துக்கு calibre கொண்டு உருவாக்கிய iBook ஒன்று.... என்ன செய்தாலும் எழுத்துக்கள் பிரிவதை தடுக்க முடியாது...

மாயா said...

Anonymous நண்பர் கூறியது போலவே Sangapalagai அவ்வளவு உபயோகமாய் இல்லை :(

மாயா said...

..........எனினும் இறுதியில் Phone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய புத்தகமொன்றை வடிவமைத்து விட்டோம். :))))))

வடிவமைத்த புத்தகம் பொன்னியின் செல்வன் பாகம் 01 - புது வெள்ளம்

மேலதிகவிபரங்களை எனது வலைப்பூவில் காணுங்கள் :
http://palipedam.blogspot.com/2011/02/iphone-ipad.html

அங்கு உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்த்திருக்கிறேன்...

நன்றிகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்