கல்லூரி டிராப் அவுட்களால் கூட ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஞ்யத்தையே எழுப்ப முடியும் என்பதற்கு ஆப்பிளின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.மேக் கணிணிகள், ஐபாட், ஐபோன், ஐபேட் போன்ற பிரபல ஜனரஞ்சக கைக்கருவிகளை மக்களிடையே அறிமுகப்படுத்தி பெரும் பேரும் புகழும் பணமும் சம்பாதித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.”ஒரு குறிப்பிட்ட சாராருக்கென கருவிகளை வடிவமைப்பது எனபது நிஜமாகவே கடினமான காரியம். பெரும்பாலான சமயங்களில் நீங்களே கொண்டு வந்து காட்டாத வரை அவர்களுக்கு தேவை என்ன என்பதே அவர்களுக்கு தெரியாது.” என்கிறார் ஜாப்ஸ்.
கடந்த மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்க அரசாங்கத்தின் கையிருப்பு கரன்சிகளை விட அதிகப்பணம் இருக்கவே கிண்டலாக அமெரிக்க அரசாங்கத்தை ஐபோன் ஐபேட் விற்க சொல்லி பத்திரிகைகள் ஆலோசனை கொடுத்தன. வாங்கிய சம்பளம் மாதம் $1 தான் எனினும் ஆப்பிள் நிறுவன பங்குகளின் வழி இவர் சொத்து மதிப்பு எட்டு பில்லியன் டாலர்களையும் தாண்டும்.”மிகப்பெரிய பணக்காரனாக இடுகாட்டுக்கு செல்வதைவிட, ஏதோ ஒரு நல்லதை செய்தேன் என்ற திருப்தியோடு படுக்கைக்கு செல்வதையே விரும்புகிறேன்.” என்பதும் அவர் வார்த்தைகள் தான்.
”எதாவதொன்றை சாதித்து விட்டீர்களா?.அருமை.அருமை.ஆனால் அதிலேயே முடங்கி கிடக்காதிருங்கள். அடுத்தது என்ன அதைவிட பெரிதாக சாதிக்கலாமென யோசியுங்கள்.” என்பார். “கவனம் மற்றும் எளிமை என்பதே என் மந்திரம் என்றாகிவிட்டது. எளிமை என்பது சிக்கலானதை விட மிக கடினமானதாகும்: கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.ஆனால் ஒருமுறை நாம் அதை அடைந்து விட்டால் மலைகளை கூட நாம் நகர்த்த முடியும்."என்பது அவர் நம்பிக்கை. புத்த மதத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வெஜிடேரியன் ஆவார்.நான்கு பிள்ளைகள் உள்ளனர்.மனைவியின் பெயர் லாரின் பவல் ஜாப்ஸ்(படம்).
சமீபகாலமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டீவ் தனது முழு கவனத்தையும் வேலையில் செலுத்த முடியாததாகையால் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். மரணத்தை பற்றி முன்பு ஒருமுறை அவர் சொன்ன வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றது. ”யாருமே சாக விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் நபர்கள் கூட சாவதற்கு விரும்புவதில்லை. ஆனாலும் நம் எல்லோரின் இலக்கும் மரணமே. யாரும் அதனிடமிருந்து தப்பிக்க முடியாது. அது அப்படித்தான், சொல்லப் போனால் வாழ்க்கையின் ஒரே சிறந்த கண்டு பிடிப்பு மரணம் மட்டுமே. அது தான் நம் வாழ்க்கையை மாற்ற உதவும் இடைத்தரகு. பழையனவைகளை களைந்து புதியன வர வழி விடுகின்றது. இப்போது நீ புதியவனாக இருக்கலாம், ஆனால் படிப்படியாக கூடிய சீக்கிரத்தில் ஒரு நாள் நீயும் பழையவனாகி விடுவாய். காணாமல் போய் விடுவாய். கொஞ்சம் நாடகத்தனமாக பேசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அது தான் உண்மையும் கூட.”
We will miss you Steve.
On the Lighter Side
