ஆரம்ப காலத்தில் தைவானை சேர்ந்த ASUSTeK எனும் நிறுவனம் Dell கணிணிகளுக்கு தேவையான சிறு சிறு சர்கியூட் போர்டுகளை தயாரித்து கொடுத்து வந்தது. கொஞ்சகாலம் சென்றதும் அந்த ஏசுஸ் நிறுவனம் டெல்லிடம் வந்து “ஹேய் நாங்கள் தான் நல்லபடியாக சர்கியூட் போர்டுகளை செய்து தருகிறோமே, உங்கள் கணிணிகளுக்கு தேவையான மதர்போர்டுகளையும் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன்” என்றது. ”இருபது சதம் வரைக்கும் குறைந்த விலைக்கு நாங்கள் அதை செய்து தருகிறோம்” என்றது ஏசுஸ். டெல்லுக்கும் இது நல்ல டீலாக பட்டது. ஏனெனில் டெல் நிறுவனத்தின் வருவாய் எந்தவிதத்திலும் இதனால் பாதிக்கப்படவில்லை. உண்மையில் அதிக லாபமே கிடைத்தது.
கொஞ்ச காலம் தள்ளி மொத்த கணிணியையும் நாங்களே அசம்பிள் செய்து தருகிறோமே இன்னும் குறைந்த விலைக்கு என்றது ஏசுஸ். டெல்லுக்கும் இது நல்லதாக படவே அதையும் ஒத்துக்கொண்டது.அப்புறம் ஏசுஸ் டெல்லின் அனுமதியுடன் நேரடியாகவே பல டெல் டீலர்களிடம் டெல் கணிணிகளை சப்ளை செய்யவும் ஆரம்பித்தது. டெல்லுக்கும் இது ரொம்ப வசதியாக போய்விட்டது. ரொம்ப வேலையில்லை, சிரமப்பட வேண்டியதில்லை ஆனால் வரவேண்டிய பணம் சரியாக வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கணிணிகளை வடிவமைக்கும் வேலைகளை கூட இந்த ஏசுஸ் நிறுவனமே செய்ய ஆரம்பித்தது.இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஆசுஸ் டெல்லிடம் வந்த போதெல்லாம் டெல்லின் வருவாய் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சிலகாலம் தள்ளி ஆசூஸ் மீண்டும் இன்னொரு டீலோடு வநதது.ஆனால் அது இந்த முறை வந்தது டெல்லிடமில்லை. பெஸ்ட்பை,சர்கியூட் சிட்டி போன்ற எலக்ட்ரானிக்ஸ் கடைகளிடம். டெல்லை விட 20 சதவீதம் குறைவான விலையில் கணிணிகளை நாங்களே தருகிறோம் என்றது ஏசுஸ்.
பிங்கோ.
ஒரு கம்பெனி தொலைந்தது.இன்னொரு கம்பெனி உருவாகியது.இப்படித்தான் இன்றைக்கும் பல கம்பெனிகள் உருவாகின்றன.ASUS லேப்டாப்புகளும், நெட்புக்குகளும் சந்தையில் முக்கிய இடம் பிடித்தன. Squaretrade சர்வே மிகவும் நம்பகமான லேப்டாப்களில் ஒன்றாக ஏசுஸ் லேப்டாப்புகளை (Most Reliable Laptop) கூறியது. ஆப்பிள் ஐபேடுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் டேப்ளட் பிசிக்களை விற்பவர்களும் இவர்கள் தான். இங்கு எங்கே தவறு நடந்தது. டெல் மேனேஜரும் தவறு செய்யவில்லை ஏனெனில் டெல் இறுதிவரை லாபம் பார்த்துக் கொண்டே தான் வந்தது. ஏசுசும் தவறுசெய்யவில்லை அதுவும் தன் நிறுவனத்தை வளர்க்கும் நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே குறியாய் இருந்தது.அப்புறம் எங்கே தான் தவறு நடந்தது?.
முன்பு பிரபலமாக இருந்து இப்போது காணாமல் போன அல்லது காணாமல் போய்க் கொண்டிருக்கும் பல பிரபல பெயர்களின் வரிசை இங்கே.
Bear Stearns-ஐ Chase வாங்கியது.
Cadbury-யை Kraftfoods வாங்கியது.
Cingular-யை At&t வாங்கியது
Circuit city-யை Tigerdirect வாங்கியது.
Compaq -க்கை HP வாங்கியது.
COMPUSA காணாமல் போனது.
Hummer காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
Jaguarஐ TATA வாங்கியது.
JP Morgon -ஐ Chase வாங்கியது.
Lehman Brothers காணாமல் போனது.
Orkut காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
Palm-ஐ HP வாங்கியது.
Schering Plough-ஐ Merck வாங்கியது.
Skype-இ Microsoft வாங்கியது.
Sun-ஐ Oracle வாங்கியது.
T-mobile-யை At&t வாங்க போகிறது.
Washington Mutual-ஐ Chase வாங்கியது.
Download this post as PDF
8 comments:
என்ன தான் Asus கணினிகளை தயாரித்தாலும் அது டெல் க்கு அடுத்தது தான்.. Tablet PC ல் அவர்கள் முன்னணியில் இருக்கலாம் ஆனால் இன்றும் பெரும்பான்மையான நிறுவனங்கள் விரும்புவது டெல் கணினிகளை தான். இவர்களுடைய சர்வீஸ் போல இது வரை யாராலும் கொடுக்க முடியவில்லை.
வீட்டுபயன்பாட்டிற்கு வேண்டும் என்றால் Asus இருக்கலாம் நிறுவனம் என்று வரும் போது டெல் தான் இன்னமும். Tablet PC க்களில் டெல்லுக்கு தோல்வி தான்.
Orkut ம் காணாமல் போகுதா.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி
பழைய ஒட்டக கதை தான் நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் புதுமையாக DELL ம் கூடாரத்துக்குள் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது ASUS. ஆனால் ASUS காணாமல் போன நிறுவனங்களின் பட்டியலில் சேராமல் இருந்தால் சரி. நல்ல பதிவு!
Very interesting.
அப்புறம் எங்கே தான் தவறு நடந்தது?
நீங்களே சொல்லுங்களேன்.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்.
இருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கினானாம் ஆண்டி.
இந்தப் பழமொழிகளெல்லாம் "டெல்" காரனுக்கு தெரியாமல் போனதுதான் சோகம்.
Dear PKP, report you shared on reliability is 2009 report.
ASUS is now #2 in many markets, i think the price and quality of the products are the reason for the ASUS success.
Please note that any company can fail unless they change themselves to the changing demand/need of the customer.
Post a Comment