HDMI போர்ட்டுகளோடு கூட வரக்கூடிய இந்த மினி பிசி ஸ்டிக்குகள்தான் இப்போதைக்கு ஹாட் கேட்ஜட்களாம். பொடி கணி சுளிகள் எனலாமோ?கணப்பொழுதில் உங்கள் டிவியை கணிணியாக்கிவிடுகிறது. பென்டிரைவ் போல குட்டியாயிருக்கும் இந்த கணி சுள்ளியை உங்கள் டிவியின் HDMI போர்ட்டில் செருகிவிட்டால் போதும். உங்கள் டிவி கணிணியாக உருமாறிவிடுகிறது. அன்ட்ராய்ட் முதலான பல்வேறு OS-களோடு வருகின்றன. இதன் Wi-fi வழி கேம்ஸ்,அப்ஸ்,பிரவுஸ் என பலவும் பண்ணலாம்.வீட்டு போட்டோக்களை வீடியோக்களை பார்க்க மெமரி கார்ட் போட ஸ்லாட்டும் இருக்கிறது.பிசி ஸ்டிக்கிலுள்ள USB போர்ட்டில் ஒரு வயர்லஸ் மவுசை செருகிவிட்டால் ஆல்செட்.கவுச்சில் அமர்ந்து உலகை உலாவரலாம்.அம்பது டாலருக்கெல்லாம் கிடைக்கிறது.சும்மா ஒரு அறிமுகம்.
Download this post as PDF
No comments:
Post a Comment