நானும் பல முறை நினைத்திருக்கிறேன் தமிழ் தான் வளமையான மொழி என்று.பின்னே,நிலையைபொறுத்து தமிழில் தானே இலைக்கு தழை,ஓலை,கீரை என பல பெயர்கள் உண்டு.இப்போதோ சில சந்தேகங்கள்,அறிவியல் தமிழ் பலவீனமானதோ என்று. இல்லைஇல்லை பலவீனமாக்கிவிட்டோம்.புத்தம்புது கருவிகளும்,கண்டுபிடிப்புகளும் தினமும் தோன்றும் உலகில் நமக்கு தமிழிலும் சில பல புது சொற்கள் தேவைபடுகின்றன.
கண்டிப்பாக.
தொடர்ந்து அறிவியலை அப்படியே ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் (உதாரணமாய் Workgroup-பை வேலைகுழு என்றும்,vertical scroll bar-யை செங்குத்து உருள் பட்டி என்றும்) என்றைக்குதான் தமிழ் தனித்து நிக்கபோகிறதோ?
வகை:தமிழ்நாடு
