அடடா என்னமாய் எழுதுகிறார்கள்.கொட்டிக்கிடக்குது தமிழ் வலைபூக்கள் இணயமெங்கும்.கொஞ்சகாலமாயிருந்த தமிழ் வறட்சி,இணயத்தில் சுத்தமாய் விட்டுப்போனது போலவே தோன்றுகிறது.தமிழ் இனி மெல்ல ஒளிரும்.நம்பிக்கையாய் சொல்லலாம்.இலக்கியம் பேசுகிறார்கள்,அரசியல் அலசுகிறார்கள்,அறிவியல் ஆய்கிறார்கள்.வரலாறு,புவியியல் என தமிழ் கலாசுகிறது வலையுலகத்தில்.நல்லதொரு திருப்பம்.கட்டுரை எழுதி விகடனுக்கும்,குமுதத்திற்கும் காத்திருப்பதை விட மலருக்கும் இதழுக்கும் மாரடிப்பதை விட எழுது தோன்றுகிறதை எழுது எழுதிக்கொண்டே இரு நல்லபக்கமானால் கட்டாயம் திரும்ப வருவார்கள் என்ற வேகம் பிடித்திருக்கிறது.மொத்தத்தில் கணனி தமிழ் விழித்திருக்கிறது.ஆரோக்கியமான இந்த போக்கு கடைசிவரை தொடரவேண்டும் என கடவுளை பிரார்தித்து கொள்வோம்.(குடுமிபிடி சண்டை போட யாராவது வந்துவிடபோகிறார்கள்)
வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
