சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல.
சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். பின்னர் அவாள் Worm, Trojan, Rootkit, Malware, Spyware, Phishing, Bots அப்படி இப்படியென விதவிதமான பிறவி எடுத்து களத்தை கலக்கிப்போனார். இன்றும் கலக்கிக்கொண்டிருக்கின்றார். அநேக கணிணிகாரர்களுக்கு சிம்ம சொப்பனமானார். இன்று ஓரளவு அமைதியாய் இருந்தாலும்
எங்கு எப்போது இவர் எவ்வடிவில் வருவாரென தெரியாததாதலால் மென்பொருள் சார் நிறுவனங்களெல்லாம் எதற்கும் எப்போதும் உஷாராவே இருக்கின்றனர்.
பின்னே Morris Worm, Michelangelo virus, SQL.Slammer, Code Red, Nimda, Concept , Melissa இவர்களையெல்லாம் மறந்துவிடமுடியுமா என்ன?
Download this post as PDF
2 comments:
வைரஸ் எழுதுவதென்பது சவாலான, அதே சமயம் சுவையான ஒரு விஷயம். கல்லூரி பயிலும்பொழுது, ஒரு சில (சாதுவானவைதான்!!) ஜாலிக்காக எழுதி ஆசிரியர்களை பயமுறுத்தியதுண்டு. ரொம்ப த்ரில்லாக இருக்கும்.
நீங்கள் முயன்றிருக்கிறீர்களா?;-)
அட அப்போ கலக்கியிருக்கீங்கனு சொல்லுங்க!!
நாம நெருங்கினது கூட இல்லீஙக.
:)
Post a Comment