உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, May 22, 2009

கத்தியோடு புத்தி

வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.

ஆயுதங்கள் ஜெயித்திருக்கின்றன என வரலாற்றில் படித்திருக்கின்றேன். அகிம்சையும் ஜெயிக்கும் என்றார்கள் பள்ளிக்கூட புத்தகத்தில். ஆனாலும் உருப்படியான உதாரணம் சொல்லத் தெரியவில்லை. பார்க்கப்போனால் ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். அப்படியிருக்கும் வரை பொடியன்களை மொக்கைகள் ஒன்றும் செய்யமுடியாது.

குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.

ஃப்ராங்போர்ட் விமானநிலையத்தில் இன்னொரு காட்சி. ஏர் பிரான்சின் தவறுதலால் சரியான நேரத்தில் புறப்படாத விமானத்தில் பயணித்த இந்தியர்கள் நாதியற்று விமான நிலையத்திலேயே தவிக்க விடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல பேர் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற நாட்டினர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர கவனிப்புகள். என்னவாச்சுது? ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா? நம் சுய மரியாதையை நாம் எங்கே தவறவிட்டோம்?

அங்கே இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது. போனமுறை செய்தது போல இந்த முறை புதிய நடுவணை வாழ்த்தி வரவேற்க மனம் இணங்கவில்லை.

”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude!!

நண்பா! நான் செத்துப்போவேன். ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்.

விசாரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.


"வலுவான விதியே!
ஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி!
மெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு
வசந்தம் எனக்குக் கொடு
அந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்
விருப்பத்தோடு என் இதயம்
இறக்கத் தயார்”
-ஃப்ரெட்ரிக் ஹோல்டர்வன்















சி.ஆர்.எஸ்-ன் கூல் ஆண் பெண் அறிய வைக்கும் உளவியல் மென்புத்தகம் இங்கே தமிழில்.C.R.S "Cool" psychology ebook in Tamil pdf Download.Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



54 comments:

வால்பையன் said...

வாங்க தலைவா!

விடுமுறையெல்லாம் நன்றாக கழிந்ததா?

மீண்டும் களத்தில் இறங்கி எங்களுக்கு உதவி செய்ங்க நண்பரே!

Krish said...

thanks! how was your India trip?

Imthiyas said...

வணக்கம் அண்ணா

I am Happy to come Pack..

M.Rishan Shareef said...

வருக நண்பரே !
சற்று விலகி நின்று பார்க்கும்பொழுதுதான் நம்மைச் சூழ உள்ள உலகம் புரிகிறது. நானும் சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்தேன்.

தொடர்வோம் !

கதிரவன் said...

welcome back

இராயர் said...

அன்புள்ள பி கே பி அவர்களே !
உங்களை சில நாட்கள் முன்னதகே தெரியும் ஆனால் உங்களின் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன்.மிகவும் பயனுள்ள பதியுகள்
என்னுடைய பல நண்பர்களுக்கு உங்கள் வெப்சைட் ஐ அறிமுக படித்திஇருக்கிறேன் . பலரும் உங்களுக்காகக்காக காத்து இருகின்றனர்.
தினமும் இரண்டு மூன்று முறை உங்களை பார்த்து விட்டு தான் தூங்க போவேன் .மிக்க மகிழ்சியாக உள்ளது உங்களை பார்த்த பிறகு ,தொடரட்டும் உங்களின் பதிவுகள்

உங்களை ஆண்டவன் நல்லபடியாக வைக்க வேண்டுகிறோம்

அன்புடன்
இராயர்

Anonymous said...

Dear Mr.PKP,
Very HAPPY to see your post.
"enna than payasam koduthalum, konjam uppu kammi, endru sollathan seyyum ulagam".
Anyway OUR PKP is back.
Welcome Thalaiva......:)))
LAV

பழமைபேசி said...

Welcome back!

tya said...

athiga naal kalithu unggal pathippai padithathu enakku puthiya utchagattai tarugirathu... thodarthu eluvathakku en valtukkal..

Vadielan R said...

மிக நீண்ட நாள் கழித்து திரும்ப வந்துள்ளீர்கள் உங்களை காணவில்லை என்று பதிவுலகமே கலங்கிவிட்டது வந்தற்கு நன்றி நன்றி நன்றி

Muthu Kumar N said...

Dear PKP,

We are so happy to say you Welcome back with lot of energy.

We let you take rest for some time for peace of your mind and think more differently for us.

So many people envy you, when disappear they are very happy and start to say something about you’re absent.

We are all together with you. Don’t worry and get upset. We know you wont get hurt because of the small peoples meaningless words....

Be proud we are waiting for your arrival for write something us more and more and forever.

Best wishes for you, its from depth of our heart.

Because you are the roll model for so many bloggers.

Be the same with us.

Best Wishes for back to help us to know more things in this computer world.

Thank you so much for everything so for you done it great help for us.

Best Regards.
Muthu Kumar.N

சுந்தர் said...

உங்கள் பதிவுகளை ஓராண்டுக்கும் மேலாக படித்து வருகிறேன். கணினி பற்றிய எந்த அறிவும் இல்லாத நான் இன்று ஒரு வலை பதிவு தொடங்கியதற்கு , நீங்களே முதற் காரணம், உங்கள் பதிவுகளால் நான் பெற்ற தகவல்கள் ஏராளம்., நன்றி.

ச. அன்வர். said...

நீண்ட இடைவெளிக்குபிறகு தங்கள் பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்

ச. அன்வர்.

Tech Shankar said...

welcome back dear PKP. உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

2 மாத காலமாய் உங்களைக் காணாமல் ஏக்கம்.

அப்பப்போ எட்டிப் பார்த்து வந்துட்டாரா - புது பதிவு போட்டிருக்காரான்னு செக் செஞ்சுக்குவேன்.

இன்னைக்கு இவ்வளவு நேரம் மின் தடை காரணமாக - நெட்டில் மேயவில்லை. அஞ்சலை திறந்தால் உங்கள் feedblitz வந்திருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் பதிவைப் படித்தேன்.

மிக்க நன்றியுடன்
உங்கள் அன்பு தமிழ்நெஞ்சம்

செல்லி said...

Dear PKP
Good to see you back!
Thanks.
but I'm not happy now as my loved ones there in my birthplace have been killed, and still facing so many hassles!
Oh God! Don't let me to be born as Tamil if I have next-birth.

Unknown said...

Dear PKP,

Welcome back. We are so much happy to see You again.

with love,
Rajmohan babu

HEMA said...

Welcome PKP.Good to see U back.

முரளி said...

மீண்டும் உங்களைக் காண்கையில் மகிழ்ச்சி, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

saravanarajan said...

அன்பு பி.கே.பி,
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்.....
எதுவும் நிரந்தரமல்ல... கவலை வேண்டாம்.

என்றென்றும் அன்புடன்,
சரவணராசன்.க.

Anonymous said...

Hi PKP

I am Ubaid. I like u & many times I came to ur blog. This is nice one.

Nalla yezhudureenga. niraiya vishayangal nallavum payanullathavum irukkudu. nanri. thodarnthu yezhudungal.

Suresh M said...

It's good and happy to hear you are back. Expecting more news from you since you have taken more leave for past two months ;)

Suresh M

சூனிய விகடன் said...

உங்களைக் காணாமல் தவித்த நிறைய பேரில் நானும் ஒருவன். ஒரு தனிமனிதனுக்கு மற்ற எல்லாவற்றையும் விட அவனது ப்ரைவசி முக்கியம் என்பதை நானும் மதிக்கிறேன். தினம் ஒரு தடவை விசிட் பண்ணி நிஜமாகவே பொய் பார்த்து பார்த்து மனம் வாடினாலும் ..................இன்றுதான் தோன்றுகிறது ...இந்தப் பிரிவு உங்களை இன்னும் கொஞ்சம் என் அருகில் கொண்டு வந்திருக்கிறது

Unknown said...

Dear sir
Welcome Back!

I missed you very much.

S.Rajagopalan,Dubai

Anonymous said...

என்ன வளம் இல்லை இந்த தமிழ் நாட்டில் , ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.

Sathis Kumar said...

Welcome Back PKP Anna.. :)

ராகவேந்திரன் said...

யார் என்ன கூறினாலும் சரி சார், எங்களை போல இணையத்தில் புதியதாக பழகுபவர்கள் அனைவருக்கும் உங்கள் இணைய தளத்தை தான் ரெக்கமண்ட் செய்கிறேன், இன்னொன்று தெரியுமா, எனக்கு உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதே எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர் இணைய தளம் தான் எனவே தயவு செய்து உங்கள் பணியை தொடருங்கள் அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி

நிகழ்காலத்தில்... said...

தங்களின் வருகைக்கு நன்றி.

தினமும் தங்களின் பதிவு வந்துள்ளதா என்று பார்ப்பேன்.

தொடருங்கள் சிரமம் பார்க்காமல்

நிகழ்காலத்தில்... said...

http://kricons.blogspot.com/2009/04/blog-post.html

check this for earlier post COOL

Nagarajan Pandurangan said...

அன்புள்ள பிகேபி...

மீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி நண்பரே...

பூடகமாக இல்லாமல் நேரிடையாகவே சொல்லுங்கள் ...
பிரபாகரன் மீண்டும் தோன்றுவார் ...
இந்திய, இலங்கை, சீன சதிகளை முறியடிப்பார் ...

நம்பிக்கையுடன்...
மு.பா.நாகராஜன்

Anonymous said...

thanks pkp well come back

tamilraja said...

சில நேரங்களில் சில மோசமானவர்களின் தாக்கத்தால்
விரிவாய் சிந்திப்பவர்களும் குறுக வேண்டி வருவது வேதனைக்கு உரிய விஷயம்

டிவிஎஸ்50 said...

உங்கள் வருகை மகிழ்வை தருகிறது

Anonymous said...

Welcome back PKP Sir :)

Anonymous said...

Hi PKP,

Welcome back! Nice to see your writings again... :)

Regards,
Priya..

Senthil said...

thanks for coming back, in your absence i had to see some stupid, mokkai sites with guilty(because time passes, but no use).

V.செல்வகுமார் said...

அன்புள்ள pkp, நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் எழுத வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மிக்க அன்புடன்
V.செல்வகுமார்

அதிரை தங்க செல்வராஜன் said...

Dear PKP,

Welcome back.

60 days are too long, missed you.

Whatever you had seen in the airport is the real one.

The whole world thinks Indian's are
more adjustable.

I do not know when this attitude will change.

Good luck.

Adirai Thanga Selvarajan

Anonymous said...

வணக்கம் pkp அண்ணா,
உங்கள் பதிவைக்கண்டு சந்தோசப்படும் ஆயிரம் ஆயிரம் நண்பர்களில் நானும் ஒரு பொடியன். மிக்க நன்றி.

ஜெ.சுரேஷ்.

Anonymous said...

மௌனம் கலைத்ததற்கு கோடி நன்றிகள் dear sweet brother.

. said...

Wow!!!! Great to c u Back, Sir.
- Lenin kumar

Anonymous said...

மறப்போம் மண்ணிப்போம் ”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” கேட்பதற்க்கே என் மனம் சற்று கஷ்டமாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் உங்கள் மீது இருக்கும் பாசத்தில் எலுதியிருக்கலாம், என்ன செய்வது எனக்கே உங்கள் மீது மிகவும் கோபமாகத்தான் இருக்கிறது காரணம் அந்த கோபால பற்றி இதுவரைக்கும் சொல்லவேயில்லை அதை எல்லாம் நான் மறக்க வேண்டும்மென்றால் தயவு செய்து வாரத்திற்க்கு குறைந்தது 5 Articalலாவது எலுதவேண்டும் இல்லை என்றால் கடுப்பாகிடுவேன்.

என் இனிய PKP நண்பர்களுக்கு உங்கள் கருத்துக்கள் எவர் மனதையும் புண்படும்படி எலுதவேண்டாம்.

ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை (குணாவுக்கு மட்டும்)

வாழ்க பிகேபி
வளர்க பிகேபி

என்றும் நட்புடன்

குணா.சி
சிங்கப்பூர்

Anonymous said...

விளக்கம் தேவை!
(ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது)
என்று நம் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளீர்கள்
எனக்கு ஒன்றும் புறியவில்லை நாங்கள் உங்கள் வலைப்பூவை ஓசியில் படிக்கிறோம் எதற்க்காக ”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” இது போன்ற வசைகள் எல்லாம் எனக்கு என்றா?

Please Approve This Comment And
Need Answer.If You Not Approve Explain To Me Via Email csguna007@yahoo.com.sg

நன்றி

குணா.சி
சிங்கப்பூர்

Anonymous said...

wELCOME BACK

FROM AARVEEYAR, vELLORE

MADURAI NETBIRD said...

அருமை நண்பரே உங்கள் வருகை எங்களை மீண்டும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது பிரிவு அதை உணர்த்திவிட்டது

Vinothkumar.R said...

Welcome back PKP.

Very very Happy to see ur new blog post after such a long time..

Regards,
Vinothkumar.R

Durairaj Sukumar said...

It's great that u r back.

Pottruvar potrattum thootruvaar thootattum
Evvazhi nalvazhiyo ,avvazhi nam
vazhiyaaga irukkattum.

keep it up PKP.

Tech Shankar said...

உங்கள் பதிவுகளைப் படிப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்த என்னைப் போன்றோர்க்கு இனி அடிக்கடி விருந்து படைப்பீர்கள் என எண்ணுகிறேன். நன்றி.

Baski said...

Welcome Back. Nice to see your blogs again. Happy Blogging.

Nadri

Raj said...

//ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்//

நிஜம்.....நன்றி!

Anonymous said...

ஒருவனை நடுக்கடலில் தவிக்கவிட்டுவிட்டு படகு சென்று மீண்டும் அது பலநாட்கள் கழித்து வந்தால் அவனுககு எந்தளவு சந்தோஷம் கிடைக்குமோ அதுபோல் தங்களின் வரவு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது

மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

உங்கள் சேவை மீண்டும் தொடரட்டும்
வாழக வளமுடன்......

உங்கள் விசிறி .....

jafna said...

Thanks for Re entry. Then This is Satiq from Kuwait. I didn't see like that in kuwait. Sorry.

Jafar ali said...

//குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.//

அன்பின் பிகேபி நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவுகளை பார்ப்பதில் சந்தோசம். குவைத் விமான நிலையத்தில் இவ்வாறான நிகழ்ச்சியை நான் கண்டதே இல்லை. விமான நிலையத்தில் இத்தனை வருடங்களில் தாங்கள் சொல்வது போல் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை நான் கண்டது இல்லை.

ரிஷி (கடைசி பக்கம்) said...

Hi PKP,

I don't find anything in kuwait airport.

Is it true?

rishi

Muhammad Ismail .H, PHD., said...

மறு வரவிற்கு மிக்க நன்றி.

// ”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude!! //

சான்ஸே இல்லை. முழு சைக்கோ தான். ஆனால் பொது வாழ்க்கையில் இதல்லாம் சகஜம் தான். இதை விட மோசமான வசவுகளை 1998 நான் சில பகுதிகளில் இணைய இணைப்பிற்கான Node கேட்டு VSNL இடம் அலைந்த போது எனக்கு முகத்திற்கு நேரே கிடைத்தது. நான் ரொம்ப கொடுத்து வைத்தவன். ;-)


with care & love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்