உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, March 20, 2009

நிஜமாகவே பொய்

திரையில் வில்லு படத்தை பார்க்கின்றீர்கள். அது இரு பரிமாணம்(2D). ஆனாலும் Dolby Surround DTS எஃபெக்ட்டெல்லாம் கொடுத்து திரையிலில் அதை நிசப்படுத்த பார்ப்பார்கள். அங்கு நம் காதுகள் ஏமாந்திருக்கும்.
அதையே ”மை டியர் குட்டிச் சாத்தான்” படம் பார்த்த மாதிரி 3D மூக்குக்கண்ணாடி போட்டு பார்த்தால் படம் முப்பரிமாணத்தில் இன்னும் எபக்ட் ஏறி நிஜமாகவே நம் கண் முன்னே நடப்பது போல தோன்றும். அங்கு நம் கண்கள் ஏமாந்திருக்கும்.
ஆனாலும் நான்கு பரிமாண எபக்ட் கிடைக்க ”பிரஸ்மீட்டில்” நிஜமாகவே நாமங்கிருந்திருக்க வேண்டும். நான்காவது பரிமாணமாக அங்கு நம் உணர்வில் நேரமும் கலப்பதால் இன்னமும் சுவாரஸ்யம் கூடுகின்றது. ஆனாலும் எல்லாமே பொய். எல்லா பரிணாமங்களிலும் நம் அங்கங்கள் அநியாயத்துக்கும் ஏமாற்றப்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு நான்காவது பரிமாணமாக மேலே நாம் பார்த்த ”நேரம்” என்பதே பொய் என்கின்றார்கள். பூமியை விட்டு விட்டு விண்ணில் வெகுதூரம் சென்றுவிட்டால் நாளென்றுமில்லை நேரமென்றும் இல்லை.இப்படி நான்காவது பரிமாணமே மாயை என்றாகும் போது மற்ற மூன்றும் கூட மாயையாகத்தான் இருக்க முடியுமோ? நேரம் என்று ஒன்று இல்லாத போதே நாம் இருக்கின்றது எனப்பட்டிருக்கின்றோம். மொத்தத்தில் இந்த நான்கு பரிமாண உலகில் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் போலிருக்கின்றது. ஒரு வேளை நான்கையும் தாண்டி ஐந்து ஆறென பல பரிமாணங்கள் உலகில் இருக்கலாமோ? நம் புலன்களால் தான் அதை உணரமுடியவில்லையோ?

அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்வதற்கு பதில் சொல்லேன் என்றான் கோபால்."பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர அதை ஒரு நாளென்கிறோம். சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றிவர அதை ஒரு மாதமென்கின்றோம். பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் சமயத்தை ஒரு வருடம் என்கின்றோம். இதெல்லாம் தெளிவாக புரிகின்றது. ஆனால் வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற கணக்கு எங்கிருந்து வந்தது? புரியாத புதிராக இருக்கின்றதே" என்றான்.

நாள், மாதம் மற்றும் வருடங்களின் வரவு பூமி,சந்திரன்,சூரியனின் நகர்வுகளை வைத்து கணக்கிடும் போது வாரம் மட்டும் எங்கிருந்து வந்தது. அது நமக்கு நெஜமாகவே தேவைதானா எனக் கேட்டான். அடப்பாவி உருப்படியா இருக்கின்ற அந்த வீக்கெண்டுக்கும் ஆப்புவச்சுடுவ போலிருக்கே என்றேன் நான்.

(மேலே படம்: தெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் Julian Beever-ன் 3டி கோக் போத்தல் .மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://dalesdesigns.net/Beever.htm)


ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை


நா.பார்த்தசாரதியின் புதினம் ”சமுதாயவீதி” மென்புத்தகம் இங்கே தமிழில்.Na.Paarthasarathy "Samuthaaya Veethi" novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories23 comments:

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

பிகேபி அவர்களே,

நாளுக்கு நாள் உங்கள் பதிவுகளிள் உங்களின் பரிணாமங்களின் வளர்ச்சியின் மாற்றங்கள் தெளிவாக விளங்கும் அளவிற்கு உங்கள் பதிவுகளின் மெருகு கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துகள் உங்களின் கடும் உழைப்பிற்கு அதன் பலனை அனுபவிப்பவர்களிள் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாளர்க உங்கள் பணி தமிழ் கணிணி உலகத்தின் முன்றேன்றத்திற்காக.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

hema said...

Interesting question about week.What is the answer for this?

moulefrite said...

நண்பரெ,
வாரம் என்பது கிருத்துவமதம் சார்ந்தது
கிருத்துவத்தில் கடவுள் இந்த அண்டத்தையும் பூமியையும் மற்றும் அனைத்து ஜிவராசிகலையும் வாரத்தில் ஆறு நாட்களில் படைத்து முடித்தார் எனவும் ஏழாவது நாள் ஞாயிற்றுகிழமை ஓய்வு எடுத்துக் கொண்டார் என்கிறது.வாரத்திற்கு வேறெந்த மதத்திலும் விளக்கமில்லை
அதனாலேயெ இந்த அடிப்படையை
ஏற்க யாரும் தயாராக இல்லை.
அதனால்தான் வாரத்திற்கான முக்கியத்துவத்தை யாருமெ தருவதில்லை.ஆனால்தான் அதன் விளக்கம் தெரியாமலே இன்றும் நாம்
ஞாயிற்றுகிழமையை விடுமுறை நாளாக பயன்படுத்திக் கொண்டிருக்
கிறோம்

Muhammad Ismail .H, PHD, said...

என்னாதிது, இந்த பதிவிற்க்கும் நான் மின்னஞ்சல் வாயிலாக தங்களிடம் கேட்ட உதவிக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது போல தெரிகிறதோ? உண்மையில் அந்த நிறுவனம் மற்றும் அதன் தொழில்நுட்பம் அனைத்தும் "நிஜமாகவே பொய்" தானா? தயவு செய்து விளக்கவும். வெகுநாட்களாக குழம்பி போய் சரியான தகவலுக்காக காத்திருக்கின்றேன்.


அப்பறம் சே, சக பயணியாக 100 அடிக்கலாம் என்று வெளியே போய் உள்ளே வந்தால் 201 தான் கிடைத்தது. உண்மையில் இந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். இது உங்களின் எண்ணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

with care and love,

Muhammad Ismail .H, PHD,

Anonymous said...

நினைத்துப்பார்பதற்கே அந்த புகைப்படங்கள் எல்லாம் நிஜமாகவே உண்மையானது போல் தொன்றுகிறது.
சரி மேட்டர்க்கு வருவொம் நான் நல்லபடியா இருக்கிறது உங்களுக்கு புடிக்கவில்லையா என்னா? கோபாலு ஆ... மறுபடியும் கோபாலா??? கொலகாரனாக்கிராதிங்க ச்சொல்லிப்புட்டேன் ஆமா, சரி.. அது இருக்கட்டும் அந்த கோபால வச்சி காமிடி கீமிடி ஏதாச்சும் பண்றிங்களா? ஆகா... கோபாலு உசாருய்யா உசாரு.

குணா.சி
சிங்கப்பூர்

meenachisundram said...

அண்ணா வணக்கம்..நானும் கணிணி மென்பொருள் துறையை சார்ந்தவன்...உங்கள் பெயர் பதிவுகள் உலகமும் தமிழும் உள்ள வரை மறையாது..வாழ்த்துக்கள்..எனக்கும் கணிணி பற்றிய பல விடயங்கள் தெரிய ஆவல்...உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.. meenachisundramp@gmail.com

meenachisundram said...

hi anna...this is meenachisundram..i really amazed to read ur all posts...everything is excellent..ur blog is my library.i am learning more from this..i have some doubts. can u help me to clear this..my email id : meenachisundram@gmail.com

give me ur id..i wil send my question to ur id.

Thanks and Regards
meenachi sundram

meenachisundram said...

பிகேபி முகம் தெரியாத உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.வாழ்த்துக்கள் நன்றிகள்..உங்கள் வலை தளத்திலிருந்து பல தகவல்கள் கற்றுக்கொண்டேன்..உங்களை வாழ்த்த எனக்கு தகுதியில்லை..நன்றிகள் பல...

மீனாட்சிசுந்தரம்

சே.வேங்கடசுப்ரமணியன். said...

சுஜாதாவின் ஏன் எப்படி எதற்கு மென்நூல் டவுன்லோடு ஆகவில்லையே அய்யா

விஷ்ணு. said...

வாரம் : ரொம்ப சிந்திக்க வைச்சுட்டீங்க!

rajakvk said...

Annea,

yeppo adutha post?

வெங்கடசிகாமணி said...

Dear PKP,
No updates after march ... Every day I am waiting for your new Update. Thank you

Leo said...

why no posts after this post??

தமிழ்நெஞ்சம் said...

விரைவில் உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம்.

The Innocent Devil said...

what happened to this blog(pkp.in).....????


why there are no updates now a days????

வீணாபோனவன் said...

Hi PKP,
Why there are no posting nowadays?.

-வீணாபோனவன்.

hema said...

என்ன அண்ணாச்சி , blogகுக்கு லீவு விட்டுட்டீங்களா?

kanagu said...

nalla kaelvi.. yen vaaram vandhudu endru.. aana pathil theriyalayeppaaaaaaaa........... :D

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

Arul said...

why no posts..

Prabhagar said...

பி.கே.பி,

மெலிதாய் ஒரு கோபம் என்னுள், என்ன பதிவே இல்லை என்று. ஏதேனும் பிரச்சனையா? எனவும் எண்ணம். கணிப்பொறியோடு தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் பழகிவரும் என் போன்றோருக்கும் பயனுள்ள விஷயங்களை தரும் உங்களின் பதிவுகள் இல்லாமல் அறிவு வறட்சி... வெல்கம் பி.கே.பி... வேண்டாம் இன்னொரு பிரிவு... கலக்குங்கள்...

பிரபாகர்...

Muhammad Ismail .H, PHD, said...

இதற்கு நான் போட்ட மீ த பர்ஸ்ட் எங்க போச்சு ? இது என்ன ஒரு பூடகமான பதிவாக உள்ளது !!!
விளக்கம் தேவை.

அபராஜிதன் said...

வாரத்திற்கு இந்து மதத்திலும் விளக்கம் உண்டு. பூமியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக நம்பப்பட்ட நவநாயகர்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியவற்றில், பருப்பொருட்களாந எழு கிரகங்களை (ராகு கேது தவிர்ந்த) வாரத்திலுள்ள எழு நாட்களாக கூறப்படுகின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்