கழிந்த முறை மிச்சிகனிலுள்ள இந்த குறும்நகரத்திற்கு வந்திருந்த போது திரும்புமிடமெல்லாம் நிறைய Desi-க்கள் இருந்தார்கள்.இன்றைக்கு நிலவரமே மாறியிருக்கின்றது. ரொம்ப சீரியசான புராஜெக்ட்களைத் தவிர மற்ற புராஜெக்ட்களையெல்லாம் கழட்டி விட்டிருக்கின்றார்கள். நம்மாட்களை காணோம்.நிறைய பழைய ஹான்டாக்களும் டொயோடோக்களும் விற்பனைக்கு வந்துள்ளன.பொருளாதார மந்தநிலை நிறுவன வருவாயை பாதித்திருக்கின்றதோ இல்லையோ சும்மாவாச்சும் ரிசசன் என்ற பெயரைச்சொல்லி தலைகளை கொய்யும் வேலையில் பல நிறுவனங்கள் ஆதாயம் தேடத்தொடங்கியுள்ளன. இதற்கிடையே தினசரி வேலை இழப்புகளை சுடச்சுட சொல்ல layoffdaily.com என தளங்கள் வேறு. என்பாடும் கோபால் பாடும் சீக்கிரத்தில் திண்டாட்டம் தான். பரியும் நேகாவும் ஹெல்த்கேரில் இருப்பதால் தற்போதைக்கு தப்பித்திருக்கின்றார்கள்.
வெற்றிகரமாக முதலாளித்துவத்தை மண்ணை கவ்வ வைத்த நிதி நிறுவனங்களில் எத்தனை இன்றைக்கு இருக்கும் சிக்கல்களையெல்லாம் தாண்டி தேறுமென தெரியவில்லை. புதிய படைப்புகளை படைத்து முதலாளித்துவத்திற்கு மரியாதை வாங்கி கொடுத்த மைக்ரொசாப்ட், ஆப்பிள்,கூகிள் போன்ற நிறுவனங்கள் கூட இந்த கலகத்தில் தள்ளாடுகின்றன. ஒரேயடியான சோசியலிசமும் அபாயம் தான் என்பார்கள். எனக்கென்னமோ நம்மூர் போல பிஃப்டி, பிஃப்டி பிடித்திருக்கின்றது.பங்குசந்தை விபரீத விளையாட்டில் விளையாடாமல் தேமேவென கொரித்து கொரித்து வங்கியில் சேமிப்புக்கணக்கில் போட்டு வைத்துள்ள பணத்துக்கூட பாதுகாப்பு இல்லையெனில் என் சொல்வது.
வீட்டில் குழாய் உடைந்து போனால் முதலில் தண்ணீரை அடைத்து விட்டு பின்பு பழுதுபார்ப்பார்கள் பிளம்பர்கள். இங்கேயோ பழுதுபார்ப்பதை விட்டு விட்டு டிரில்லியன் கணக்கில் டாலர்களை அச்சடித்துக் கொட்டுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.சீக்கிரத்தில் அது கழுத்து வரைக்கும் வீங்கிவிடும் போலிருக்கின்றது. போகின்ற போக்கில் நான் சொல்லிக் கொண்டே போகின்றேன். களமுனையில் இருப்பவனுக்குத்தான் தெரியும் அதன் மத்தள இடி.
90-களில் மெல்ல மெல்ல எட்டிப்பார்த்த பொருளாதார மந்தநிலை கணிணிப் புரட்சி வந்ததால் காணாமல் போயிற்றென்பார்கள். கணிணி மற்றும் இணையத்தால் இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. கோபால்கள் அங்கும் இங்கும் பறந்தார்கள். அது நம்மை கொஞ்சம் பிசியாக வைத்துக்கொண்டது. இன்றைக்கு உருவாகியிருக்கின்ற மந்த நிலையிலும் மக்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஏதாவதொரு இன்னொரு தொழில் நுட்பப்புரட்சி தேவைப்படுகின்றது. ஆமாம் இன்னொரு இன்னோவேசன் அவசரமாகத் தேவை.
ஜனங்களை சுறுசுறுவென வைத்துக்கொள்ள இப்படி எதாவது வராவிட்டால் அவனவன் அம்புகளை எடுத்துக்கொண்டு பின் சண்டைக்குத்தான் போவான்.உணவுச்சங்கிலி போட்டியில் சமச்சீர்நிலை அடைய மில்லியன் பேரைக் கொல்வான்.பின் சர்வச் சாதாரணமாக அதை மூன்றாம் உலகப்போர் என்பான்.
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..." "நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......." "உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..." |
சுஜாதா "ஏன்? எதற்கு? எப்படி?" தமிழ் மென்புத்தகம். Sujaatha "Yean Yetharku Yeppadi" in Tamil pdf ebook Download. Right click and Save.
Download
Download this post as PDF
15 comments:
Dear PKP
I am not able to open the pdf book it says may be corrupted.
நினைக்கவே பயமாக இருக்கிறது.
Who is GOPAL? Is it Your Deep Friend Or........?
Guna.c
Singapore
\\விபரீத விளையாட்டில் விளையாடாமல் தேமேவென கொரித்து கொரித்து வங்கியில் சேமிப்புக்கணக்கில் போட்டு வைத்துள்ள பணத்துக்கூட பாதுகாப்பு இல்லையெனில் என் சொல்வது
\\
நூற்றுக்கு நூறு இன்றை தேதியில் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை....
\\களமுனையில் இருப்பவனுக்குத்தான் தெரியும் அதன் மத்தள இடி\\
ஆம் உலகின் எல்லா நாட்டின் பொருளாதாரமும் தள்ளாடத் தொடங்கி விட்டதின் ஆரம்பத்தை காணமுடிகிறது...
\\ஆமாம் இன்னொரு இன்னோவேசன் அவசரமாகத் தேவை\\
கண்டிப்பாய் மிக அவசரமாய் அகிலம் அனைத்திற்கும் பயனுறுமாறு ஒரு இன்னோவேசன் இன்றியமையதது இப்போதைய உலகத்தின் தள்ளாடிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்திற்கு....
\\உணவுச்சங்கிலி போட்டியில் சமச்சீர்நிலை அடைய மில்லியன் பேரைக் கொல்வான்.பின் சர்வச் சாதாரணமாக அதை மூன்றாம் உலகப்போர் என்பான்\\
கண்கூடாய் காணமுடிகிறது எல்லா நட்டிலும் நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருப்பதை, தங்கத் அணிந்து கொண்டு சிலநாட்டில தைரியமாய் நடமாட முடியவில்லை சில நாட்டில் சிறு தூக்கம் கூட தூங்க முடியா நிலையை பத்திரிகைகளிள் படிக்க நேரும்போது வரும் நாட்களை நினைத்தாலே நடுக்கமாய் இருக்கிறது....
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
பின் சர்வச் சாதாரணமாக அதை மூன்றாம் உலகப்போர் என்பான்//
சர்வ சாதாரணமாக ஒரு யதார்த்தம்
// உணவுச்சங்கிலி போட்டியில் சமச்சீர்நிலை அடைய மில்லியன் பேரைக் கொல்வான்.பின் சர்வச் சாதாரணமாக அதை மூன்றாம் உலகப்போர் என்பான்.//
சரியாச்சொன்னீங்க.
Well Said , Sir
மிச்சிகனில் எந்த ஊர்?
தேவை புத்திசாலியான தலைவர்கள். போன நூற்றாண்டு தலைவர்களை எல்லா நாடுகளும் வைத்துக்கொண்டு இருக்கிறது. இதே போல் போனால் எல்லா நாடுகளிலும் சிவில் வார் என்பது ஆரம்பித்துவிடும். எனக்கென்னவோ மூன்றாம் உலக யுத்தத்தை விட இதற்கே அதிக சாத்தியம் இருப்பதாக தோன்றுகிறது. அதை மெய்ப்பிப்பது போல் CNN ல் கிளென் பெக் விவாதத்தில் அமரிக்காவில் சிவில் வாருக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார்கள்.
ம்.. நம் வருங்கால சந்ததியினரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.
மின்னூலுக்கு மிக்க நன்றி
Dear PKP,
Your words are absolutely true. We need innovation that is also from India.
Yours
Thangaselvarajan
Thanks for Sujatha's Book. Please do post more such book if possible.
Many Thanks.
நான் ரொம்ப நாளாக தேடிகொண்டிருந்த ஒரு புத்தகம்,உங்கள் மூலம் கிடைத்தில் மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
திரு P.K.P அவர்களே!
சுஜாதா அவர்களின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.
Mr.PKP, Im unable to download the PDF of Sujatha.. kindly help.. thnx in advance.. and, my best wishes fr ur journey in Internet world..
//எனக்கென்னமோ நம்மூர் போல பிஃப்டி, பிஃப்டி பிடித்திருக்கின்றது//
If you are living in India, then You say America is better and if you are living in US, you say India is better.. "இக்கரைக்கு அக்கரை பச்சை".
Post a Comment