உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, March 16, 2009

பாவம் கடவுள்

நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் பசங்க கலக்குகின்றார்கள் என அறியும் போது இன்னும் இரட்டிப்பு் சந்தோசம்.

ஒரு புத்தகக்கடைக்கு சென்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரே விஷ்யத்தை சொல்லிக்கொடுக்க மூன்று வேறு புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. இதில் எதை தெரிந்தெடுப்பது என நீங்கள் குழம்ப இணையமிருந்தால் பலரின் புத்தகவிமர்சனத்தையோ அல்லது ஸ்டார் ரேட்டிங்கையோ பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். கையடக்கமாயிருக்கும் பிளாக்பெர்ரியை தட்டித் தட்டி அந்த மூன்று புத்தகங்களைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வதற்குள் விடிந்து விடும். அதற்கு பதிலாக நீங்கள் அந்த புத்தகத்தை கையில் எடுத்ததுமே உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..

பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசை....பூம்....மீண்டும் உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை யூடியூபில் டிரயிலரை தேடி அந்த செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.டூ..மச்சாக இருக்கின்றதா?

கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம்.டைம் சோன் மாறி சால்ட்லேக் சிட்டியில் வந்திறங்கியிருக்கின்றீர்கள். ...பூம்...கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.

இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.

கேமராவெல்லாம் வேணாம். விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.
கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.

மேலே படங்களை பார்த்தாலே புரியும். ஒன்றும் புரியவில்லையா இந்த வீடியோவை ஓட விட்டுப்பாருங்கள். புரியலாம்.

http://www.youtube.com/watch?v=nZ-VjUKAsao

குஜராத்தில் BE-யும் மும்பை IIT யில் MDes -ம் முடித்து விட்டு மேற்கே பறந்த பிரனாவ் மிஸ்டிரி(Pranav Mistry) MIT யில் இப்போது செய்துவரும் இந்த புராஜெக்டின் பெயர் SixthSense.

அம்பதோ அறுவதோ வருடம் கழித்து மூச்சு நின்று சொர்க்கம் போனால் அங்கு இதெல்லாம் இருக்குமாப்பாவென கோபாலைக் கேட்டேன்.
”பாவம்டா கடவுள்” என்றான்.



நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.









ரமணிசந்திரன் "நாளை வரும் நிலவு" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Naalai Varum Nilavu Novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



20 comments:

Muthu Kumar N said...

\\ நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\\

அருமையான கருத்துகள் எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்று

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

செல்லி said...

amazing info! Thanks PKP for sharing

Krish said...

Simply Amazing! இதெல்லாம் எங்கேருந்து எப்படி புடிக்கீறீங்க?

Anonymous said...

Paavam Ramani Chandran

Anonymous said...

என்ன அண்ணா... இப்டி (பாவம் கடவுள்)சொல்லீட்டீங்க...

மனுசனோட மூளைய இவ்ளோ நுனுக்கமா படைச்சிருக்கான்.
அண்ட சராசரத்துள அம்புட்டு கோள்களையும் தொங்கவிற்றுக்கான்.
அப்பாவே இல்லாம இயேசு [ஈஸா-(அவர் மீது சாந்தி நிலவட்டுமாக)]-வை க்ளோனிங் முறைல 2000 வருசத்துக்கு முன்னால படைச்சிருக்கான்.

இதெல்லாம் அவனுக்கு ஜுஜூப்பி..

Anonymous said...

மறுபடியும் கோபாலா? கோபாலு கோபாலு !! கோபாலு !!! (சந்திரமுகி பாணியில்) நியாச்சும் சொல்லுப்பா யார் நீ? கோபம் உச்சிக்கு ஏறுவதுக்கு முன்னால் நீயாச்சும் சொல்லிடு. இல்லனா please pa சொல்லிடு மடி கணிணி வாங்கி தரன் சொல்லிடு.

குணா.சி
சிங்கப்பூர்

சிவா said...

மிக அருமையான பதிவு. எங்கிருந்தாலும் வாழ்க பிகேபி சார்.வளர்க உமது தமிழ் தொண்டு.

Anonymous said...

நீங்கள் செய்து வரும் சேவை அட்சர லட்சம் பெரும், திரு பி.கே.பி.
கடைசியில் பிரனவுக்கு கிடைத்த கைதட்டலை கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது!
நம் இந்தியர்கள் என பெருமை படப்போகும் காலம் வந்தே விட்டது!
ஜெய் ஹிந்த்!

பட்டாம்பூச்சி said...

அருமையான வலைமனை.
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

RC's Nalai Varum Nilavu pdf is failed to open. Can you fix it please.

Anonymous said...

WOW Super!!!!

Realy speachless....

தெய்வமகன் said...

நாங்களும் கொஞ்சம் பாவம்தான்

காரணம் ஆயிரம்™ said...

ப்பூ... இத நாங்க 'பட்டணத்தில் பூதம்' லையே பாதிருக்கொம்ல.. தமிழர்கள் கற்பனையில் எப்போதோ உதித்து விட்ட ஒரு விஷயம், 'தேவையின்'(necessasity) கருதி கண்டுபிடிப்பாக வந்திருக்கிறது..

கடையில் பொருட்களின் ரிவியூ, நிஜமாலுமே அருமையான கண்டுபிடிப்பு என்று உணர்த்தி பாராட்டதொன்றியது ..

அதேமாதிரி நினைத்தவுடனே எங்கிருந்தும் பதிவிடுகிற மாதிரி(Blogging) எதாவது கண்டுபிடித்தால் தேவலை... :))

இதுவும் அதுபோன்ற ஒரு தொழில்நுட்பம்தானா என்று யாராவது சொல்லுங்களேன்..

நன்றி பிகேபி..
ஐந்தாம் வருடத்திற்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
காரணம் ஆயிரம்

vijenth said...

ramani chandran book download panna mudiyala thalaiva?


c.saravanakumar
saudiarabia

Anonymous said...

My heartiest congratulations for completing 5 years.

Anonymous said...

நேற்றிரவுதான் இந்த வீடியோவை www.ted.comல் பார்த்தேன்.இ தெல்லாம் க டையில் விற்க எவ்வளவு நாளாகுமோ. அது மட்டுமில்ல, இதுக்கு தங்கு தடையற்ற இன்டர்நெட்தொடர்பும் வேண்டுமே.

Anonymous said...

Not able to download RC's Nalai Varum Nilavu(Access denied), can you fix the problem. Many Thanks. RS

குடுகுடுப்பை said...

தொடர்ந்து படித்து வருகிறேன். பாவம் கடவுள் சொர்க்கம் எனக்கு செய்தியோடு சிரிப்பையும் வரவழைத்தது.

satheeshkumar said...

உங்களின் வலை பக்கத்திற்கு நான் புதிது. மிகவும் பயனுள்ள வலை தளம். வாழ்த்துக்கள்

சதீஷ் குமார்

selvamani said...

nice one PKP .My hearty wishes

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்