உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, March 09, 2009

ஐந்து ஆண்டுகள்

மார்ச் ஒன்பது.
இன்றைக்கு நம் வலைப்பதிவை தொடங்கி சரியாக ஐந்து ஆண்டுகள் ஆயிற்று.எவ்வளவு விரைவாக நாட்கள் ஓடுகின்றன.அன்றைக்கு ஒரு சில அளவிலேயே இருந்த தமிழ் வலைப் பதிவுகள் இன்றைக்கு அநேகமாயிரம் வலைப் பதிவுகளாக தமிழில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்திய மொழிகள் வேறெதாவற்றில் இந்த அளவுக்கு புரட்சி இருக்கின்றதாவென தெரியவில்லை. உண்மையில் கணிணிபடித்த மேதாவிகள் பலரும் பிராந்திய மொழியில் கணிணியில் எழுதுவதையே தீண்டத்தகாது போல் பார்ப்பதுண்டு.அதையெல்லாம் தாண்டி தொழில் நுட்பத் தகவல்களை தமிழில் தந்த போது கிடைத்த வரவேற்பு எனக்கு ஆச்சரியமானது. தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த அளப்பறிய ஆதரவால் இன்றுவரைக்கும் அது நீடித்து வந்திருக்கின்றது. பின்னே 157 பின்னூட்டங்களை தளராமல் இட்டு உற்சாகப்படுத்திய இனிய தமிழ்நெஞ்சம் போன்றோரை என் சொல்வது. அவரும் www.tamilnenjam.org என தளம் தொடங்கி தொழில் நுட்பத்தகவல்களை தமிழில் வழங்கி விளாசிக் கொண்டிருக்கின்றார்.

கடந்த நான்காம் தியதி நமது வலைப்பதிவை RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2000-த்தை எட்டியது.இதில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142.நேரடியாக தளத்துக்கு வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 800-ஐ தாண்டும்.பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155. ஒரு நண்பர் எழுதியிருந்தார். "வணக்கம் ,உங்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன ,கடந்த வாரம் குமுதம் வாயிலாக உங்கள் தளம் பற்றி அறிந்து 4 நாட்களில் 50 பிலாக்குகள் வாசித்தேன். என் போன்ற வண்பொருள் வல்லுன்ர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகவும் மகிழ்ச்சி. நன்றிகளும் கூட.எனக்கு ஒரு ஆசை , நீஙகள் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு blog எழுதக்கூடாதா?" என்று. ஆங்கிலத்தில் ஆயிரம் தளங்கள் தொழில் நுட்பத்தகவல்களை வழங்க இருந்தாலும் தாய் மொழியில் நாலுவார்த்தை அதுபற்றி படிக்க ஆவலுடன் நிறைய நெஞ்சங்கள் இருக்கின்றன என புரிந்தது. ஆனாலும் கணிணி சில்லுகளைப் பற்றி எழுதுபவனெல்லாம் சுஜாதாவாகிடமுடியுமா என்ன? ஆயினும் நிஜத்திலேயே சில சுஜாதாக்கள் தமிழில் எழும்பினால் தமிழன் அறிவியலில் இன்னும் ஆர்வமாகி அவன் கடல் மூழ்கி கப்பல் கட்டுவான்,ஒளியை பீறிட்டுச்செல்லும் விமானம் கட்டுவான், விண்ணை அளக்கும் கணிணி கட்டுவான், ஈழத்துக்கு ஒரு பாலமமைப்பான்.

ந்த ஐந்தாவது ஆண்டில் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஃறிணைப் பொருட்களெல்லாம் சீக்கிரத்தில் உயிர் கொண்டு விடும் என்பது எனது எண்ணம். வீட்டிலிருக்கும் பொருட்களும் சரி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களும் சரி முன்னெப்போதும் இல்லாத அளவில் "ஸ்மார்ட்" ஆகிக்கொண்டே வருகின்றன. அதன் முக்கிய பங்களிப்பு இவையெல்லாம் எளிதாக இணையத்தில் இணைக்கப்படுதல் தான். இப்போதெல்லாம் வாகனத்தில் பொருத்தப்படும் மைரோப்ராசசர்கள் உங்கள் கார் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அதன் சர்வீஸ் சென்டருக்குசொல்லிக் கொண்டிருக்க வீட்டிலிருக்கும் "கேஸ்" சிலிண்டரோ அதில் கேஸ் தீர்ந்துகொண்டிருப்பதை அதன் நிறுவனத்துக்கு அலெர்ட் செய்திருக்கும் வாய்ப்புண்டு. இதெல்லாம் சாத்தியமாக கட்டற்ற இணைய இணைப்பு தேவை.அது வைமேக்ஸ்(WiMAX) வடிவில் சாத்தியமாகும் போல் தோன்றுகிறது.

WiFi என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது வீட்டில் அல்லது விமானநிலையத்தில் அல்லது காஃபிஷாப்பில் மட்டும் இஷ்டத்துக்கு இணைய இணைப்பை வழங்கும் இணைப்பு ஆனால் WiMAX-ஸோ நம்மூரின் மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வயர்லெஸ்ஸாய் வழங்க உதவ வந்திருக்கும் புதிய தொழில் நுட்பம். இது இன்னும் இதன் ஆரம்பகட்டங்களிலேயே உள்ளது. ஒரு நகரமுழுவதும் WiFi செய்யப்பட்டால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் வைமாக்ஸ். அதிகபட்சமாக 70Mbps வேகம்.ஒரு டவர் வைத்தாலே அதன் 20 கிலோமீட்டர்கள் சுற்றளவுக்கு அதிவேக இணைய இணைப்பு வயர்லெஸ்ஸாய் கிடைக்கும்.Worldwide Interoperability for Microwave Access என்பதை தான் WiMAX என்கிறார்கள். இதை 802.16 என்றும் சொல்வதுண்டு (MAN-Metropolitan Area Network).இது சீக்கிரத்திலேயே கேபிள் மற்றும் DSL இணைய சேவைகளை தூக்கி சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடும்.

சென்னையின் சந்துபொந்துகளையெல்லாம் பாவிக்கும் ஒரு WiMAX ரிலையன்சில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
மேலதிக தகவல்கள் இதோ
150 Kbps - Rs.750/- Per month
400 Kbps - Rs.999/- Per month
600 Kbps - Rs.1399/- Per Month
1000 Kbps - Rs.2199/- Per Month

Installation Charges - Rs.500/- Only
Security Deposit - NIL

For further details call at 9962 200 300
http://www.reliancewimax.in

Aircel-ல்லும் WiMAX சேவையை சென்னையிலும் கோயம்புத்தூரிலும் வழங்குவதாக கேள்வி.



வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.






சி.மகேந்திரன் "ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம்..." இங்கே தமிழில் மென் புத்தகமாக. C.Mahendran Oru Vannathupoochiyin Marana Saasanam in Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



33 comments:

Sundhar Raman Rajagopalan said...

Accidently I happen to read an article about your site in the weekly AnandaVikatan an year and half (or so) back. From that day, I visit your site every day at least once without a break.
Excellent informative site for a man of 70,like me, who have been running like hoarse with a goal: bringing up the children.
May God bless you with long,healthy and prosperous life.

KARTHIK said...

இப்போதான் நான்கவது ஆண்டு வாழ்த்து சொன்னமாதிரி இருக்கு அதுக்குல்ல ஐந்தாவது ஆண்டா !!!!

ஐந்தாம் ஆண்டுக்கும் வாழ்துக்கள்
தொடர்ந்து கலக்குங்க.

// அவரும் www.tamilnenjam.org என தளம் தொடங்கி தொழில் நுட்பத்தகவல்களை தமிழில் வழங்கி விளாசிக் கொண்டிருக்கின்றார்.//

தமிழ்நெஞ்சம் தல உங்களுக்கும் வாழ்துக்கள்.

Vadielan R said...

ஐந்து ஆண்டுகள் அல்ல அதையும் தாண்டி ஐம்பது ஆண்டு காலம் தொடர்ந்து எழுத வேண்டும் அவரும் அவரும் குடும்பமும் மேன்மேலும் வளர வேண்டுமேன்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

வாழ்த்த வயதில்லை எங்கள் குரு பிகேபி அவர்களுக்கு வணக்கங்கள் கோடி நமஸ்கராம்.

Anonymous said...

அண்ணன் பிகேபி வாழ்த்துகள் 5ஆண்டில் உங்கள் கலந்துறையாடல் தளம் போல இன்னோரு social community site ,blog post sms alert மற்றும் இணையவழி வலைபூ பயிற்ச்சி பட்டரை,மற்றும நாங்கள் எழுதிய தொழில் நுட்ப கட்டுரைகளை ஒரு தனிவலைபூ தொடங்கி உங்களின் மதிப்புரைகளையுடன் வெளி இட்டால் பல சுஜாதாக்காள் உருவாக ஒரு நல்ல வெளி மற்றும் வழி காட்டுதல் கிடைக்கும்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அண்ணே

Anonymous said...

I hope you and Our Blog (PKP.IN)live long, All The Best PKP.IN.

Guna.c
Singapore

Oh..... Forgot To Ask You, pkp.sir you not yet answer to me WHO IS GOPAL?

Anonymous said...

ஐந்தாவது ஆண்டில் கால்தடம் பதித்ததற்கு வாழ்த்துக்கள்.

தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

மதுரை பொறுக்கி said...

வாழ்த்துக்கள் பி கே பி சார். உங்களை போல் சமுதாயத்துக்கு தொண்டு செய்பவர்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள். நன்றி.

Muthu Kumar N said...

Dear PKP,
Its not so easy..to survive such a long time like you...great PKP.

Its so great to come until this level with good sprit and lot & lots of improvement.

I really wonder about your articles. You are first blogger i read everyday and read almost all article with the same interest from day one i started to saw your site.

I wish you all the best for your coming articls and good health and wealth also.

You are doing such a good job for computer peoples with lack of knowledge in English(Including me also..).

I really very happy about saw your blogg every new articles got good stuff and more meaningful for all of us.

I am really like your forum also...its amazing...

I would say i am really lucky to identify your blogg...

I am proud of i am one of your regular reader.....

Best wishes forever.
Muthu Kumar.N-Singapore

Anonymous said...

Best wishes

From

Divya
X std

Vellore

சசிகுமார் said...

best of luck sir i like ur writing. i am also write one blog named www.beslastbenchguys.blogspot.com . lot of files i am copying in ur site don't angry with me sir..bye sir...

வால்பையன் said...

ஐந்தாம் ஆண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

Tech Shankar said...

Congrats Dear Dude.

Anonymous said...

Congrats for your fifth year. I'm regular reader of your blog. Very informative blog. Keep going and reach great heights.

- Priya.

வீணாபோனவன் said...

வாழ்த்துக்கள் PKP

-வீணாபோனவன்.

ஆ.ஞானசேகரன் said...

ஐந்தாண்டு பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா! மேலும் உங்களின் பணி வழரவேண்டும் என்பது ஆசைகள்..

ஆ.ஞானசேகரன் said...

ஐந்தாண்டு பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா! மேலும் உங்களின் பணி வழரவேண்டும் என்பது ஆசைகள்..

செல்லி said...

பிகேபி
உங்க இந்தப் பணி மென்மேலும் மேன்மையுற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ramachandranusha(உஷா) said...

உங்கள் தொழில்நுட்ப பதிவுகள் என் புரிதலுக்கு மிக மேம்பட்டது என்றாலும், ஆர்வத்துடன்
தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் சத்தமில்லாத சாதனைக்கு வாழ்த்துக்கள்

Krishnan said...

வாழ்த்துக்கள் PKP !

சிவகுமார் சுப்புராமன் said...

"ஐந்து ஆண்டுகள்" என்ன இன்னும் நூறு ஆண்டுகள் இதுபோன்று எழுத வேண்டும். நாங்களும் உங்கள் தளத்தை படிக்க இன்னும் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் பிகேபி

Anonymous said...

Congrats PKP. Ur site is really interesting and useful.

இளைய கவி said...

தல வாழ்த்துக்கள் தல, உங்களை பாத்துதான் நான் பிளாக் எழுத வந்தேன் ஆனா இப்போ முடியல! நீங்க கன்டினியு பண்றத பாக்குறப்ப சந்தோசமாவும் பிரமிப்பாவும் இருக்கு தல‌

Venkat.S said...

dear pkp sir,

i used to read your site for only that quotes. I like it so much. I want to lots of imperational quotes in tamil. may i know which site can i get these kinds of quotes. It is really help to me... i will wait ur reply...

தியாகராஜன் said...

அள்ளக்குறையாத தகவல்களை அள்ளித்தரும் அண்ணன் பி.கே.பி அவர்கள் பலநூறு ஆண்டுகள் பதிவெழுதி தமிழ்கூறு நல்லுலகத்திற்கு உதவிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது தளத்திற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

பி.கே.பி ஐயா

நீங்க நல்லா இருக்கணும் ராசா




செ.சரவணக்குமார்
சவூதி அரேபியா

Thangavel Manickadevar said...

பிகேபி, ரிலையன்ஸ் வைமேக்ஸ் பற்றிய செய்திகள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
கீழே இருக்கும் லிங்கை படித்துப் பார்க்கவும்.
http://www.broadbandforum.co.in/reliance-wimax/503-relaince-wi-max-mumbai-cheats.html

தென்றல்sankar said...

my friend pkp!
congratulation continue u r service.
but i got little glum.why i got the little glum? iam is the last person to tell the felicitation about u r blog.nevermind any way you r the guru.
my statement
yesterday is the history!
tomorrow is the quiz!
today is the truth! yea bitter truth
but pkp blog become a history
mmmmmmmmmmm continue friend
once up on a time i should meet u.

Anonymous said...

வாழ்துக்கள் pkp sir..

i hope 5 become a 50...

karthikeyan.v.p
china

Subash said...

வாழ்த்துக்கள் சார்.
தொடர்ந்தும் உங்கள் பணி சிறக்கட்டும்.

தெய்வமகன் said...

உங்களை வாழ்த்த எனக்கு (கணிணி) அனுபவம் இல்லை.இருந்தாலும் உங்கள் முயற்சிகளினால் நாங்களும் பயன் அடைந்துள்ளோம் என்பதனை மறைக்க முடியாதபடியினால் என் வாழ்த்துக்களையும் இந்த ஐந்தாவது வருடத்தில் சேர்த்துக்கொள்ளும்படிக்கான சிறிய வேண்டுகோள்.

Kasi Arumugam said...

அன்புள்ள பிகேபி,

வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாகப் பயன்படுத்தும் உங்களை பாராட்டி மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்