உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, March 04, 2009

மவுனமாய் சாதனை

1Gbக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் ஹார்ட்டிரைவுகள் விற்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.நான் கூட இரு வருடங்களுக்கு முன்பு 500 Gb external ஹார்டிரைவ் ஒன்றை 200 டாலருக்கு வாங்கிய நியாபகம். நேற்றைக்கு 1.5Tbஹார்டிரைவ் 118 டாலருக்கு பார்த்தேன். மடமடவென விலை இறங்கியிருக்கின்றது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மேசை கணிணிகளின் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் இடத்தை ரொம்பவும் ஆக்கிரமிக்காத மடிக்கணிணிகளே இன்றைக்கு வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு கிடக்கின்றன.1.5Tb external செங்கற்கட்டியை மடிக்கணிணியின் USB போர்ட்டில் செருகிக்கொண்டு நகர்வதில் நம் "Mobility"-யே தொலைந்துவிடுகின்றது. அதிலிருக்கும் மூவி ஒன்றை பார்க்க வேண்டுமானால் ஒரு மூலையிலேயே ஒண்டி இருக்க வேண்டுமாக்கும். External ஹார்டிரைவை ஒரு மூலையிலே சாத்தி வைத்துக் கொண்டு நாம் நகர்ந்துகொண்டே அதிலிருக்கும் கோப்புகளை படிக்க வசதியுள்ளதா?

இரண்டு சாத்தியங்கள் உள்ளன.
ஒன்று உங்கள் external ஹார்டிரைவை வாங்கும் போதே அது NAS வசதி கொண்டதாய் இருப்பதாய் பார்த்துக் கொள்ளவேண்டும். விலை கொஞ்சம் அதிகம்.
இரண்டு புதிதாக வந்துள்ள Pogoplug.
http://www.pogoplug.com
இந்த வெள்ளை நிற டப்பாவின் ஒரு முனையில் USB போர்ட்டும் மறுமுனையில் நெட்வொர்க் போர்டும் இருக்க அதன் USB போர்டில் உங்கள் external ஹார்டிரைவை இணைத்துவிட்டு அந்த போகோபிளக்கை உங்கள் வீட்டு கம்பியில்லா நெட்வொர்க்கில் இணைத்தால் You are done. அந்த external ஹார்டிரைவை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாமாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்டிரைவுகளை கூட நீங்கள் அதனோடு இணைத்துக் கொள்ளலாம். விலை 79 டாலர். இது போன்ற ஒரு அற்புத பொட்டிக்காகத் தான் நான் காத்திருந்தேன்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஏன் இது மாதிரியான "obvious"-ஆன படைப்புகளை கூட ஐ.டியில் உச்சத்திலிருக்கும் நம்மால் உருவாக்க முடியவில்லை அல்லது உருவாக்காமல் இருக்கின்றோம். சூப்பர் கணிணிகளை செய்கின்றோம் என்கின்றார்கள். நமக்கு தெரிந்து எதாவது புதுமையான ஹார்டுவேர் நம்மூரிலிருந்து ஜனனமாகியிருக்கின்றதா? ஒருவேளை காசுள்ள நம் பெருசுகளுக்கு R&D ல் பணம் போட மனமில்லையோ? யாரோ வகுத்துச் சொன்னதை தானே நாம் "கோட்"களால் படைக்கின்றோம் புதிதாக எதாவது செய்தோமா?.Hotmail-யை உருவாக்கிய சபீர்பாட்டியாவும் கொஞ்சம் புகழ் கொண்ட நம் Tally-யையும் தவிர வேறு நினைவுக்கு வரவில்லை. அணுகுண்டால் எதிரியை அதிரவைத்தான் ஒரு தமிழன்.இன்னொருவனோ ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை அள்ளி வந்திருக்கின்றான்.இன்னொரு தமிழன் சந்திரனுக்கே உளவு அனுப்பினது நினைவிருக்கலாம். இப்படி நாம் அவரவர் துறையில் மவுனமாய் சாதித்தால் கையாலாகாதவன் கூட எதாவது காரியமாகப் பார்ப்பான் போலிருக்கின்றது.
(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ? I always do)


நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

ஆர்.அசோகன் "கடல் கடந்து கரையேறலாம்" ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா மென்புத்தகம் இங்கே தமிழில்.R.Ashokan "Kadal kadanthu karaiyeeralaam" exports business encyclopedia Tamil pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories13 comments:

Vadielan R said...

மிக சரியான கேள்வி R&D பணம் கொடுக்க ஆள் இல்லை. அதனால் எதுவும் கண்டுபிடிப்புகள் இல்லை. அப்படி கண்டுபிடித்தாலும் இந்த பாழாய்போன அரசியல்வாதிகள் மூலம் வெளியுலகுக்கு கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஆனால் அதை செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டும். இருப்பவன் கொடுத்து தன்னுடய கண்டுபிடிப்பை வெளியிடுவான் இல்லதாவன் கடைசி வரை வெளியிட முடியாது. இதற்கெல்லாம் ஒருநாள் முடிவுரை உண்டு.

ஆ! இதழ்கள் said...

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ? I always do//

என்னையும் தான் உணர்ச்சி வசப்படுத்தி விட்டீர்கள்.

MSV Muthu said...

ந‌ன்றி பிகேபி. நானும் இதையேதான் தேடிக்கொண்டிருந்தேன்.
//யாரோ வகுத்துச் சொன்னதை தானே நாம் "கோட்"களால் படைக்கின்றோம் புதிதாக எதாவது செய்தோமா?.
//
என்னுடைய‌ எண்ண‌மும் இதே தான்.

Muthu Kumar N said...

\\ஒருவேளை காசுள்ள நம் பெருசுகளுக்கு R&D ல் பணம் போட மனமில்லையோ?\\

சரியாக சொன்னீர்கள் நம்மூரில் Initiate என்பது குறைவே என்பதே பெரிய குறை...

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

திவாண்ணா said...

//கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஏன் இது மாதிரியான "obvious"-ஆன படைப்புகளை கூட ஐ.டியில் உச்சத்திலிருக்கும் நம்மால் உருவாக்க முடியவில்லை அல்லது உருவாக்காமல் இருக்கின்றோம்.//

ஆமாம் எனக்கும் இந்த தாபம் இருக்கு. மத்தவனுக்கு வேலை பாக்கத்தான் ரெடியா இருக்காங்களே தவிர ஒண்ணும் உருவாக்கறதில்லையே!

என்ன இந்த கருவி ரெண்டு வருஷத்துக்குள்ள obsolete ஆயிடும் அவ்ளோதான்!

Adiya said...

sounds interesting. But Apple Airport extreme solves this problem
by having a network router and harddsik with timecapusle.

Anonymous said...

Hi PKP,

Yesterday Apple released it's Airport Extreme ,which has a function when you have a mobileme account with apple,you can access your hard drive from anywhere.( ofcourse when it's conected to the internet )

Thanks
Senthil

யாத்ரீகன் said...

Niyaayamaana Kaelvi.. yenaku thonukindra badhil alladhu yepodhum thonum sindhanai idhaan..

வெற்றியைப்பெற சிறிது காலம் ஆகலாம், அதுவரை அவனை சுற்றி இருப்பவர்களோ குடும்பமோ அதுவரை நிலவும் சூழலை தோல்வி என வகைப்படுதுதலே அதிகம் நடக்கிறது.. அதுனலையே என்னவோ புதியதாய் எதிலும் இருங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாயிருப்பதாய் உணர்கிறேன் ...

Anonymous said...

மிக அருமையான கட்டுரை....

நாம் யோசிக்க வேண்டிய ஒன்று..

உங்கள் கட்டுரைகள் நன்றாக உள்ளது

Anonymous said...

tamil cinema making every single youth as a wate
tamil cinema heroes are not just down to earth
pls pls
mulichikongo
http://www.youtube.com/watch?v=cxg24js7bRg

Anonymous said...

பி.கே.பி ஐயா

சீக்கிரம் வந்து எழுத ஆரம்பிங்க
please

செ.சரவணக்குமார்

Praveenkumar said...

ஐயா, வணக்கம்.
தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
என்றென்றும் நன்றிகளுடன்.....!
பிரவின்

சண்முகம் said...

Hai this is shunmugam from Tuticorin(Tamil Nadu) I like to buy USB Hard Disk.But i dont know where to buy in Tamil Nadu ..pl send me the details in mail ..my mail id is mugamece@gmail.com


I am waiting for ur reply...

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்