ஆறு மாதத்துக்கு முன்னால் வரை காங்கிரஸ் இந்த தேர்தலில் முதலிடத்துக்கு வந்து விடும் என யாராவது சொல்லியிருந்தால் அது மிகப் பெரிய ஜோக்காக இருந்திருக்கும்.அந்த கால கட்டத்திலேயே வீட்டைவிட்டு புறப்பட்டு விட்டார் சோனியா.யாருக்கும் நம்பிக்கையே இல்லாதபோது அவருக்கு எங்கிருந்துதான் நம்பிக்கை வந்ததோ தெரியவில்லை.மீடியாக்கள் வேறு இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தது.சென்செக்ஸ் 6000 வரலாற்று உச்சத்தில்.பண மதிப்பு ஏறுமுகத்தில்.யாருக்கு நம்பிக்கைவரும்.காவிக்காரர்கள் அதீத நம்பிக்கையில்.350 வரை கிடைக்கும் என கருத்து கணிப்பு வேறு.சந்து பொந்தெல்லாம் ஏறி இறங்கி,தன் குழந்தைகளையும் இறக்கி விட்டு அயரா உழைப்பு,அசாத்திய நம்பிக்கை என தனியொருவராக நின்று வெற்றிக்கனியை பறித்து விட்டார்.(இங்கும் தமிழ் நாட்டில் சிலர் ஒடியாடி உழைத்தார்கள்,அதீத நம்பிக்கையுடன் மக்கள் மூடர் என எண்ணி).NRI-களையும் IT-மனிதர்களையும் விட்டால் வேறு யாருக்கும் இந்தியா ஒளிரவில்லை.இனயம் எல்லாம் அவர்கள் புலம்பிதள்ளுகிறார்கள் 100 கோடி இந்தியர்களும் முட்டாள்களாம்.ஆனால் ஓட்டு போட்டது என்னவோ சோனியா முழுசாய் நம்பியிருந்த ஏழை மக்கள் தான்.வாஜ்பாய் நம்பியிருந்த NRI-களோ,IT மனிதர்களோ இல்லை சினிமா ஸ்டார்களோ அல்ல.பிறந்ததுக்கும் வாழ்ந்ததுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரிடதில் வந்து,மக்களை முழுமயாய் புரிந்து சிம்மாசனத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.அந்த அசாத்திய நம்பிக்கையும் உழைப்பும் பாராட்டுகுரியது.இனிமேலும் நகரம்,தொழில்நுட்பம் என்று மட்டுமில்லாமல் கிராமம்,விவசாயம் இதுவும் கவனிக்கப்படும் என நம்புகிறார்கள்.பெண் ஆட்சி என்றாலே பயமாய் இருக்கிறது(சந்திரிகாவை சொன்னேன்).நல்லதாகவே நடக்கும் என நம்புவோம்
Download this post as PDF
No comments:
Post a Comment