மதமாற்றத் தடைச் சட்டம் வாபஸ் ; எச் முத்திரை வாபஸ் ; இலவச மின்சாரம் தொடரும் ; அரசு ஊழியர்கள், பத்திரிகைகள் மீதான வழக்குகள் வாபஸ் : முதல்வர் ஜெ.,திடீர் அறிவிப்பு
சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தினை திரும்பப் பெற்றும், ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை குத்துவதை திரும்பப் பெற்றும், போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளும், இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களைப் போராடத் துõண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது போடப்பட்ட டெஸ்மா வழக்கினையும் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிமுக., விற்கு ஏற்பட்ட படுதோல்விøயையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது
-Dinamalar
அடடா செஞ்ச சாதனையெல்லாம் ஒரே நாள்ல Withdraw பண்ணிட்டாங்களே.
வாழுக சனனாயகம்.
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) அம்மா திருந்திட்டாங்கய்யா அம்மா திருந்திட்டாங்கையா
Download this post as PDF
No comments:
Post a Comment