இந்த வருடம் பெப்ரவரி வாக்கில் ஒரு அமெரிக்கர் பெங்களூர் வருவதாக இருந்தது.இந்தியாவை பற்றி விவரம் தெரிந்தவர்களிடமிருந்து சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நினைத்த அவர் தன் வலைப்பூவில் இந்தியாவை பற்றிய பயண அறிவுரைகள் யாராவது கொடுக்க முடிந்தால் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.ஒரு அமெரிக்கர் பதில் எழுதினார் "தவறாமல் ஒரு அணுகுண்டு எடுத்து செல்லவும்.பெங்களூர் டிரிப் முடிந்து திரும்பும் போது அதை போட்டுவிட்டு வரவும்.அமெரிக்கர் வேலைகளையெல்லாம் பெங்களூர்காரர்கள் திருடிவிட்டார்கள்".-நல்ல அறிவுரை என்று அந்த அமெரிக்கர் நொந்துபோய் இருந்த போது சில நாட்கள் கழித்து இன்னொரு இந்தியர் அதற்கு பதில் எழுதி இருந்தார் -"அப்படியே ஒரு குண்டை சியாட்டிலிலும் போட்டுவிடுங்கள்.அவர்கள் எங்கள் திறமைமிக்க எஞ்சினியர்களையெல்லாம் அபகரித்து வைத்திருக்கிறார்கள்".
-அடப்பாவி அடப்பாவி அட்ப்பாவிகளா...... இங்க ஏற்கனவே பாபுகாரயும்,எஸ் எம் சாரயும் குண்டுபோட்டு வீட்டுக்கு அனுப்பியாச்சு.அங்க சார்ஜ் புஷ்ஷயும்.......கொஞ்சம் செப்டம்பர் வர வெய்ட் பண்ணுங்க.ப்ளீஸ்....
வகை:நகைச்சுவை
Download this post as PDF







No comments:
Post a Comment